ஆறு அத்தியாயம் – விமர்சனம் = அரை பிரசவ அத்தியாயங்கள்!.

 ஆறு வேறு வேறு சிறுகதைகள். அனுமானுஷ்யமும், பேயும் பொதுவாய் எழுதப்பட்ட கதைகள், ஆறு குறும்  படங்களாய் எடுத்து அதன் கிளைமாக்ஸ் மட்டும் தனியாக ...

 ஆறு வேறு வேறு சிறுகதைகள். அனுமானுஷ்யமும், பேயும் பொதுவாய் எழுதப்பட்ட கதைகள், ஆறு குறும்  படங்களாய் எடுத்து அதன் கிளைமாக்ஸ் மட்டும் தனியாக இறுதியில் இணைகிறது. இப்படியான விசயங்கள் ஹாலிவுட்டில் அதிகம் இருக்கிறது. ஆந்தாலஜி எனச் சொல்லப்படும் இது போன்ற ஒரு பொதுவான விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை வேறு வேறு களங்களில் எழுதி எடுப்பார்கள். பாலிவுட்டில் கூட இப்போது அறிமுகமான இந்த ஃபார்மேட்டை கோலிவிட்டுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்த 6 அத்தியாயம். இதில் ஆறு குறும்படங்கள்.. எல்லாமே பேய்க்கதைகள். மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட குறும் படங்களாக இருக்கிறது. இப்போதைய உலகில் இணையத்தில் கலக்கும் குறும்படங்களுக்கிடையே இவை முதிர்ச்சியற்ற சுவாரஸ்யமில்லா படமாக போனது பரிதாபம்.

முதல் அத்தியாயம்

இயக்கம் – கேபிள் சங்கர்

தமன், எஸ்.எஸ்.ஸ்டேன்லி –

ஒரு மனநல மருத்துவரிடம் தான் சூப்பர்ஹிரோ என சொல்லிக்கொண்டு வருபவனை பற்றியது. மொத்தப் படமும் ஒரு அறைக்குள் நடக்கிறது. உருவாக்கத்தில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. இதன் முடிவு உங்கள் யூகத்திற்கு என விட்டு விடுகிறார்கள். சுவாரஸ்யத்தை தூண்டினாலும் பாதியில் நிற்பதால் ரசிகர்களை குழப்பும். நடிப்பில் நல்ல தேர்ச்சி கொண்டவர்களால் இது கொஞ்சம் தேறுகிறது. இசை இந்தப்படத்தின் இன்னொரு பலம்.

இரண்டாவது அத்தியாயம்

இயக்கம் – சங்கர் தியாகராஜன்

சுரேஷ், சதன்யா

ஒரு வீட்டுக்குள் பழி வாங்க வரும் பேய் உதவிக்கு வருபவர் யார் என்பது தான் கதை. என்ன எடுக்க நினைத்தார்கள் அவர்களே சொன்னாலும் புரியாது. கற்பனை வறட்சியின் உச்சம் உருவாக்கத்திலும் நடிப்பிலும் சோடை போய் விட்டது. நம் கவனத்தை திருப்பவோ ரசிக்க வைக்கவோ ஏதுமில்லை.

மூன்றாவது அத்தியாயம்

இயக்கம் – அஜயன் பாலா

கிஷோர், மதுஶ்ரீ, பிரசன்னா –

காதலியிடம் காதல் சொல்லி தோல்வியுற்ற பேச்சிலர் ரூமில் என்ன செய்கிறான் என்பது கதை. எரிச்சலை அதிகம் உண்டாக்கிய படம். ஒரு ரூமில் நண்பர்கள் செய்யும் சேட்டை ஆபாசம். அந்த கிளைமாக்ஸ் பயத்திற்கு பதில் பரிதாபத்தை சிரிப்பையும் வரவைக்கிறது.

நான்காவது அத்தியாயம்

இயக்கம் – சுரேஷ்

சஞ்சீவ், கேபிள் சங்கர்.

மாமா வீட்டிற்கு தங்க வரும் ஹீரோ தனியே தங்க நேர்வதும், பேயை சந்திப்பதும் தான் கதை. கற்பனையில் கொஞ்சமாய் முயற்சித்திருந்தும் இதன் உருவாக்கம் இதை பின்னுக்கு இழுக்கிறது. சுத்தமாக லைட்டே இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது. பேயை பற்றிய நினைப்பே நமக்கு தொற்றிக் கொள்ளவில்லை. ஆனாலும் அதர்கு கொஞ்சமேனும் முயற்சி இருந்ததே ஆறுதல்.

ஐந்தாவது அத்தியாயம்

இயக்கம் – லோகேஷ் ராஜேந்திரன்.

விஷ்ணு, சங்கீதா

பேயை காமெடியாக யோசித்திருக்கிறார்கள். பேயால் கன்னி கழியாத ஹீரோ படும் பாடு தான் கதை. வசனங்கள் மிகப்பெரிய பலம். காட்சிகள் வெடிச் சிரிப்பை உருவாக்குகிறது. அந்த கிளைமாக்ஸ் அராஜகம் என்றாலும் சுவாரஸ்யமே. மொத்தத்தில் கொஞ்சம சிரிக்க வைத்து ஆறுதல் படுத்திய கதை இது தான்.

ஆறு அத்தியாயம்

இயக்கம் – ஶ்ரீதர் வெங்கடேசன்

வினோத், அர்விந்த்.

அனுமானுஷ்யம் என்கிற கருத்தை முழுதாய் புரிந்து கொண்ட ஒரே கதை. தன்னை வெளிக் காட்டிக்கொள்ள விரும்பாத ஒரு பெண்ணின் ஓவியமும் அதை வரைய முற்படும் ஓவியர்களும் தான் கதை. உருவாக்கத்தில் நிறைய முதிர்ச்சியும் அழகியலும் நிரம்பி வழிந்த படம். கதை சொல்லி கட்டிப்போடும் திறன் இந்தக் குழுவிற்கு இருக்கிறது. சினிமாவை ஆந்தாலஜி கருத்தையும் முழுவதாய் புரிந்து உருவாக்கியிருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு அருமை. வின்னர் இவர்தான் என அடித்துச் சொல்லலாம்.

இப்படி ஓர் ஐடியா பிடித்து உருவாக்கியதெல்லாம் ஓகே ஆனால் மொத்தமாய் பார்க்கும்போது இம்மெச்சூர்த்தனமாக இருப்பது பெருத்த ஏமாற்றம். மொத்தத்தில் இரண்டு குறும்படங்கள் ஆறுதல் என்பது வருத்தம். இம்மாதிரி கதைகள் மெனக்கெடல்களுடன் உருவாக்கப்பட்டால் பெரிய வரவேற்பை பெரும். ஆனால் இந்த ஆறு அத்தியாயம்  அரை பிரசவ அத்தியாயங்கள்.

மேலும் பல...

0 comments

Blog Archive