"மாப்பிள்ளை கருணாநிதி எங்கே....?" - திருமண நாளில் நடந்த சுவாரஸ்யம்

கருணாநிதி தயாளு அம்மாளை 1948-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி மணந்தார். திருவாரூரில் நடைபெற்ற அவர்களது திருமணத்தன்று சுவாரசியமான சம்...

கருணாநிதி தயாளு அம்மாளை 1948-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி மணந்தார். திருவாரூரில் நடைபெற்ற அவர்களது திருமணத்தன்று சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.

திருமண நாளன்று கருணாநிதி, பந்தல் முகப்பில் நின்றுகொண்டு விழாவுக்கு வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். அப்போது, இந்தியை எதிர்த்து கோஷம் போட்டுக்கொண்டு சிலர் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர்.

மேலும், அவர்கள் மறியலில் ஈடுபடவும் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், ‘இந்தி ஒழிக’ என்று கோஷம் எழுப்பியவாறு சென்று கொண்டிருந்தவர்களைப் பார்த்த கருணாநிதி திருமணத்தையும் மறந்துவிட்டு அவர்களுடன் சேர்ந்து சென்றார். இந்நிலையில், மாப்பிள்ளை எங்கே? என்று அனைவரும் தேடியுள்ளனர்.

அவர்களில் சிலர் கருணாநிதியை தேடி ஊர் முழுவதும் அலைந்து திரிந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த பள்ளி எதிரில் சிலர் இந்தியை எதிர்த்து கோஷம் போட்டுக் கொண்டிருந்தது   தெரியவந்தது. அவர்களில், கருணாநிதியும் ஒருவர்.

இதையடுத்து, கருணாநிதியிடம் சென்று முகூர்த்த நேரம் நெருங்குவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அந்த மறியல் போராட்டம் முடிந்த பின்பே மணமேடைக்கு வருவேன் என்று கருணாநிதி கூறியுள்ளார். அதன்படி, மறியல் முடிந்த பிறகே கருணாநிதி மணமேடைக்கு சென்றார். பின்னர், தயாளு அம்மாளை மணந்தார்.

மேலும் பல...

0 comments

Blog Archive