மேடையிலேயே அரசியலுக்காக கமலை தாக்கிய ரஜினி- இப்படி சொல்லிவிட்டாரே!
February 23, 2018ரஜினி, கமல் இருவரும் தான் தற்போதைய அரசியலின் ஹாட் டாபிக். யாரும் எதிர்ப்பாராத விதமாக கமல் அரசியலில் எண்ட்ரீ கொடுத்து அசத்திவிட்டார். நீண்...
ரஜினி, கமல் இருவரும் தான் தற்போதைய அரசியலின் ஹாட் டாபிக். யாரும் எதிர்ப்பாராத விதமாக கமல் அரசியலில் எண்ட்ரீ கொடுத்து அசத்திவிட்டார்.நீண்ட நாட்களாக அரசியலுக்கு வருகின்றேன் என சொன்ன ரஜினி, தற்போது தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆனால், அதன் பிறகு அரசியல் பற்றி ரஜினி எந்த ஒரு இடத்திலும் வாய் கூட திறக்கவில்லை.
இந்நிலையில் ரஜினி தன் ரசிகர்களிடம் பேசுகையில் ‘மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் நமது வேலையை அமைதியாக பார்ப்போம்’ என்று பேசியது, அவர் கமலை தான் அப்படி சொல்கின்றார் என கிசுகிசுக்கப்படுகின்றது.
அதிசய கோயில்: இலை, தழைகள் பாறைகளாக மாறும் விடைதெரியாத மர்மம்..!
February 22, 2018இந்த உலகம் பல அதிசயங்கள் நிறைந்தது. இன்னும் பல அதிசய நிகழ்வுகளுக்கு விடை தேடிக்கொண்டு இருக்கின்றன. அப்படியொரு விடைதெரியாத அதிசயம் சுருளிமல...
இந்த உலகம் பல அதிசயங்கள் நிறைந்தது. இன்னும் பல அதிசய நிகழ்வுகளுக்கு விடை தேடிக்கொண்டு இருக்கின்றன. அப்படியொரு விடைதெரியாத அதிசயம்சுருளிமலையில் உள்ளது.
அந்த காலத்தில் கோயில் கட்டும் போது ஒவ்வொரு கோயிலிலும் ஏதாவது ஒன்றைத் தனித்தன்மையுடன் அமைத்துள்ளனர். அந்தவகையில் இந்த முருகன் கோயிலுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு!
தேனி மாவட்டம், கம்பம் அருகில், சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது சுருளி அருவி. மேற்குத்தொடர்ச்சி மலையின் சுருளிமலையில் அருள்மிகு சுருளிவேலப்பர் கோயில் கொண்டுள்ளார். சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இங்கு சுருளிவேலப்பர் மூலவராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். பொதிகை மலையும் சதுரகிரி மலையும் இணைந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பிரிவுகளில் சுருளி மலை அமைந்துள்ளது. முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தெட்டாயிரம் ரிஷிகளும், பதினெண் சித்தர்களும் தவம் புரிந்து அருள்பாலிக்கும் அற்புதமான மலை இது. சுருளி அருவியான பல மூலிகைகள் பட்டு மருத்துவ குணங்களுடன் வெள்ளியை இறைத்தது போல் கொட்டுவதால் இதற்கு சுருளி தீர்த்தம் என்று பெயர். பழனி முருகனின் நவபாசான சிலையை உருவாக்கிய போகர் சித்தர் தனது இறுதி மூலிகையை இந்த மலையில் இருந்து தான் எடுத்ததாகக் கூறப்படுகிறது. அவரின் குருநாதர் காலாங்கி சித்தர் பன்னெடுங்காலம் தவம் செய்த பூமி இது. சுருளி மலையைச் சுற்றி சுமார் 225 குகைகள் உள்ளதாகவும் இன்றும் பல சித்தர்கள், ரிஷிகள், தவமிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
அப்படிப்பட்ட குகைக்கோயிலில் தான் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். அங்குள்ள விபூதிக் குகையில் என்ன சிறப்பு என்றால், அங்கிருக்கும் ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுகிறதாம். இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிக்கிறது. 48 நாட்களில் இந்நீரில் விழும் இலை, தழைகள் பாறை போல மாறுமாம். பாறை மீது நீர் விழுந்தாலும் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது. இந்தக் கோயில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்றுநீர் பொங்கி வந்து கொண்டிருப்பது அதிசயமாகும்.
