ரஜினி-முருகதாஸ்... விஜய்-இரஞ்சித்! மாறிய கூட்டணி பின்னணி
June 14, 2018ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னரே அடுத்த படத்துக்கான கதையைக் கேட்பது ரஜினியின் வழக்கம். ஒரே ஒரு இயக்குநர் என்றில்லாமல் ஜூனியர், சீன...
ஆம், `கபாலி’ படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நிலையில் இதேபோல் பல இயக்குநர்களிடம் கதை கேட்டார் ரஜினி. அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இருவர் ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன். இவர்கள் இருவர் சொன்ன கதைகளும் ரஜினிக்குப் பிடித்திருந்தன. அதில் வெற்றிமாறன் சொன்ன கதையைக் கேட்டு முடித்ததும், `இது பேங்க்ல போட்ட டெபாசிட் மாதிரி. எப்ப வேணும்னாலும் இந்தக் கதையில் நடிக்கலாம். எப்ப நடிச்சாலும் இந்தப் படம் ஹிட்’ என்று கூறி வெற்றியைக் காத்திருக்கச் சொன்னார் ரஜினி. இதேபோல முருகதாஸ் சொன்ன கதையைக் கேட்டதும், அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்ட ரஜினி, `இதுதான் என் அடுத்த படம். டெஃபனேட்டா இதுல நாம சேர்ந்து வொர்க் பண்றோம்' என்று நெகிழ்ச்சியோடு சொல்லியிருக்கிறார். அது ஆக்ஷன் கலந்த அரசியல் கதை. அதை முருகதாஸ் ரஜினிக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கியிருந்தார்.
இதற்கிடையில் `கபாலி’ படம் வெளியானது. தயாரிப்பாளர் தாணுவின் ப்ரமோஷன், ரஜினியின் வித்தியாச நடிப்பு... என்று `கபாலி’ மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அந்தச் சமயத்தில்தான் ஒரு பிரபல தயாரிப்பாளர் விஜயைச் சந்தித்து, `இரஞ்சித் டைரக்ஷன்ல நடிக்க உங்களுக்கு விருப்பமா தம்பி’ என்று கேட்டார். `நான் `கபாலி' பார்த்தேண்ணே. எனக்குப் படம் ரொம்பப் பிடிச்சது. இரஞ்சித்கிட்ட எனக்குத் தகுந்த மாதிரி கதையை ரெடி பண்ணச்சொல்லுங்க. நான் நிச்சயம் நடிக்கிறேன்' என்று விஜய் சம்மதித்திருக்கிறார். இரஞ்சித்தும் விஜய்க்கான ஸ்கிரிப்ட் தயாரிப்புப் பணியைத் தொடங்கினார்.
இந்தநிலையில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கத் தயாராகிவந்தார் ரஜினி. ஆனால், அப்போது முருகதாஸ், மகேஷ்பாபு நடிக்கும் `ஸ்பைடர்’ படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். `ஸ்பைடர்’ படத்தை முடிக்க எப்படியும் ஒரு வருடம் ஆகிவிடும் என்ற சூழல். அந்தச் சமயத்தில்தான், `வர்த்தகம், விமர்சனம் என்கிற இரண்டு வகையிலும் நற்பெயரைப் பெற்றுத்தந்த `கபாலி’ இயக்குநர் இரஞ்சித்துக்கே மீண்டும் படம் தந்தால் என்ன’ என்று ரஜினி யோசிக்க ஆரம்பித்தார். அதுவே சரியென்றும் அவருக்குத் தோன்றியது.
