சர்ச்சைகள் ஒன்றும் இன்ஸ்பெக்டர் காமராஜுக்கு புதிதல்ல..!

திருச்சி திருவெறும்பூர் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா என்பவரை மறித்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர் காமராஜ் எட்டி உதைத்ததில், அந்த பைக்கின் ...

திருச்சி திருவெறும்பூர் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா என்பவரை மறித்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர் காமராஜ் எட்டி உதைத்ததில், அந்த பைக்கின் பின்பக்கம் அமர்ந்திருந்த ராஜாவின் மனைவி உஷா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது  திருச்சி எஸ்.பி கல்யாண் மற்றும் திருச்சி காவல் ஆணையர்  அமல்ராஜ் ஆகியோர் குற்றாட்டுக்குள்ளான இன்ஸ்பெக்டர் காமராஜை கைதுசெய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்குக் காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜ் போதையில் இருந்ததாகவும், வாகனச் சோதனை நடத்தியவர், அந்த வழியே வந்த ராஜாவின் வாகனத்தை மறித்தார். அப்போது ஹெல்மெட் போடாத ராஜா, வாகனத்தை நிறுத்தவில்லை என அவரின் காலரைப் பிடித்து இழுத்தார். அடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அங்கிருந்து கிளம்பிய ராஜாவின் வாகனத்தை எட்டி உதைத்ததில்தான் உஷா உயிரழந்தார்.  இவர், சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது புதிதல்ல என்கிறது, திருச்சி காவல்துறை வட்டாரங்கள்..

கடந்த 2002-ம் ஆண்டு ,திருவாரூர் மாவட்டத்தில் பணியற்றிய காமராஜ், அவருக்குக் கீழ் பணியாற்றிய ஒரு காவலர் அவசர தேவைக்காக இவரிடம் விடுப்புக் கேட்டுள்ளார்.  ஆனால் காமராஜ், அந்தக் காவலரை கெட்ட வார்த்தையால் அசிங்கமாக திட்டித் தீர்த்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த போலீஸ், தன்னுடைய துப்பாக்கியை எடுத்து காமராஜை நோக்கி சுட்டுள்ளார். அதில் லாகவமாகத் தப்பிவிட, வேறு ஒரு காவலர்மீது குண்டு பாய்ந்தது. அடுத்து, அந்தக் காவலர் தன்னையே சுட்டுத் தற்கொலைசெய்து கொண்டார். இந்தப் பிரச்னையில், நீண்டகாலம் பணி உயர்வு பெறாமல் இருந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு பணி உயர்வுபெற்ற காமராஜ், திருச்சிக்கு மாறுதலாகி வந்தார்.

மேலும், திருச்சி திருவெறும்பூர் காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி திருவெறும்பூரை அடுத்த வேங்கூர் பகுதியில் குடியேறினார். அவர் தற்போது குடியிருக்கும் வீடு, சமீபத்தில் நகைக்கொள்ளையில் சிக்கிய பிரபல கொள்ளையன் தங்கியிருந்த வீடு என்கிறார்கள்.  

மேலும் பல...

0 comments

Blog Archive