இங்குப் பிரதானமாக வீற்றிருக்கும் சுருளியாண்டவர் சந்நதியில் கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள இமயகிரி சித்தர் குகை மிகவும் பிரசித்தி பெற்றது. இமயமலையில் வாழ்ந்த சித்தர் ஒருவர் சுருளி மலையில் தங்கி தவமியற்றி சிவபெருமான் தரிசனம் பெற்ற குகையில் சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்துள்ளார். இது இமயகிரி சித்தர் குகை என்று அழைக்கப்படுகிறது.
`மகேந்திர பாகுபலி’யின் இன்ஸ்பிரேஷன் இந்த நிஜ பாகுபலிதான்!
February 22, 2018பல கோடி ஆண்டுகள் பழமையான, உலகின் மிகப்பெரும் ஒற்றைக்கல் சிற்பத்தின் பின்னணியில் ஒரு வாழ்வியல் நெறி எழுதப்பட்டிருக்குமா? சரவணபெலகோலாவின் மலை...
பல கோடி ஆண்டுகள் பழமையான, உலகின் மிகப்பெரும் ஒற்றைக்கல் சிற்பத்தின் பின்னணியில் ஒரு வாழ்வியல் நெறி எழுதப்பட்டிருக்குமா? சரவணபெலகோலாவின் மலைகளில் 59 அடி உயரத்திற்கு வானம் எட்ட நின்றுகொண்டிருக்கும் பாகுபலி எனப்படும் கோமதீஸ்வரா சிலை அதற்கு சாட்சியாக நிற்கிறது.நிஜ பாகுபலியின் கதை!
நீங்கள் சினிமாவில் பார்த்து வியந்த 'பாகுபலி'யின் உண்மைக் கதை என்றுகூட இதைச் சொல்லலாம். இந்தியப் புராணங்கள் கொண்டாடும் அரசன் பரதனின் தம்பிதான் பாகுபலி. தனது வீரத்தால், இந்திய தேசம் முழுக்கப் போரிட்டுக் கைப்பற்றிய பரதனுக்கு இறுதியாக வெல்வதற்கு ஒரேயொரு நாடுதான் இருந்தது. அது, தென்னிந்தியாவில் தனக்குச் சமமான பலத்துடன் ஆண்டுகொண்டிருக்கும் தம்பி பாகுவின் கோட்டை. தம்பியுடன் போர்புரியப் படையுடன் கிளம்பபினார் பரதன். பாகுவோ, `இருவருக்குமிடையிலான உரிமைப் போருக்கு எதற்கு வீரர்களைப் பலியாக்க வேண்டும்?’ என்ற எண்ணத்தில் `நாம் இருவர் மட்டும் களத்தில் சந்திப்போமே..!’ எனக் கோரிக்கை விடுத்தார். அண்ணனும் தம்பியும் மட்டும் களத்தில் மோதிக்கொண்டார்கள். மல்யுத்தம், நீர்ச்சண்டை... என விரிந்த போட்டியில் பாகுபலியே ஜெயித்தார். இருந்தாலும், ராஜ்ஜிய மோகத்தின் மேல் ஏற்பட்ட வெறுப்பால் நாடு துறந்து, வீடு துறந்து, உடைமை துறந்து, உடை துறந்து விந்தியகிரி மலையின் உச்சிக்குச் சென்று தவ வாழ்க்கை மேற்கொண்டார். ஒரு வருடம் முழுக்க அசையாமல் நின்ற கோலத்திலேயே அவர் தவம் மேற்கொண்டதால், அவரைச் சுற்றி இலைகொடிகளும் புற்றுகளும் படர்ந்தன. அதன் பிறகு, அவர் அப்படியே மாயமாகிவிட்டதாக புராணக் கதைகள் குறிப்பிடுகின்றன. அதன் உண்மைத்தன்மை குறித்த கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். அதையும் தாண்டி, சமண நெறி வாழ்வியல் சாதுக்களில் முதல் திகம்பர சாதுவாகக் கருதப்படுபவர் பாகுபலி.
