கூத்தடிச்சது போதும்! நல்லப்படங்களை நோக்கி தமிழ்சினிமா!

‘கடைக்குட்டி சிங்கம்’ கமர்ஷியல் படம்தான். ஆனால் கலெக்ஷன் ஃபுல் என்று சந்தோஷ ஏப்பம் விடுகிறார்கள் விநியோகஸ்தர்கள். ஆனால் கமர்ஷியலாக படம் எடு...

‘கடைக்குட்டி சிங்கம்’ கமர்ஷியல் படம்தான். ஆனால் கலெக்ஷன் ஃபுல் என்று சந்தோஷ ஏப்பம் விடுகிறார்கள் விநியோகஸ்தர்கள். ஆனால் கமர்ஷியலாக படம் எடுக்குறேன் பேர்வழி என்று ஒரு யானையை ஒரு விரலால் தூக்கி அடித்துவிட்டு, பக்கத்திலிருக்கிற பனை மரத்தையும் பிடுங்கிப் போடுகிற கொடுமைக்கெல்லாம் விடை கொடுக்க வருகிறார்கள் நல்ல பட இயக்குனர்கள்.

முதலில் ராதாமோகன். அழகிய தீயே, அபியும் நானும், மொழி, பயணம், என்று அவர் இயக்கிய படங்களெல்லாம் ஆபாசமோ, அதிர வைக்கும் பைட்டோ, சுளிக்க வைக்கும் காமெடியோ இல்லாத படங்கள்தான். ஆனால் கலெக்ஷன் ஏரியாவின் செல்லப்பிள்ளையாக இருந்த கதையை நாடறியும். அவரே மீண்டும் புத்துணர்ச்சியோடு இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். இரண்டுமே ஆகஸ்ட், செப்டம்பர் என்று அடுத்தடுத்து ரிலீஸ். 60 வயது. மாநிறம் என்ற படத்தை ராதாமோகன் இயக்க, பிரகாஷ் ராஜ், வசனம் விஜி என்று அவருக்கு ராசியான செட் பேக்கேஜுடன் திரைக்கு வருகிறது. தயாரிப்பு தாணு என்கிற பிரமாண்ட தயாரிப்பாளர்.

ஷியூர் ஹிட் வரிசையில் இப்பவே இப்படத்தை நோக்கி வரும் வேளையில் அடுத்து ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்தோடு வருகிறார் அதே ராதாமோகன். அந்தப்படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.

இவர் இப்படி என்றால், நல்ல படங்களை மட்டுமே இயக்குவேன். அதுவும் ஜனரஞ்சமாக இருக்கும் என்று சவால் விட்டு ஜெயிக்கும் இயக்குனர் ராம், மீண்டும் அழியாக் காவியத்துடன் வரப்போகிறார். படத்தின் பெயர் பேரன்பு.

விமர்சகர்களால் அவ்ளோ தூரம் அசிங்கப்பட்ட சந்தோஷ் பி.ஜெயக்குமாரே, கஜினிகாந்த் என்று நல்லபிள்ளையாக மாறிவிட்ட பின், தமிழ்சினிமாவுக்கு இனி என்ன குறை?

வாங்க வாங்க நல்லவங்களே…

மேலும் பல...

0 comments

Blog Archive