மணியார் குடும்பம் மினி விமர்சனம்

வாழ்ந்த வாழ்க்கையை நினைத்தபடியும் , சூதி லும் .. வாழ்க்கையை கோட்டை விட்ட அப்பா ., காதலியின் தூண்டுதலால் அப்பாவிட்ட தையும் சேர்த்து பிடிக்க ...

வாழ்ந்த வாழ்க்கையை நினைத்தபடியும் , சூதி லும் .. வாழ்க்கையை கோட்டை விட்ட அப்பா ., காதலியின் தூண்டுதலால் அப்பாவிட்ட தையும் சேர்த்து பிடிக்க போராடும் மகன் ... இவர்களே கரு.

கதை: அந்த கிராமமே போற்றும் மணியார் குடும்பம் ஹீரோ உமாபதி ராமைய்யாவின் குடும்பம். அப்பா தம்பி இராமைய்யாவின் பழம் பெருமை பேசியபடியே காலம் தள்ளும் சோம்பேறித்தனத்தால் அவர்கள் வசிக்கும் பெரிய வீட்டின் கதவு, ஜன்னல் கதவை எல்லாம் விற்று தின்று வரும் சூழல் .ஹீரோ குட்டி மணியார் - உமாபதி ராமைய்யாவும் குடி, கும்மாளம் ...என ஜாலி மைனராகவே ஊரைச் சுற்றி வருகிறார்.

இந்நிலையில், நிறைய படித்து விட்டு,கை நிறைய சம்பதிக்கும் தம்பி இராமைய்யாவின் சகோதரியின் மகள் மிருதுளா முரளி முறைப்பையன் குட்டி மணி - உமாபதி ராமைய்யாவை தீவிரமாக காதலிப்பதுடன், அவரை தொழில் அதிபராக உயர்த்தவும் முயற்சி எடுக்கிறார். ஆனால் மிருதுளாவின் முயற்சிக்கு அவரது அப்பா ஜெயப்பிரகாஷே கடும் தடையாக இருப்பதுடன் மிருதுளாவை உமாபதிக்கு கொடுப்பதிலும் விருப்பம் இல்லாமல் இருக்கிறார். காரணம் சோம்பேறிமச் சானின் மகனும் சோம்பேறியாகத்தான் இருப்பான் .... அசைக்க முடியா நம்பிக்கை தான். அவரது எண்ணத்தை தவிடு பொடியாக்கி, தடைபல கடந்து உமாபதி உயர்ந்தாரா? மிருதுளாவின் கரம் பற்றினாரா? இல்லையா ..? என்பது தான்
மணியார் குடும்பம் படத்தின் கதைக்களம் மொத்தமும்.

காட்சிப்படுத்தல்: இயக்குனர், நடிகர் ஜெ.தம்பி இராமையாவின் கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள், இசை மற்றும் இயக்கத்தில் அவரது கலையுலக வாரிசு உமாபதி ராமைய்யா கதாநாயகராக நடித்துள்ள "மணியார் குடும்பம்" திரைப்படத்தை கருத்தாழமிக்க காமெடி படமாக காட்சிப்படுத்தி இருப்பதில் ஜெயித்திருக்கிறார் தம்பி இராமையா.

கதா நாயகர்: உமாபதி ராமைய்யா, குட்டிமணியாக வாழ்ந்து கெட்ட பெரிய குடும்பத்து கிராமத்து இளைஞராக நடிக்கவில்லை.... வாழ்ந்திருக்கிறார். இந்த தம்பி இராமையாவின் வாரிசு தம்பிக்கு டான்ஸ், பைட் ... இரண்டும் சர்வ சாதாரணமாக வருகிறது. நடிப்பிலும் குறை சொல்வதற்கில்லை விறுவிறுப்பான பேச்சு, துறு துறு நடை, நல்ல நிறம், உயரம், அழகிய பாவனை ....எனக்கூடிய விரைவில் தமிழ் சினிமாவை ஆளப்போகும் இளம் ஹீரோக்களில், இந்த தம்பி இராமைய்யாவின் வாரிசும் இடம் பிடிக்கப் போவது நிச்சயம் ... என கட்டியம் கூறுகிறது இத்திரைப்படம்!