இன்னொருபக்கம் விஜய்க்கான கதை தயாரிப்பில் இருந்தார் இரஞ்சித். இந்தச் சமயத்தில் ரஜினியிடமிருந்து வந்த மறு அழைப்பு இரஞ்சித்துக்கே இன்ப அதிர்ச்சி. ஏனெனில், `கபாலி' கடைசிக்கட்ட படப்பிடிப்பில் இருந்தபோது இரஞ்சித்திடம் ரஜினி, `முருகதாஸ் சொன்னது ஃபென்டாஸ்டிக் ஸ்டோரி. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அடுத்ததா நான் அந்தப் படம்தான் பண்றேன்' என்று சொல்லி மகிழ்ந்தாராம். `அந்தக் கதையைப் அப்படிப் பாராட்டியவர் மீண்டும் ஏன் தனக்கே அடுத்த பட வாய்ப்பை வழங்க வேண்டும்’ என்று இரஞ்சித்துக்கு இன்ப அதிர்ச்சி. அதன்பின் மகள் செளந்தர்யா மூலம் இரஞ்சித் போயஸ்கார்டன் அழைக்கப்பட்டார். இரஞ்சித், ரஜினி, தனுஷ் மூவரும் ஆலோசனை செய்தனர். `காலா' அறிவிக்கப்பட்டது.
அதுசரி ரஜினிக்கு ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அந்தக் கதை என்னாயிற்று என்று கேட்கிறீர்களா? அதில்தான் தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க உருவாகிக்கொண்டிருக்கும் படத்தின் கதை, ரஜினிக்காக உருவாக்கப்பட்டதுதான். தலைவர் ஓ.கே பண்ணின கதையில் தளபதி. ஆக்ஷன், அரசியல் என்று அடி பின்னுமாம்.
புதிய நாகினி படைத்த பிரமாண்ட சாதனை, பழைய நாகினி ரசிகர்களுக்கு பதிலடி
June 14, 2018நாகினி சீரியல் இந்தியா முழுவதும் செம்ம பிரபலம். இதில் நாகினியாக நடித்த மௌனி ராய்க்கு செம்ம ரசிகர்கள் வட்டம் உள்ளது. நாகினி இதுவரை இரண்டு ...
நாகினி இதுவரை இரண்டு பாகங்கள் வந்துள்ளது, இதில் மூன்றாவது பாகத்தில் ஏக்தா கபூர் என்பவரை நாகினியாக கமிட் செய்தனர்.
இதற்கு மௌனி ராய் ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க, கடந்த வாரம் நாகினி-3 தொடங்கியது, இந்த சீரியலை ஒரு வாரத்தில் ஒரு கோடி பேர் பார்த்துள்ளார்களாம்.
இதன் மூலம் பழைய நாகினியை விட புதிய நாகினிக்கு TRP அதிகம் என்பதால் மௌனி ராய் ரசிகர்கள் கடும் அப்செட் தான்.
ரஞ்சித்தின் அடுத்தப்படம் இதுவா? வேற லெவல்
June 13, 2018பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வந்த காலா படம் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளத...
இந்நிலையில் ரஞ்சித் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்று பலரும் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.
சில வருடங்களுக்கு முன் தாணு, விஜய்க்காக கதை ரெடி செய்ய ரஞ்சித்திடம் பேசியுள்ளார், அதற்குள் தான் காலா படத்திற்கு ரஞ்சித் சென்றார்.
சரி இது ஒரு பக்கம் இருந்தாலும், தற்போது ரஞ்சித்திற்கு பாலிவுட்டில் செம்ம வரவேற்பு, பல நிறுவனங்கள் இவரை கமிட் செய்ய முயற்சி செய்து வருகின்றது.
இதுக்குறித்து ரஞ்சித் தெரிவிக்கையில் ‘ஹிந்தி படம் குறித்து பேசி வருகின்றார்கள், நான் இன்னும் முடிவு செய்யவில்லை, விரைவில் அறிவிக்கின்றேன்’ என கூறியுள்ளார்.
விஜய்யின் 62வது லுக் பற்றி வெளியான ஒரு சீக்ரெட்- கண்டிப்பாக டிரெண்ட் தான்
June 13, 2018விஜய்-முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் படம் வேற லெவலில் இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணம். படத்தில் விஜய் என யாருடைய லுக்கையும் இன்னும் பட...
இப்பட படப்பிடிப்பு அண்மையில் சன் பிக்சர்ஸ் இடத்தில் தொடங்கியது, அதை நாமும் கூறியிருந்தோம்.