சரவணபெலகோலா
காற்றில் கலந்து மாயமான பாகுபலிக்காக, `சாவண்டராயா’ என்கிற சிற்பக்கலைஞர் பின்னாளில் நிறுவிய சிலைதான் உலகின் மிகப் பெரும் ஒற்றைக்கல் சிற்பமாக சரவணபெலகோலாவில் உயர்ந்து நிற்கிறது. `கோமதேஸ்வரா’ என்கிற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது. அடைமொழிக்காக அல்லாமல் உண்மையிலேயே வானம் தொடும் உயரத்தில் இருக்கும் அந்தச் சிலைக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமஸ்தகாபிஷேகம் அனைத்து சமணர்கள் ஒருங்கிணைய இந்தாண்டு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கி நடந்துவரும் கொண்டாட்டங்களின் முக்கியப் பகுதியான புனித நீராடல் 17-ம் தேதி தொடங்கியது. வரும் 25-ம் தேதி வரை நிகழும் இந்த விழாவின் முதல்நாள் நிகழ்வில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் 19-ம் தேதி அன்று இந்தியப் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார்கள்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து சுமார் மூன்று மணி நேரத் தொலைவில் இருக்கிறது சரவணபெலகோலா. எப்போதாவது ரயில்கள் நிற்கும் அந்தக் கிராமத்தின் ரயில் நிலையத்திலிருந்து பார்த்தாலே மலை உச்சியிலிருக்கும் சிலையின் சிரம் மட்டும் சிறிய கல் அளவில் தெரிகிறது. அந்தச் சிலையின் சிறப்பும் அதுதான். 25 கி.மீ தொலைவு வரை அந்தச் சிலை இருப்பது தென்படும். இந்த சீசன் மட்டும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், கர்நாடக அரசு பெலகோலாவுக்காக இலவசப் பேருந்துகளை இயக்கிக்கொண்டிருக்கிறது. முதல் நாள் நிகழ்வில் மட்டும் சுமார் 55,000 பேர் வரை கலந்துகொண்டிருந்திருக்கிறார்கள். பெலகோலா பேருந்து நிலையத்தின் பின்புறம் பாகுவின் விந்தியகிரி மலையும், நிலையத்தின் முன்புறம் பாகுவைச் சந்திக்க வந்த பரதன் தங்கியிருந்த சந்திரகிரி மலையும் இருக்கின்றன. செங்குத்தாக தலா ஐநூறு படிகள் இரண்டுக்கும் இருக்கின்றன. காலையில் சந்திரகிரியிலிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பவர்கள், மாலையில் விந்தியகிரி மலையிலிருந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கலாம். சந்திரகிரியைவிட விந்தியகிரி மலையின் படிக்கட்டுகளின் செங்குத்து அதிகம் என்பதால், அதில் ஏறுவது சற்று கடினமாகவே இருக்கிறது. மலையின் படிகளில் ஏற முடியாதவர்களுக்காக, விழாவுக்கென்றே தனியாக ‘டோலி’ தூக்குபவர்களை நியமித்திருந்தது கோயில் நிர்வாகக் குழு.
`17-ம் தேதி மதியம் 2 மணி அளவில் முதல் புனித நீராடல் நடக்கும்’ என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 16-ம் தேதி மாலை சரவணபெலகோலாவின் தெருக்கள், கலையும் கொண்டாட்டமுமாகக் காட்சியளித்தன. பாகுபலியின் ஆளுயர மாதிரி வடிவச் சிலையை மலையைச் சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலமாக எடுத்துவந்தார்கள். கர்நாடகாவின் பாரம்பர்ய இசைக்கருவிகளான தம்பட்டை, தக்கீது, நகரா, டோல்குனிதா இசை நடனம் ஆகியவை ஊர்வலத்தில் இசைக்கப்பட்டன. கட்டைக்கூத்துக் கலைஞர்கள், கர்நாடகத்தின் பாரம்பர்யக் கரகாட்டக் கலைஞர்கள்... என ஸ்பானிய கார்னிவல்களை நினைவுபடுத்துவதாக இருந்தது முதல்நாள் கொண்டாட்டம்.
பாகுவைப்போலவே பரதன்!
