சிவபெருமானின் தாண்டவத்திற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யங்களும், ரகசியங்களும் என்ன தெரியுமா?

இந்து மதத்தின் முக்கியமான கடவுள் என்றால் அது சிவபெருமான்தான். சிவபெருமான் யோக நிலை மற்றும் தாண்டவ நிலை என இரண்டு நிலையில் காணப்படுகிறார். இ...

இந்து மதத்தின் முக்கியமான கடவுள் என்றால் அது சிவபெருமான்தான். சிவபெருமான் யோக நிலை மற்றும் தாண்டவ நிலை என இரண்டு நிலையில் காணப்படுகிறார். இதில் யோக நிலை பொருள் இல்லாத நிலை என்றும் தாண்டவ அல்லது லாஸ்ய நிலை பொருள் சார்ந்த நிலை என்று அழைக்கப்படுகிறது.

குறிப்பிட்ட நிகழ்வை சித்தரிக்க நிகழ்த்தப்படும் உடல் அசைவுகள்தான் நடனம் ஆகும். இதற்கு கடவுளாக இருப்பது சிவபெருமானின் அவதாரமான நடராஜர் ஆவார். இந்த உலகம்தான் சிவபெருமான் ஆடும் மைதானம் ஆகும். நடராஜர் நடன கலைஞர் மட்டுமல்ல இந்த உலகின் பார்வையாளராகவும் இருக்கிறர். சிவ தாண்டவம் பற்றி உங்களுக்கு தெரியாத ரகசியங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிவனின் நடனம்

சிவபெருமான் தான் முன்னரே ஆடிய உத்த நடனத்தை மாமுனிவர் பரதரிடம் ஆடி காட்ட விரும்பினார். அதற்காக தன்னுடைய தலைமை பணியாள் தண்டுவை கூப்பிட்டார். மேலும் பார்வதி தேவியை லாஸ்ய நடனம் ஆட வைத்தார். லாஸ்ய நடனம் என்பது பெண்களால் மட்டும் ஆடக்கூடிய நடனமாகும்.

தாண்டவம்

தண்டு ஆடிய நடனம் தாண்டவம் என்பதை உணர்ந்த பரத முனிவர் அந்த நடனத்தை மனித குலத்திற்கு கற்றுக்கொடுக்க விரும்பினார். இந்த நடனத்தில் இருக்கும் ஒவ்வொரு அசைவின் உயிரணுக்களிலும் சிவபெருமானின் ஆதிக்கம் இருக்கும். இதுதான் சிவதாண்டவம் என்று அழைக்கப்படுகிறது.

முத்ராக்கள்

தாண்டவ நிருத்யா என்பது ஆண்களால் நிகழ்த்தப்படும் மற்றும் முத்ராக்களைக் கொண்ட ஒரு நடனம். உதாரணமாக, கட்டைவிரலின் நுனி ஆள்காட்டி விரலைத் தொடும்போது தியன்முத்ரா செய்யப்படுகிறது.இதன்மூலம் வியாழன் மற்றும் சுக்கிர மேடுகள் இணைகிறது, இதன் அர்த்தம் ஆணும், பெண்ணும் இணைவதாகும்.

தாண்டவ நிருத்யா வகைகள்

மொத்தம் ஏழு வகையான தாண்டவ நிருத்யாக்கள் உள்ளது. அவை ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், கலிக தாண்டவம், திரிபுர தாண்டவம், கௌரி தாண்டவம், சன்ஹார தாண்டவம் மற்றும் உமா தாண்டவம் ஆகும்.

தாண்டவத்தின் முக்கியத்துவம்

இந்த ஏழு தாண்டவங்களில் பிரதோஷ நடனமானது சந்தியா தாண்டவமாக விவரிக்கப்படுகிறது. இது அந்தி பொழுதில் மூவுலகின் படைப்பாளியான கௌரிக்கு விலைமதிப்பற்ற கற்களால் ஆன மகுடத்தை கொடுக்கும்போது ஆடிய நடனமாகும்.

சிவன் எப்போது நடனம் ஆடுவார்?

சிவபெருமான் நடனமாடும் போது சொர்க்கத்தில் இருக்கும் அனைவரும் அதனால் ஈர்க்கப்படுகின்றனர். சரஸ்வதி தேவி வீணை வாசிக்க, இந்திரன் புல்லாங்குழல் ஊத, பிரம்மா தாளமிட, லக்ஷ்மி தேவி பாட, விஷ்ணு மிருதங்கம் வாசிக்க அனைத்து கடவுள்களும் இந்த காட்சியை பார்ப்பார்கள்.

அச்சத்தின் வெளிப்பாடு

இந்த ஏழு தாண்டவத்தில் கௌரிதாண்டவமும், உமாதாண்டவமும் அச்சமுள்ள தாண்டவமாக கூறப்படுகிறது. இந்த் தாண்டவத்தின் போது சிவபெருமான் காலபைரவர் உருவத்தை எடுத்து கொள்வார் இவருடன் கௌரியும், உமாவும் இருப்பார்கள். இந்த நடனத்தை சடலங்கள் எரியும்போது சிவபெருமான் ஆடுகிறார்.

சாத்விக நடனம்

நடராஜரின் சாத்விக நடனங்களில் சந்தியா தாண்டவத்தையும் சேர்த்து நாதாந்த நடனம் மிகவும் புகழ்பெற்றதாகும். உலகப்புகழ் வாய்ந்த நடராஜர் சிலை இந்த தோரணையில்தான் இருக்கிறது.

மேலும் பல...

0 comments

Blog Archive