இவ்வளவு நாள் சீக்ரெட்டாக வைத்திருந்த விஜய் லுக்கில் இருந்து ஒரு தகவல் கசிந்துள்ளது. படத்தில் விஜய் செம ஸ்டைலிஷ்ஷாக இருப்பது எல்லாம் ஏற்கெனவே வந்த தகவல், புதிது என்னவென்றால் ஒரு மாஸான கடுக்கன் ஒன்று படத்தில் அணிந்திருக்கிறாராம்.
ரஜினியை நடிக்கவைக்கலாம்னு நினைச்சேன். ஆனா... - ஆடியோ விழாவில் கலகலத்த இயக்குநர் ஷங்கர்!
June 12, 2018இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர் நடிப்பில் விக்கி இயக்கியுள்ள திரைப்படம், 'டிராஃபிக் ராமசாமி'. இதில், டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திர...
இதில், எஸ் ஏ. சந்திரசேகரிடம் பணிபுரிந்த உதவி இயக்குநர்கள் ஷங்கர், பொன்ராம், ராஜேஷ் என முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஷங்கர் ``நிஜ வாழக்கையில் டிராஃபிக் ராமசாமி ஒரு இன்ஸ்பையரிங்கான கேரக்டர். யார் விதிகளை மீறினாலும், அதை எதிர்த்து தட்டிக் கேட்கிற, போராடுற ஆள்தான் அவர். அவரைப் பத்தின செய்திகளைப் படிக்கும்போது ஆச்சர்யமா இருக்கும்; ஒரு ஹீரோயிசம் இருக்கும். படிக்கும்போது, மனசுக்குள்ள நிறையத் தடவை கை தட்டிருக்கேன். இந்த மாதிரி ஒரு இன்ஸ்பயரிங்கான ஆளை வெச்சி ஒரு படமாவது எடுத்துறனும்னு ஆசைப்பட்டேன்.
டிராஃபிக் ராமசாமி கதாப்பாத்திரம் கத்திய எடுக்காத ஒரு 'இந்தியன்' தாத்தா, வயசான ஒரு 'அந்நியன்'ல வர்ற அம்பிதான். இப்படி ரொம்ப இன்ஸ்பயரிங்கான இவர் கதையை ஒரு தடவ ரஜினி சாரை வச்சிகூட எடுக்கலாம்னு யோசிச்சேன். வயசுக்கேத்த கதாபாத்திரங்கள் பண்றதுக்கு இது கரெக்டா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, வட போச்சேங்கிறமாதிரி இந்தப் படத்த எஸ்.ஏ.சி சார் நடிக்குறாங்கனு அறிவிப்பு வந்துச்சு. எஸ்.ஏ.சி சார் இந்த கதாப்பாத்திரத்துக்கு ரொம்பப் பொருத்தமானவர். அவர், இந்த சமுதாயத்து மேல நிறைய கோவமாயிருப்பவர். அவர்கூட இருந்ததுனால இது எனக்குத் தெரியும். அந்தக் கோபம் எனக்கும் கொஞ்சம் ஒட்டிக்குச்சு" என்றார்
`மொத்த பிளாஸ்டிக் கழிவுகளையும் அழிக்க எங்கிட்ட ஐடியா இருக்கு!" - கலக்கும் கரூர் விஞ்ஞானி
June 12, 2018இன்று சுற்றுச்சூழலுக்கு ஏக கேடு விளைவிப்பதோடு, உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வஸ்து எதுவென்றால், அது கண்டிப்பாக பிளாஸ்டிக்தான். இங்க...
``இதற்கு மாற்று என்ன? இந்தத் திடீர் தடையால் பிளாஸ்டிக் வஸ்துகளை உற்பத்தி செய்யும் ஆலைகளில் வேலை செய்யும் லட்சக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரத்துக்கு என்ன வழி?" என்றெல்லாம் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, ``2019 ம் வருடத்திலிருந்து, `இனி பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தக் கூடாது' என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது நல்ல விஷயம். ஆனால், இப்போது டன் கணக்கில் தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த என்ன வழி?" என்று சமூக ஆர்வலர்கள் கேள்விக் கணைகளை தொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அந்தக் கேள்விக்கு பதிலாக, பிரத்யேக மெஷின்கள் மூலம் எல்லா பிளாஸ்டிக் கழிவுகளையும் அழிப்பதோடு, அவற்றிலிருந்து டீசலைவிட தரம் வாய்ந்த பயோ டீசலைத் தயாரிக்க முடியும் என்று அடித்துச் சொல்கிறார் காஜா மொயிலுதீன்.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர்தான் இந்த காஜா மொயிலுதீன். இவர்தான், `தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக்குகளை தனது பிரத்யேக மெஷினால் அழிப்பதோடு, அந்த பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து டீசலை விட தரம் வாய்ந்த பைரோ ஆயிலை எடுக்க முடியும்' என்று சொல்கிறார். இதுபற்றி, அவரிடம் பேசினோம்.
