அனுபவம்
நிகழ்வுகள்
சிறுவயதிலே கண்ணாடி ஏன் போடுறாங்க தெரியுமா...? அதுக்கு காரணமே நீங்கதான்
August 08, 2018
இன்றைய நகர வாழ்க்கையில் சொற்பமான சதுர அடிகளில் குழந்தைகளை வளர்க்க வேண்டுமென்பது பெற்றோர்களுக்கு பெரும் சுமையான விஷயம். வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும் கொஞ்ச நேரம் அவர்களோடு விளையாடிவிட்டு பின் வீட்டு வேலை செய்யத் தொடங்கியதும் குழந்தைகள் தொல்லை பண்ணாமல் இருக்கையில் போனை கொடுத்து ரைம்ஸ் பார்க்க வைத்துவிட்டு வேலைப்பார்க்க சென்று விடுவோம்.
நம்முடைய நேரமின்மைக்காக குழந்தையின் கண் பார்வை குறைபாட்டுக்கு நாமே காரணமாகி விடுகிறோம். இன்றைய காலத்தில் நம் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே கிட்டப்பார்வை பிரச்சனை வரத் தொடங்குகிறது. இந்தியாவில் பெரும்பாலான 1ம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட கண்ணாடி அணிவதை பார்க்கலாம். இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளிலும் உள்ள குழந்தைகள் இந்த பிரச்சனையில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒரு கண்ணில் தெளிவான பிம்பம் உருவாக வேண்டுமானால் நம் விழித்திரை சரியாக குவிக்கப்பட வேண்டும். இந்த செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் கண் பார்வை குறைபாட்டுக்கு காரணமாகிறது
கிட்டப்பார்வை என்பது அருகில் உள்ள பொருட்கள் மட்டும் தெளிவாக தெரியும் தூரத்தில் உள்ள பொருட்களோ எழுத்தோ மங்கலாக தெரியும். இந்த கிட்டப்பார்வைக்கு காரணமே குழந்தைகள் வெளியில் விளையாடப் போகாமல் வீட்டிற்குள்ளே இருந்து செல்போன், டேப் அல்லது வீடியோ கேம் என்று தொடர்ச்சியாக விளையாடுவதால் கண்பார்வை குறைபாடு சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு உண்டாகிவிடுகிறது.
இதற்கான தீர்வாக பல நாடுகளும் தற்போது குழந்தைகள் வெளியில் விளையாடுவதை ஊக்குவித்து வருகின்றன. அவர்கள் விளையாடுவதற்கு ஏற்ற பூங்காக்கள் பலவும் அமைத்து வீடியோ கேம், செல்போன் மோகத்திலிருந்து மீட்டெடுப்பதால் அரசும் சமூகம் இணைத்து செயல்படத் தொடங்கியுள்ளது.
வெளியில் விளையாடும் போது தன் வயதுடைய பிள்ளைகளை பார்க்கும்போது நன்றாக விளையாடி பசியெடுத்து சாப்பிடுவார்கள். குழந்தைக்கு பேச்சும் சீக்கிரமே வந்துவிடும். சுற்றுப்புறம் குறித்த புரிதலை பெற்றோரான நீங்கள்தான் உருவாக்கவேண்டும்.

0 comments