கதாநாயகி: நாயகரை நல் வழிக்கு கொண்டு வரும் அத்தை மகளாக கிராமத்து நாயகியாக மிருதுளா முரளி, இப்படக் கதைக்கும், பாத்திரத்திற்கும் ஏற்ற பக்கா தேர்வு என்பதை காட்சிக்கு காட்சி மெய்பித்திருக்கிறார். வாரே வா !

அப்பா நாயகர்: வாழ்ந்து கெட்ட குடும்ப தலைவனாக நாயகரின் அப்பாவாக தம்பி இராமைய்யா, செம கெத்து காட்டியிருக்கிறார். அதிலும் காலையிலேயே எழுந்து பரபரப்பாக குளித்து மூழ்கி, சலவை வேஷ்டி சகிதமாக ஏதோ வேலைக்கு போவது போல் கிளம்பி வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அமர்த்து பேப்பர் படித்த படி பொண்டாட்டியை நாட்டாமை பண்ணும் தம்பி இராமைய்யாவின் அழகோ அழகு.வெத்து, கெத்து காட்டும் கேரக்டர்களில் தம்பி இராமைய்யாவை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது .... என்பதை மீண்டும் ஒருமுறை இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். வாவ்!

பிற நட்சத்திரங்கள்: மிடுக்கான நேர்மையான போலீஸ் அதிகாரியாக சமுத்திரகனி, நாயகியின் அப்பாவாக நாயகர் முன்னேறிவிடக் கூடாது எனும் வரட்டு கெளரவ பிடிவாதக்காரராக ஜெயப்பிரகாஷ், நொடிந்த தொழில் அதிபராக ராதாரவி, திருட்டு தனம் மிக்க கார் டிரைவராக மெட்டை ராஜேந்திரன், நாயகரின் மாமா பொட்டலமாக விவேக் பிரசன்னா, நாயகருக்கு இடையூறு செய்து பின் திருந்தும் இளம் வில்லனாக பவன், நாயகி ரிஜக்ட் செய்ததால் அவரை சமயம் பார்த்து பழிக்கு பழிவாங்கும் மற்றொரு வில்லன் ராகுல், தம்பி ராமைய்யாவின் குடும்ப குத்து விளக்கு சம்சாரமாக ஸ்ரீரஞ்சனி, பாசக்கார பாட்டி ஸ்ரீஜா ரவி.ஒத்த பாட்டுக்கு செமகுத்துப் போட்டு பின் காணாமல் போகும்"பிக்பாஸ்" யாஷிகா ஆனந்த், நாயகியின் அம்மா மீராகிருஷ்ணன், மியூசெ(சி)க்ஸ் சிங்கம் புலி, மற்றொரு வில்லன் ராகுலின் முரட்டு மீசை அப்பா சிங்கமுத்து, வைரபாலன், ஜெ.பி வீட்டு காமெடி வேலையாட்கள்ராமர், தங்கதுரை, ராதாரவி காரில் குடும்பத்தோடு லிப்ட் கேட்டு ஏறி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பறிக்கும் சரவணசக்தி, ஹலோ கிருஷ்ணமூர்த்தி .... உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் மொத்தமும் படத்திற்கும் தங்கள் பாத்திரங்களுக்கும் கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றனர். பலே, பலே!

தொழில்நுட்பகலைஞர்கள்: ஹரி தினேஷ், பிரதீப் தினேஷ் இருவரது சண்டை பயிற்சியும், தினேஷ் மற்றும் ராபர்ட் மாஸ்டரின் நடன பயிற்சியும் இப்படத்தை ஒரு படி உயர்த்தி பிடிக்கின்றன. வைர பாலனின் கலை இயக்கம், கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு, பி.கே .வர்மாவின் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகளில் கோபி கிருஷ்ணாவின் கத்திரி மட்டும் பின் பாதி நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். மற்றபடி மூவரும், அவர்களது வேலை பாடு களும் படத்திற்கு பெரிய ப்ளஸ்.

