செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் 20 கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் ...

செவ்வாய் கிரகத்தில் 20 கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பல்வேறு நாடுகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இதுபோன்ற ஒரு ஆய்வுக்காக ஐரோப்பாவில் இருந்து அனுப்பப்பட்ட மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற செயற்கைக்கோள் சில புகைப்படங்களை அனுப்பியுள்ளன.

இந்த புகைப்படங்களை ஆய்வு செய்ததில் சிவப்புக் கோளின் துருவ பனி முகடுகள் உள்ள கிழக்குப் பகுதியில் ஏரி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் ஆழம் எவ்வளவு என்பதை கணிக்க முடியவில்லை எனக் கூறியுள்ள விஞ்ஞானிகள், பனி படலத்தில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் சோடியம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகக் கூறியுள்ளனர்.

மேலும் பல...

0 comments

Blog Archive