புனித நீராடலுக்கான தினம் என்பதால், பாகுபலி இருக்கும் மலையைவிட சந்திரகிரிக்கு வரும் கூட்டம் குறைவாக இருந்தது. மௌரியப் பேரரசர்களால் எழுப்பட்ட கோயிலும், பாகுவின் அண்ணனான பரதனின் சிலையும் இந்த மலையில் இருக்கின்றன. கிட்டத்தட்ட பார்ப்பதற்கு பாகுபலியைப்போலவே தோற்றமளிக்கிறது பரதனின் சிலை. முழங்கால் வரை மட்டுமே இருக்கும் இந்தச் சிலை, சந்திரகிரியிலிருந்து விந்தியகிரியிலிருக்கும் பாகுபலியின் சிலையைப் பார்ப்பதுபோல அமைக்கப்பட்டிருக்கிறது. பாகுபலியிடமிருந்து அரசு அதிகாரங்களைப் பெற்றுக்கொண்ட பிறகு மிகவும் குற்றஉணர்வுக்கு ஆளான பரதன், தனது தம்பியைச் சந்திக்க இந்த மலைக்கு வந்து காத்திருந்ததாக அந்தப் பகுதி மக்கள் செவிவழிக் கதையாகச் சொல்கிறார்கள். இன்றளவும் தனது தம்பியைப் பார்ப்பதற்காகக் காத்துக்கொண்டிருப்பது போலத்தான் காட்சியளிக்கிறது பரதனின் சிலை.
50,000-க்கும் அதிகமானவர்கள் புனிதநீராடலைக் காணக் குவிந்திருந்தாலும், பாகுபலியைக் காண்பதற்கு மலை உச்சியில் வடிவமைக்கப்பட்டிருந்த மேடை வெறும் 6,000 பேரின் எடையை மட்டுமே தாங்கும் என்பதால், அந்த எண்ணிக்கையில் மட்டுமே மலை உச்சிக்கு அனுமதிக்கப்பட்டார்கள். ஜெயின் சமுதாய மக்களுக்கும் ஆடை, ஆசை என அத்தனையையும் துறந்த சமணத் துறவிகளுக்கும் மட்டுமே முதல்கட்ட நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி தரப்பட்டிருந்தது. இந்தியா முழுக்க உள்ள 600 சமணத் துறவிகளில் 350 பேர் அங்கே பெலகோலாவில் புனித நீராடல் நடக்கும் இடத்தில் குழுமியிருந்ததாகச் சொன்னார் விழாவுக்கு வந்திருந்த ஒருவர். ``ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே, அதுவும் நின்றபடியே சாப்பிட்டு, ஒருமுறை மட்டுமே நீர் அருந்திவிட்டு உயிர்வாழும் ஆத்மாக்கள் இவர்கள். அந்த `பாகுபலி’ போன்ற சித்த அவதாரங்கள் இவர்கள். ஒருவேளை தங்களது சாப்பாட்டில் ஏதாவது ஓர் உயிருள்ள ஜீவன் தென்பட்டுவிட்டால், அந்த உணவை அப்படியே வைத்துவிடுவார்கள். அதன் பிறகு அன்று வேறு எதையும் சாப்பிட மாட்டார்கள். ஒரு நாளைக்கு 20 கி.மீட்டர் தூரம் வரை கால்நடையாக நடந்தே கடப்பார்கள். இவர்கள் அத்தனை பேரையும் ஒரே இடத்தில் காண்பதே மிக அரிய விஷயம்’’ என்றார் அவர். மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் உடைகள் உடுத்திய மக்கள் பாகுபலி சிலையின் உச்சிக்குச் சென்று, குடங்களில் சேகரிக்கப்பட்ட நீரை அபிஷேகம் செய்ய, கீழிருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் திரளின் குரல் 'ஜெய் பாகுபலி...’ என ஓங்கி ஒலித்தது.
இந்த ஆரவாரங்களுக்கிடையே, உலகின் மிகப் பெரும் ஒற்றைக்கல் சிலை நீரால் நனைந்து நின்றது. சூரிய அஸ்தமனம் நெருங்க நெருங்க, மேற்குப் புறத்திலிருந்து சிலையின் ஒரு பக்கம் மட்டும் பட்டுத்தெறித்த சூரிய ஒளி, கிரானைட் கல்லால் ஆன அந்தச் சிலையைத் தங்கச் சிலைபோலப் பிரகாசிக்கச் செய்தது. நீர், பால், மஞ்சள், சந்தனம் என 1,008 குடங்களிலிருந்த அபிஷேகப் பொருள்கள் அந்தச் சிலைக்கு வார்க்கப்பட்டன. கீழிருந்து எந்தச் சலனமுமில்லாமல், அமைதியுடன் தங்களின் ஆதிமுதல்வருக்கு அளிக்கப்படும் மரியாதையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் சமண சாதுக்கள். அத்தனை உச்சியில், அவ்வளவு மக்கள் திரளுக்கு இடையே பேரமைதி நிலவிக்கிடந்தது. சமண வாழ்வியல் நெறி உணர்த்துவதும் அந்த அமைதியையும் அகிம்சையும்தான்.
