கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு மறுப்பு

திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி கடந்த 10 நாட்களாக காவேரி மருத்த...

திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று மதியம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மெரினாவில் அடக்கம் செய்வதற்கு அனுமதி கேட்டனர். இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் பழனிசாமி ஸ்டாலினிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதாகவும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog