ஸ்டாலினுக்கு வந்த போன் கால்! கவலையடைந்த அழகிரி: மெரினாவில் கருணாதிக்கு இடம் கிடைத்ததன் பின்னணி?

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அதற்கான வேலைகள் தற்போது பரபரப்பாக சென்று கொண்...

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அதற்கான வேலைகள் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கிடைத்ததன் பின்னணி என்ன என்பது குறித்து பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், மெரினாவில் இடம் ஒதுக்குவது குறித்து முதல்வர் பழனிச்சாமியிடம் பேசினால் அவர் மறுப்பு தெரிவிக்கமாட்டார் என்ற நம்பிக்கையில் தான், ஸ்டாலின் அவரை முதலில் சந்தித்தார்.

ஆனால், நேற்று முன்தினம் மயிலாப்பூரில் நடந்த காவல் அதிகாரிகள் கூட்டத்தில், கருணாநிதிக்கு காமராஜர் நினைவிடம் அருகில் அடக்கம் செய்யப்படுவதற்கே வாய்ப்பு அதிகம் என்ற தகவல் திமுக தரப்பினருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மூத்த நிர்வாகிகளை அனுப்பி கருணாநிதி உடல்நிலை தொடர்பாகவும் சமாதிக்கான இடம் கேட்டும் மனு கொடுக்க வைத்தார் ஸ்டாலின்.

அப்போதும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து உறுதியான பதில் வரவில்லை.

நேற்று மதியம் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எனக் குடும்ப உறவுகள் அனைவரும் ஒன்றாக இணைந்து எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கச் சென்றனர்.

குடும்பமாகச் சென்று சந்தித்ததால், எடப்பாடி உரிய முடிவெடுப்பார் என்று நம்பிக்கையில் சென்றும், அடுத்த சில மணி நேரங்களில் சமாதிக்கு அனுமதி மறுப்பு தொடர்பாக தலைமைச் செயலாளர் அறிக்கை ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல், ஸ்டாலினுக்கு போன் மூலம் கிடைத்துள்ளது.

இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டாலின் உடனடியாக பழனிச்சாமியை தொடர்பு கொண்டு பேசிய போது, அவர் இது முழுக்க மத்திய அரசின் முடிவு, நாங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

அதன் பின்பு தான் கனிமொழி டெல்லியில் தர்மேந்திரா பிரதான் உட்பட முக்கிய அமைச்சர்கள் பலரையும் தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளார்.

அவர்களும் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையில் கடுமையான முதுகு வலியில் இருக்கும் அழகிரியால் இறுதி அஞ்சலி நிகழ்வில் அவரால் தொடர்ந்து நிற்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

குடும்பத்தோடு நேரடியாக முதல்வரை சந்திக்கச் சென்றும் அனுமதி மறுக்கப்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

குடும்பத்தோடு பார்க்கச் சென்றும் இவர் இப்படிச் செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவுதான் மரியாதையா என்று வேதனையடைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி அதிமுக நிர்வாகிகள் பலரும் பழனிச்சாமியிடம் பல யோசனைகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதாவது எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கடவுள் ஆதரவுக் கொள்கையை உடையவர்களாக இருந்தார்கள்.

அண்ணாதுரை, தீவிர கடவுள் மறுப்பாளர். அதே இடத்தில் கருணாநிதிக்கு இடம் கொடுத்தால், கடவுள் மறுப்புக் கொள்கைக்கான முக்கியச் சின்னமாக இந்த இடம் மாறிவிடும்.

இதனால் அனுமதி கொடுப்பது சரியானதல்ல. அதுமட்டுமின்றி ஜெயலலிதா திமுக-வை எதிர்த்தே பெரிய ஆளாக மாறினார் என்று கூறியுள்ளனர்.

ஆனால் இறுதியில் நீதிமன்றம் திமுக-விற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளதால், இது எடப்பாடி அரசுக்கு ஒரு அவமானம் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி கருணாநிதி உடலை முன்வைத்து நடந்த அரசியல் கணக்குகளால் திமுக-வினர் கடும் கொந்தளிப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பல...

0 comments

Blog Archive