பலம்: அப்பா தம்பி இராமைய்யாவின் இசை மற்றும் இதம்,பதமான பாடல்களும், முன் பாதி படமும், மகன் உமாபதியின் பைட் & டான்ஸ் மூவ்மென்ட்ஸும் படத்திற்கு பெரும் பலம்.

பலவீனம்: பின் பாதி படத்தில் இடம் பெறும் சில இழுவையான காட்சிகளும், தம்பி இராமையா மகனை தேடி வந்த இடத்தில் மொட்டை ராஜேந்திரனை பாலோ பண்ணிப் போய் அடி உதைப்பட்டு வாமிட் வாயுடன் 20 பது நிமிடங்களுக்கு மேல் டயலாக் பேசும் இடங்களும் சற்று ரசிகனை முகம் சுளிக்க வைக்கின்றன.

இசை & இயக்கம்: இயக்குனர், நடிகர் J. தம்பி இராமையாவின் கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள், இசை மற்றும் இயக்கத்தில், "அடி பப்பாளி பழமே என் தக்காளி ரசமே ... " , " யேன் மனசுக்குள்ள ...." உள்ளிட்ட பரவசமூட்டும்,பளபள பாடல்களும், "காய்ச்சின பால் பிடிக்காது. பீய்ச்சுன்ன பால் தான் பிடிக்கும்...." ,"ஒரு பொண்ணுக்கு கிடைச்ச வாழ்க்கைய வாழறதை விட நினைச்ச வாழ்க்கை வாழறது தான் ரொம்ப பிடிக்கும் .... " , "நாம உயர ணும்னா நாம தான் குட்டிமணி சிந்திக்கணும் உழைக்கணும் ... " ஆகிய அர்த்தம் தொனிக்கும் வசனங்களும்., °வம்சவிருத்தி இல்லாது பேசுவது." , "கிளம்பலை கிளம்பிட்டா ..." ஆகிய இலைமறை காய் இரட்டை அர்த்த காட்சிகளும் படத்தில் ஆங்காங்கே தென்படும் லாஜிக் மிஸ்டேக்குகளை மேஜிக்காக ரசிகனின் கண்களுக்கு தெரியாது மறைத்து விடுவது சிறப்போ சிறப்பு!

அதே போன்று, குதிரை ரேஸ் உள்ளிட்ட சூது வெறி பிடித்தவர்களாலும் "குந்தி தின்று குன்றையும் கரைக்கும் " சோம்பேறிகளாலும் பெரிய வசதியான குடும்பம் கூட எப்படி நிலை குலையும்? என்பதை காட்டியிருக்கும் விதம் அசத்தல்! இவை எல்லாவற்றுக்கும் மேல் படித்து விட்டும், படிக்காமல் விட்டும் ... அடுத்து என்ன செய்வது எனத் தெரியாது குழப்பத்தில் வேலை வெட்டி இல்லாது சும்மா திரியும் இளைஞர்களுக்கு இப்படத்தில் காட்டப்படும் "வின்ட் மில் "மாதிரி எத்தனையோ தொழில்கள் இருக்கிறது... அவற்றை ஊரோடும், உறவோடும் செய்து பெரிதாய் பிழைத்துக் கொள்ளப் பாருங்கள் ... எனகாமெடி படத்தில், நல்ல கருத்தையும் சொல்லி வழிகாட்டியிருக்கும் இயக்குனர் ஜெ. தம்பி இராமைய்யாவை கட்டிப்பிடித்து பாராட்டலாம்.

பைனல்" பன்ச் " : மொத்தத்தில், சில நிறை, குறைகள் இருந்தாலும் கருத்தாழமிக்க காமெடி திரைப்படமாக வந்துள்ள "மணியார் குடும்பம்' - 'மணியான குடும்பம்' ரசிகனுக்கு 'மகிழ்வான திரைப்படம் !" 

மேலும் பல...

0 comments

Blog Archive