பிக்பாஸ் முதல் க்ரோம் வரை... கமல் கட்சி சின்னத்தின் ஆறு குறியீடுகள்!
February 22, 2018'என்னவா இருக்கும்?' என சில மாதங்களாக மண்டை காய்ந்துகொண்டிருந்த தமிழனுக்கு நேற்று மாலைதான் விடை கிடைத்திருக்கிறது. 'மக்கள் நீதி ...
'என்னவா இருக்கும்?' என சில மாதங்களாக மண்டை காய்ந்துகொண்டிருந்த தமிழனுக்கு நேற்று மாலைதான் விடை கிடைத்திருக்கிறது. 'மக்கள் நீதி மய்யம்'. கமல் படங்களைப் போலவே கட்சிப்பெயரும் லோகோவும் வித்தியாசமாகத்தான் இருக்கின்றன. அவர் இரண்டையும் அறிமுகப்படுத்திய அடுத்த நொடியிலிருந்து ஆளாளுக்கு மீம்ஸ், டீகோடிங் என பரபரப்பு கிளப்புகிறார்கள். கமலே தெளிவுரை விளக்கம் வேறு கொடுத்திருக்கிறார். நாமும் நம் பங்கிற்கு அவர் கட்சிப் பெயரையும் சின்னத்தையும் டீகோட் செய்ததிலிருந்து...!* தமிழ்நாட்டில் கட்சி தொடங்கினால் திராவிட, தமிழர், கழகம், கட்சி போன்ற வார்த்தைகள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், முதன்முறையாக 'மய்யம்' என அறிவித்திருக்கிறார் கமல். 80 களில் கமல் நடத்திவந்த பத்திரிகையின் பெயர் 'மய்யம்'. பொதுவாகவே எழுத்தாளர்களை அரசியல்வாதிகள் மதிப்பதில்லை என்ற குரல்கள் கேரளா நீங்கலாக மற்ற இடங்களில் கேட்பதுண்டு. இதுநாள் வரை ஓரங்கட்டப்பட்ட எழுத்தாளர்களையும் அரவணைத்துச் செல்லும் அமைப்பாக இது இருக்கும் என்பதைத்தான் இந்தப் பத்திரிகைப் பெயர் குறிக்கிறது.
* கட்சி லோகோவை குறுகுறுவென உற்றுப் பார்த்தால் இதற்குமுன் எங்கேயோ பார்த்தது போலவே இருக்கிறது. யெஸ்... பிக்பாஸ் லோகோவேதான்! நடுவே வட்டமாக ஒரு கண், அதைச் சுற்றி ஒரு நீள்வட்டம்! போக, வையாபுரி, பரணி, சினேகன் எனக் கூடவே பிக் பாஸ் செட்டையும் அழைத்துச் செல்கிறார். அந்நிகழ்ச்சியின் கேப்ஷனான 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்பதை ஊழல்வாதிகளுக்கு எதிரான எச்சரிக்கையாகப் பதிவு செய்திருக்கிறார் கமல் என்றால் அது மிகையாகாது.
* சின்னத்தை தட்டையாக்கிப் பார்த்தால் பறக்கும் தட்டு போலவே இருக்கிறது. கமல் தனது ஆஸ்தான குருவாக நினைப்பது அப்துல் கலாமை! அவர் விண்வெளித்துறையில் செய்த சாதனைகளை உலகமே அறியும். அவரை மரியாதைக்குட்படுத்தும் விதமாகவே அவர் ஊரிலிருந்து பயணத்தைத் தொடங்கியதோடு மட்டுமல்லாமல் பறக்கும் தட்டு குறியீடையும் வைத்திருக்கிறார் கமல்.