``நான் ஒன்பதாவதுதான் படிச்சுருக்கேன். சின்ன வயசிலிருந்து எதையாவது கண்டுபிடிச்சுகிட்டே இருப்பேன். திருச்சியில் இப்போ பழைய இரும்புப் பொருள்களையும் பிளாஸ்டிக் பொருள்களையும் வாங்கும் கடையை வெச்சுருக்கேன். இருந்தாலும் இன்னொரு பக்கத்துல எதையாவது புதுசு புதுசா கண்டுபிடிச்சுக்கிட்டே இருப்பேன். சென்னையில் ஒரு காது குடையிற பட்ஸ் தயாரிக்கிற கம்பெனியில் வேஸ்டான 300 பட்ஸை ஓர் இடத்துல மலைபோல் குவிச்சு வெச்சுருந்தாங்க. 30 கோடி மதிப்புள்ள இடமும் வீணாகிக் கொண்டிருந்தது. அதை அழிக்க படாதபாடுபட்டாங்க. அதை அழிக்கிறதா சொல்லி எத்தனையோ கம்பெனிகள் வந்து, அதை அழிக்க முடியாம கைவிரிச்சுட்டு போனாங்க. ஆனால், நான் தயாரிச்ச மெஷினை வெச்சு அதை சுற்றுச்சூழலுக்குக் கேடு இல்லாம அழிச்சுக் காட்டினேன்.
இந்நிலையில்தான், `பிளாஸ்டிக்குகளை அழிக்கிற மெஷினைக் கண்டுபிடிச்சா என்ன?'ன்னு தோணுச்சு. ஆராய்ச்சியில இறங்கிட்டேன். பலவற்றைக் கண்டுபிடிச்சேன். திருப்தியில்லை. அப்போதான், பிளாஸ்டிக்கோட பிறப்பிடத்திற்கே போனா என்னன்னு தோணுச்சு. பிளாஸ்டிக்கை அழிச்சு, டீசல் தயாரிக்கலாம்ங்கிற ஆராய்ச்சியில இறங்கினேன். ஏற்கெனவே, சித்ரா தியாகராஜன், பேராசிரியர் சரவணன் உள்ளிட்டவர்கள் பிளாஸ்டிக்கிலிருந்து பைரோ ஆயில எடுக்கும் முயற்சியைச் செஞ்சுருக்காங்க. ஆனா, அவங்க மக்காத பிளாஸ்டிக் குப்பையிலிருந்து அதை பண்ணலை.
