சினிமாவிற்கு வரும்முன் இந்த பிரபலங்கள் செய்த வேலை தெரியுமா?...

 வெற்றி மிகவும் எளிதான காரியம் அல்ல. அதற்கு பின்னணியில் நீண்ட நெடுந்தூர பயணம் இருக்கிறது. வலிகள், துயரங்கள், அவமதிப்புகள், கேலி பேச்சு, கேவ...

 வெற்றி மிகவும் எளிதான காரியம் அல்ல. அதற்கு பின்னணியில் நீண்ட நெடுந்தூர பயணம் இருக்கிறது. வலிகள், துயரங்கள், அவமதிப்புகள், கேலி பேச்சு, கேவலத்திற்கு ஆளானது என்று வெற்றியாளர்கள் தங்கள் முதுகில் சுமந்து வந்த எதுவுமே எளிமையானவை அல்ல.

உச்சம் அனைவராலும் தொட்டுவிட முடியாது. ஓரிரு வெற்றிகள் நிலைபெற உதவாது. சில தோல்விகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

சினிமாவில் காமெடி செய்வது எளிது என்பார்கள். ஆனால், உங்களால் ஒரு நபரை எளிதாக சிரிக்க வைத்துவிட முடியுமா? அழவைப்பது எளிது ஆனால், சிரிக்க வைப்பது கடினம்.
புரோட்டா சூரி!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் அறிமுகம் ஆனவர் புரோட்டா சூரி. இவரது புரோட்டா காமெடி சூப்பர் ஹிட் ஆனதால், புரோட்டா இவரது அடைமொழியாக மாறிவிட்டது.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் இவர் தனது சொந்த ஊரில் பால் ஊற்றும் வேலை செய்து வந்துள்ளார். மேலும், சென்னைக்கு வந்த பிறகு பெயின்ட்டிங் வேலைகள், கலை இயக்குனர்களிடம் செட் அமைக்கும் வேலைகள் செய்து வந்திருக்கிறார்.

அப்புகுட்டி

இவர் இயக்குனர் சுசீந்திரனின் அழகர் சாமியின் குதிரை என்ற படத்தில் நடிகராகவும் நடித்திருந்தார். அதற்கு தேசிய விருதும் வென்றிருந்தார். சினிமாவிற்குள் நுழைவதற்கு முன் இவர், வடபழனி சரவணபவன் ஓட்டலில் கிளீனர், சர்வர் வேலை செய்துவந்தாராம்.

வையாபுரி!

1993ல் வெளியான உடன்பிறப்பு என்ற படத்தில் அறிமுகமானார் வையாபுரி. ஆனால், சிலர் பாரதிராஜாவினி கருத்தம்மா தான் இவரது அறிமுக படம் என்கிறார்கள். தொடர்ந்து இவர் செல்லக்கண்ணு, அவ்வை சண்முகி போன்ற பல படங்களில் நடிக்க துவங்கினார். இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கிய ராமன் அப்துல்லா என்ற படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

சினிமாவிற்குள் வருவதற்கு முன்னர் காமெடி நடிகர் வையாபுரி எக்மோர் வசந்தபவன் ஓட்டலில் சர்வர் வேலை செய்து வந்துள்ளார். மேலும், திருமண விழாக்களில் சமையல் வேலைக்கு செல்லலும் வேலைகளும் செய்து வந்துள்ளார்.

ராமதாஸ்

முண்டாசுப்பட்டி முனீஸ்காந்த் என்றே பலரால் இன்றும் அறியப்படும் ராம்தாஸ் நடிப்பில் பெரிய ஆள் ஆகிவிட என்ற ஆசையில் சென்னைக்கு வந்த பல ஆயிரக்கணக்கான நபர்களில் ஒருவர். ஆனால், இவர் முதலில் கமிட்டான படம் சவாரி என்று அறியப்படுகிறது.

ஆனால், முதலில் திரைக்கு வந்த படம் முண்டாசுப்பட்டி தான், மேலும் இந்த படம் தான் இவருக்கு ஒரு விசிட்டிங் கார்டாக அமைந்தது. சென்னை வந்த புதியதில் சாலைகளில் படுத்து உறங்கி வாய்ப்பு தேடியவர். சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் குறும்படங்கள், சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்து வந்துள்ளார்.

ரமேஷ் திலக்!

மங்காத்தாவில் பெயரிடப்படாத பாத்திரத்திலும், மெரினாவில் கொரியர் பாயாகவும் நடித்திருந்தார் ரமேஷ் திலக். இவர்க்கு திருப்பு முனையாக அமைந்த படம் சூது கவ்வும். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ரமேஷ் திலக். இவர் ஒருசில நாட்களுக்கு முன்னர் தான் தனது காதலியை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் ரமேஷ் திலக் ஒரு பிரபல வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். மேலும், தனது நட்பு வட்டாரத்தில் பல குறும்பட இயக்குனர்களின் படங்களில் காமெடி வேடங்களில், சின்ன, சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

காளி வெங்கட்!

மிர்ச்சி சிவா மற்றும் எஸ்.பி.பி. சரண் நடிப்பில் வெளியான வா குவாட்டர் கட்டிங் என்ற படத்தில் அறிமுகம் ஆனவர் காளி வெங்கட். இதை தொடர்ந்து இவர் மௌன குரு, தடையறத்தாக்க, கலகலப்பு என தொடர்ந்து பிஸியான காமெடி நடிகர் ஆகிவிட்டார்.

சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்னர் காளி வெங்கட் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். அது மட்டுமின்றி டீ கடையிலும் வேலை செய்திருக்கிறார் காளி வெங்கட்.

யோகி பாபு!

சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் இயக்குனர் அமீர் நடித்து தயாரித்த யோகி என்ற படத்தில் வளரும் நடிகராக ஒரு காமெடி பாத்திரத்தில் அறிமுகமானார் யோகி பாபு. அறிமுகப்படத்தின் பெயரே இவரது அடைமொழியாக மாறிவிட்டது. தொடர்ந்து தில்லாலங்கடி, வேலாயுதம், ராஜாபாட்டை போன்ற படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து நிற்கிறார் யோகி பாபு.

யோகி பாபுவிற்கு இராணுவத்தில் சேர வேண்டும் என்பது சிறுவயது கனவாம். ஆனால், அது கைகூடாமல் போய்விட்டது. சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் இவர் உதவி இயக்குனராக பணியாற்றி வந்திருக்கிறார்.

ஜாங்கிரி மதுமிதா!

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடிகர் சந்தானத்துடன் துணை சேர்ந்த ஜாங்கிரியாக சூப்பர்ஹிட்டானர் மதுமிதா. இவர் தொடர்ந்து அட்டக்கத்தி, ராஜா ராணி, ஜில்லா, வெள்ளைகார துரை பல நடிகைகளில் நடித்து ஆச்சி மனோரமா, கோவை சரளாவுக்கு பிறகு தமிழ் திரையிலகில் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு காமெடி நடிகையாக வளம்வந்துக் கொண்டிருக்கிறார்.

சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன் நடிகை மதுமிதா, சின்னத்திரையில் பல தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இவர் அறிமுகம் சன் டிவி, கலைஞர் டிவிகளிலும் சில நிகழ்ச்சிகளில் நடித்திருந்தார். 

மேலும் பல...

0 comments

Blog Archive