* கமலின் லோகோ கூகுள் க்ரோம் போல இருப்பதாக சமூகவலைதளங்களில் சிலர் சொல்லிவருகிறார்கள் சிலர். ஏன் இருக்கக் கூடாது? சினிமாவின் எக்சைக்ளோபீடியாவாக கமல் இருக்கும்போது அவர் தொடங்கும் கட்சி, அரசியலின் கூகுளாக இருக்கக் கூடாதா? 'இங்கே கேட்டது எல்லாம் கிடைக்கும் எம் மக்களுக்கு' என்பதை குறியீடு மூலமாக உணர்த்துகிறார் கமல் என்பதை நாம் உணர வேண்டும்.
* ஆறு கைகள், சிவப்பு, வெள்ளை, கறுப்பு ஆகிய நிறங்கள் கொடியில் இடம்பெற்றிருக்கின்றன. ஆறு கைகள் தமிழகத்தின் ஆறு பெரிய கட்சிகளையும் சிவப்பு, வெள்ளை, கறுப்பு அவற்றின் கட்சிக்கொடிகளையும் குறிக்கிறது. நட்சத்திரம் வி.சி.கவைக் குறிக்கிறது. இந்தக் கட்சிகள் அனைத்தோடும் இணைந்து தமிழர் நலனுக்காக குரல் கொடுப்பேன் என்பதைத்தான் கமல் சொல்லவருகிறார். மாற்றுக்கட்சிகளிலிருந்து வருபவர்களுக்கும் எங்களிடையே இடமுண்டு என அவர் சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
* இந்தியத் தேசியமே முக்கியம் எனச் சொல்லியிருக்கிறார் கமல். இதன்மூலம் தமிழ்தேசியவாதிகளுக்குக் கடுமையான ஏமாற்றத்தை பரிசளித்ததோடு கொடியின் நடுவே அசோக சக்கரத்தைக் குறிக்கும் வட்டத்தையும் வைத்திருக்கிறார். தேக்க நிலையில் இருக்கும் அரசு இயந்திரத்தை ஓடவைக்கும் சக்கரமும் அதைச் சுற்றி இருக்கும் சைக்கிள் செயினுமாக இருப்போம் என்பதை இந்த வட்டம் வழியாகச் சொல்லவருகிறார் என்பதாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.
பிக்பாஸ் நேரத்தில் ரஜினி-கமல் ரகசிய சந்திப்பில் எடுத்த முடிவு- ரசிகர்கள் ஏற்பார்களா?
February 22, 2018சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசனும் நல்ல நடிகர்கள் என்பதை தாண்டி நல்ல நண்பர்கள். இவர்கள் இருவருமே தீவிர அரசியலில் இறங்கவுள்ளன...
இந்நிலையில் ரஜினிகாந்தின் காலா படப்பிடிப்பு, கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டும் ஒரே செட்டில் தான் நடந்தது.
அப்போது இருவரும் ரகசியமாக சந்தித்துக்கொண்டார்களாம், கமல் தானும் அரசியலுக்கு வருவதாக கூறியுள்ளார்.
அதற்கு வாழ்த்து சொன்ன ரஜினி, மேலும் தனிப்பட்ட முறையில் மற்ற அரசியல்வாதிகள் போல் நாம் திட்டிக்கொள்ள கூடாது என இருவரும் முடிவெடுத்துள்ளார்கள்.
இதை ரசிகர்களும் பின்பற்றுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
புதிகாக கட்சியை துவங்கிய கமலிடம் காயத்திரி ரகுராம் இதை தான் எதிர்பார்க்கிறாரா!
February 22, 2018பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் காயத்திரி ரகுராம். சில சர்ச்சைகளை சந்தித்தாலும் இவருக்குள்ளும் சில நல்ல விசயம் இருக்கிறது. திறமையா...
தற்போது ட்விட்டரில் நான் யாருக்கோ அல்லது எந்த கட்சிக்குமோ இப்போது எதிரியில்லை. நான் ஒரு பொதுவான பிரஜையாக எண்ணுகிறேன். இந்த கேள்விகள் எனக்குள் தோன்றுகிறது. விடை தேடுகிறேன்.
யாராவது நல்லது செய்தால் எல்லாருக்காகவும் நான் மகிழ்ச்சியடைவேன். சந்தேகத்தின் பலன் அதுவே. எதுவும் தவறில்லை.யாருக்கு மாற்று யார். வெளிப்படையாக இருப்போம் என பதிவிட்டுள்ளார்.