அதனால், மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை திரவ எரிபொருளா மாத்துற இயந்திரத்தை மூன்று வருட முயற்சியில் கண்டுபிடிச்சேன். நான் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எடுத்த பைரோ ஆயிலைச் சோதித்த திருச்சி என்.ஐ.டி கல்வி நிறுவனப் பேராசிரியர், `இது டீசலைவிட பெட்டரா இருக்கு'ன்னு சர்ட்டிஃபிகேட் பண்ணினார். ஒரு கிலோ பிளாஸ்டிக்கில் 700 மில்லி லிட்டர் பைரோ ஆயில் எடுக்கலாம். முதல்கட்டமாக இந்த மெஷினரி கொண்ட தொழிற்சாலை அமைப்பைப் பள்ளப்பட்டியில் அமைத்திருக்கிறேன். இதற்கு பண உதவியை ஜியாவுல்ஹக், ரியாஜூல்ஹக் ஆகிய இரு சகோதரர்கள் செஞ்சாங்க. இந்தத் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் பொருள்களில் நட், போல்ட்டைத் தவிர மத்த அனைத்தையும் நானே சொந்தமாக வடிவமைச்சுருக்கேன். இந்த பைரோ ஆயிலானது பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக எரித்து எடுக்கப்படுவதில்லை. பிளாஸ்டிக் கழிவுகளை இந்தத் தொழிற்சாலையில் 300 டிகிரி டூசு ஏற்றி, அதன்மூலமாக இந்த பைரோ ஆயில் எடுக்கப்படுவதால்,புகை வராமல் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படையாது. 300 டிகிரி வெப்பத்தில், ஆக்சிஜன் இல்லாத சூழலில் அதை உருக்கும்போது, அதன் மூலக்கூறுகள் உடைந்து அதிலிருந்து ஆவி வெளிப்பட்டு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இயந்திரத்தின் மூலம், அதிலிருந்து பிரித்து தனிமைப்படுத்தப்படுகிறது. அதன்பிறகு, ஹைட்ரோகார்பன் வாயு அதே இயந்திரத்துக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் செயல்முறைக்கு நைட்ரஜன் வாயு வினையூக்கியாகச் செயல்படுத்தப்படுகிறது.
இந்த பிளாஸ்டிக் கழிவுகள் பைரோ ஆயிலாக மாறியபிறகு, கடைசியாக கார்பன் பிளாக் எனும் கரிப்பொருள் கிடைக்கிறது. இது 6000 கலோரிஃபிக் பவர் உள்ளது. இதை சிமென்ட் தொழிற்சாலை, மின் உற்பத்தி தொழிற்சாலை பாய்லர்களுக்கு எரிபொருளாக உபயோகப்படுத்தலாம். இந்த இயந்திரத்தைக் குளிர்விக்க நீர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அந்த நீரை சுழற்சி முறையில் இயங்குவதால் நீர்த்தேவை அதிகளவில் இருக்காது. இந்த இயந்திரம் மூலம் உலகமே பயந்து நடுங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் சுத்தமாக மதிப்புக்கூட்டப்பட்ட வகையில் அழிக்கப்படுகின்றன.
பிளாஸ்டிக்கில் இருந்து பைரோ ஆயில்
இந்த முறையில் தமிழ்நாடு முழுக்க உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அழித்து, பைரோ ஆயிலைத் தயாரிக்க முடியும். சாதாரண டீசலை கொஞ்சகாலம் சும்மா வைத்திருந்தால், கெட்டுப் போயிரும். ஆனால், இந்த பைரோ டீசல் எத்தனை நாள் சும்மா வைக்கப்பட்டிருந்தாலும் கெடாது. இந்தத் திட்டத்தை முதலில் கரூரில் செயல்படுத்தலாம்ன்னு நினைச்சு, கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனைப் போய் பார்த்தேன். அவர் ஆர்வமாகி, ஊக்கப்படுத்தியதோடு, `கரூர் மாவட்டத்தில் இதை இம்ப்ளிமென்ட் பண்ணுவோம்'ன்னார். அடுத்து, டவுன் பஞ்சாயத்து துணை இயக்குநர் குருசாமியைச் சந்தித்து இதை விளக்கினோம். ஆர்வமான அவர், முதலில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பேரூராட்சிகளில் முதலில் இதைப் பயன்படுத்திப் பார்க்க அனுமதி அளித்துள்ளார். எனது இயந்திரம் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை அழிப்பது அவர்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் இருந்தால், மாவட்டம் முழுக்க பண்ணலாம்ன்னு சொல்லி இருக்காங்க. தமிழ்நாடு அரசு இதற்கு ஒத்துழைத்தால் தமிழ்நாடு முழுக்க இதை விரிவுபடுத்தி, தமிழகத்தை ஒரு பிட்டு பிளாஸ்டிக் கழிவுகூட இல்லாத மாநிலமாக மாற்ற முடியும். இந்த மெஷினரி இன்னும் சிறிய அளவில் நவீனமாக அமைத்து அனைத்து ஊர்களிலும் நிறுவி, எல்லா பிளாஸ்டிக் கழிவுகளையும் அழித்துவிட முடியும்" என்றார்.
