கருணாநிதியிடம் கைவரிசையைக் காட்டிய சிம்பு... கன்னத்தில் பளார் என அடிவாங்கிய தருணம்

திமுக தலைவர் கருணாநிதியிடம் தான் அறை வாங்கிய விவகாரத்தை நடிகர் சிம்பு வெளிப்படையாக தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமன...

திமுக தலைவர் கருணாநிதியிடம் தான் அறை வாங்கிய விவகாரத்தை நடிகர் சிம்பு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை மரணமடைந்தார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு பிரபல வார இதழ் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறுகையில், கலைஞர் கருணாநிதி தாத்தாவுடன் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. ஒரு வேலையை சரியாக செய்ய முடியவில்லை எனில் அவரிடம் தான் சந்தேகம் கேட்பேன்.

ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்த போது அவரின் பேனாவை திருடி வைத்துக் கொண்டேன். வல்லவன் படம் நான் இயக்கிக் கொண்டிருந்த போது அந்த படத்தை தனக்கு போட்டு காட்டுமாறு கலைஞர் என்னிடம் கூறியிருந்தார்.

ஆனால், சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. அதன்பின், அவரின் குடும்ப விழா ஒன்றுக்கு நான் சென்றிருந்தேன். அப்போது, என்னைக் கண்டதும் பளார் என ஒரு அறை விட்டார்.

எனக்கு ஏன் வல்லவன் படத்தை போட்டுக்காட்டவில்லை. அடுத்த படத்தை காட்டவில்லை எனில் இன்னொரு கன்னத்திலும் அறை விழும்” என உரிமையாக கோபித்துக் கொண்டார்” என சிம்பு கருணாநிதியுடனான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

மேலும் பல...

0 comments

Blog Archive