நாம் தினமும் சொல்லும் சமாதானங்களும்... அதன் விளைவுகளும்!

சர்க்கரைநோய், இதயநோய் போன்ற நோய்களுக்கு முறையற்ற நம் வாழ்க்கை முறையே காரணம். வாழ்வின் பெரும்பாலான பகுதியை முறையில்லாமல் வாழ்வதால், நம் உடல்...

சர்க்கரைநோய், இதயநோய் போன்ற நோய்களுக்கு முறையற்ற நம் வாழ்க்கை முறையே காரணம். வாழ்வின் பெரும்பாலான பகுதியை முறையில்லாமல் வாழ்வதால், நம் உடல் நோய்களின் கூடாரமாகிவிடுகிறது. 30 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் பலரும் வேலையைக் காரணம் காட்டியே உடல் நலத்தில் அக்கறையின்றி இருப்பார்கள். உடற்பயிற்சி, சீரான உணவுப் பழக்கம் போன்றவற்றைக் கடைபிடிப்பது எளிதானதல்ல. ஆனாலும், அதைக் கடைபிடிப்பதுதான் நல்லது. நடுத்தர வயதுள்ளவர்கள், `உடற்பயிற்சி செய்ய நேரமில்லை, சமைக்க நேரமில்லாததால் ஹோட்டலில் சாப்பிடுகிறேன்’ போன்ற உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் சமாதனங்களைத் தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட தவிர்க்கப்பட வேண்டிய சமாதானங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
15 நிமிடங்கள் உடற்பயிற்சி போதுமே!

தினமும் உடற்பயிற்சி செய்தால் மனமு உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இதற்காக பல மணிநேரம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை.  தினமும் 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தாலே போதும். லிஃப்ட், எஸ்கலேட்டரைத் தவிர்த்து, படிகளைப் பயன்படுத்தலாம். இதுவும் உடற்பயிற்சியே. 30 வயதைத் தொடும் வரை உடற்பயிற்சி செய்ய நேரமேயில்லை என்று சொல்லியே பெரும்பாலானவர்கள் நாட்களைக் கடத்திவிடுகிறார்கள். சமாதானம் சொல்லாமல் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கினால் ஆரோக்கியமாக வாழலாம்.

2. கொஞ்சம் நடக்கலாமே!

கணினி... இது இல்லாமல் இப்பொது எந்தவொரு இல்லையென்றே கூறலாம். ஒரு நாளில் 8 முதல் 10 மணிநேரம் கணினி முன்புதான் உட்கார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்காக வேலைச் சூழலை மாற்றிவிடவா முடியும். தொடர்ந்து  உட்கார்ந்து கொண்டே இருக்காமல் 2 மணிநேரத்திற்கு ஒருமுறையாவது கொஞ்ச தூரம் நடக்கலாம். அதிக நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளைத் தவிர்க்கலாம்.

3. டயட்டுக்கு டாட்டா!

சீரியஸாக டயட் ஃபாலோ பண்ணுகிற பழக்கம் பலருக்கும் இருக்காது. 2, 3 நாட்கள் மட்டும் டயட்டில் இருந்துவிட்டு 4-வது நாள் அதைக் காற்றில் பறக்கவிடுவது நல்லதல்ல. இப்படி விட்டு விட்டு டயட்டைப் பின்பற்றினால், நம்முடைய உடலின் செயல்பாடுகள் மாறத் தொடங்கிவிடும். உடலின் வளர்சிதை மாற்றத்தில் மாற்றம் ஏற்பட்டு, உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

4. வீடிலும் செய்யலாம் ஆரோக்கியமான உணவு!

ஆரோக்கியமான உணவைச் சமைக்க அதிக நேரம் எடுக்குமென பலரும் நினைக்கிறார்கள். அதனால், சமைக்காமல் ஹோட்டல் உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். ஹோட்டலில் வாங்கி சாப்பிட ஆகும் செலவைவிடக் குறைவான செலவில் ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

5. தண்ணீர் அவசியம்!

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்பது அனைவரும் அறிந்ததே. என்றாலும், வேலையின் பரபரப்பில் பலரும் அதை மறந்துவிடுகிறார்கள். இதன் விளைவாக கிட்னியில் கற்கள் உருவாக தொடங்கும். போதுமான அளவு தண்ணீர்  குடிக்காமல் இருந்தால் உடலில் நீர்ச் சத்துக் குறைபாடு ஏற்பட்டு தலைவலி, நீர் கடுப்பு போன்ற பல பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.

6. தவிர்ப்போம் ஜங்க் ஃபுட்!

தினமும் வேலைப் பரபரப்பில் நிதானமாக சாப்பிட நேரமில்லாமல் துரித உணவுகளைப் பலரும் சாப்பிடுகிறார்கள். ஜங்க் ஃபுட் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தருவதாக இருந்தாலும் ‘தினமுமா சாப்பிடுறோம்’ எனச் சொல்லி அதிகமாகச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்கிறார்கள். இதைத் தவிர்த்தாலே போதும், பல உடல்நலப் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.
ல் கன்னியாக இருந்திருக்கிறாள் என அர்த்தம். அந்த விரிப்பை வீட்டின் முன்புள்ள கொடியில் போட்டு ஊருக்கே அதை அறிவிப்பார்கள். அப்படி ரத்தம் படிந்திராவிட்டால் அந்தப் பெண்ணின் அப்பாவும் அண்ணாவும் கல்லால் அடித்தே அந்த பெண்ணை கொன்றுவிடுவார்கள்.

மேலும் பல...

0 comments

Blog Archive