தனுஷை அப்படி பயன்படுத்த அவசியமும் இல்லை, தேவையும் இல்லை- விஜய் சேதுபதி அதிரடி

விஜய் சேதுபதி மிகவும் தைரியமான ஒரு நடிகர். மாஸ், ரொமான்ஸ், பாடல்கள் இருந்தால் மட்டுமே அந்த படம் ஹிட்டடிக்கும் என்பதை நோக்கி போகாமல் வித்திய...

விஜய் சேதுபதி மிகவும் தைரியமான ஒரு நடிகர். மாஸ், ரொமான்ஸ், பாடல்கள் இருந்தால் மட்டுமே அந்த படம் ஹிட்டடிக்கும் என்பதை நோக்கி போகாமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அண்மையில் அவரது நடிப்பில் ஜுங்கா என்ற படம் வெளியாகி இருந்தது. அதில் ஒரு காட்சியில் தனுஷை கலாய்ப்பது போல் ஒரு காட்சி இருப்பதாக ரசிகர்கள் கிசுகிசுத்து வந்தனர்.

தனுஷை ஏன் படத்தில் கலாய்த்தீர்கள் என்று ஒரு பேட்டியில் விஜய் சேதுபதியிடம் ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு விஜய் சேதுபதி கவிஞர் தனுஷ் மட்டும் தானா, மற்றவர்களை கேவலப்படுத்துகிறீர்கள்.

முதலில் அந்த வசனம் எழுதியது கோகுல், தனுஷை கலாய்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, தேவையும் இல்லை, சமகாலத்தில் இருக்கும் நடிகரை ஏன் நாங்கள் அப்படி செய்யப்போகிறோம் என்று அதிரடி பதில் கொடுத்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive