கருணாநிதிக்கு மூன்று மனைவி! இறுதி நிமிடத்தில் இரண்டாவது மனைவி ஏன் தேடிவந்தார்?

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து ...

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில், அவரின் வாழ்க்கை தொடர்பான சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.


கருணாநிதிக்கு மூன்று மனைவிகள். 11.11.44 அன்று பத்மாவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த மண வாழ்க்கை மிகவும் நன்றாக சென்றது. அவர் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 1948ல் அவரது மனைவி பத்மாவதி மரணம் அடைந்தார். இந்நிலையில் 1948ல் தயாளு அம்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் கலைஞர் கருணாநிதி.

அந்த திருமணத்திற்கு முன் சில நிமிடம் இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டார். பின் 1966-ல் ராசாத்தி அம்மாவை திருமணம் செய்து கொண்டார்.

இதேவேளை, தயாளு அம்மா வைத்தியாசாலைக்கு சென்று கருணாநிதி இறப்பதற்கு முன்னர் அவரை சந்தித்துள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறியவே அவர் அங்கு சென்றுள்ளார்.

சிறுவயதில் போராட தொடங்கிய அவர் வாழ்க்கையில் பல சாதனைகளை செய்துள்ளார். சினிமா, நாடகம், அரசியல் என்று எல்லா துறையிலும் நாயகனாக மிளிர்ந்தார். அவர் வாழ்க்கை வரலாறு எல்லோரும் கற்று கொள்ள வேண்டிய பொக்கிஷம்.

கருணாநிதியின் சாதனைகள்

இலவச மின்சாரம், கலைஞர் காப்பிட்டு திட்டம், இலவச அரிசி, இடஒதுக்கீடு, பொலிஸ் கமிஷன் இலவசப் பஸ் பாஸ், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், சமத்துவபுரம்,நமக்கு நாமே திட்டம், மாநில சுயாட்சித் தீர்மானம்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் தனித்துறை, இலவசமாக சைக்கிள் ரிக்க்ஷா, இலவச டிவி,உழவர் சந்தைகள், மறுவாழ்வு இல்லங்கள், ஆகியவற்றை கொண்டு வந்தார்.

மொழிப்போர் தியாகிகளுக்கும் ஓய்வூதியம் ,மே முதல் விடுமுறை. இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புத் தேர்வு, மேயருக்கு நேரடித் தேர்தல், சமூக சீர்திருத்தத்திற்காக தனி அமைச்சகம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு,மாணவ, மாணவியர்களுக்கு இலவச தொழிற் கல்வி, மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றியது ஆகிய நடவடிக்கைகளை செய்துள்ளார்.

உள்ளாட்சியில் 33 விழுக்காடு மகளிருக்கு இடஒதுக்கீடு, மினிபஸ் திட்டம்,டைடல் பூங்கா, மாநில திட்டக்குழு, ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம் ,சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், டெஸ்மா சட்டம் ரத்து, பொறியில் கல்விக் கட்டணம் குறைப்பு, மதமாற்றத் தடைச் சட்டம் திரும்பப் பெற்றது, 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக உத்தரவு,தமிழ் கட்டாயப் பாடம், கண்ணகி சிலை திறப்பு ஆகியவற்றை செய்தார்.

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம்,பனைத் தொழிலாளர் வாரியம், மருத்துவம், கார் உற்பத்தி தொழிற்கூடங்கள் தொடங்க அனுமதி, தமிழைச் செம்மொழி, கடல் சார் பல்கலைக் கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் ஆகியவற்றை கொண்டு வந்தார். பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீடு, ஆகியவற்றை செய்தார் .

பல சாதனைகளையும் சேவைகளையும் மக்களுக்காக செய்துவிட்டு இன்று மௌனமாக உறங்கிக் கொண்டிருக்கின்றார்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog