மோடி பாபாவும் 40 அமைச்சர்களும்!
September 26, 2018மோடி அறிவிக்கும் திட்டத்தால் ஏற்படும் சிரமங்களையும் பாதிப்புகளையும் சொன்னால், நம்மை ஆண்டி இண்டியன் என்றும் தேசவிரோதி என்றும் பாஜகவினர் ஏசுவ...
தேசபக்தி என்பது தங்களுக்கு மட்டுமே சொந்தமான பொருள் என்பதைப்போல பொங்கும் அவர்கள்தான், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையைத் தகர்க்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான காரணமாக இருப்பார்கள். மாடுகளைவிட மனித உயிர்களை இழிவாக கருதுவார்கள்.
1998 முதல் 2004 ஆம் ஆண்டுவரை வாஜ்பாய் பிரதமராக இருந்த சமயத்தில் கார்கில் போரில் இந்திய வீரர்கள் உயிரைக் கொடுத்து பெற்ற வெற்றியை பாஜகவின் வெற்றியாக மாற்றி அரசியல் செய்தார்கள். அந்தப் போர் முடிந்தபிறகுதான் இறந்த வீரர்களை அடக்கம் செய்வதற்காக வாங்கிய சவப்பெட்டியில்கூட பாஜக அரசு ஊழல் செய்திருப்பது அம்பலமாகியது.
பொதுவாகவே காங்கிரஸ் மற்றும் வேறு அரசுகள் ஆட்சியில் இருக்கும்போது பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அத்துமீறல்களை பாஜக பூதாகரமாக்கி பிரச்சாரம் செய்வது வாடிக்கை. பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய ராணுவத்தை பலம்பொருந்தியதாக மாற்றி இரண்டு நாடுகளும் பயந்து நடுங்கச் செய்யமுடியும் என்று மார்தட்டுவது வழக்கம்.
ஆனால், 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபிறகுதான் காஷ்மீரில் இதுவரை இல்லாத அளவுக்கு கலவரம் அதிகரித்தது. இந்திய சீன எல்லையில் டோக்லாம் பகுதியில் சீனா ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் இருக்கிறது.
இந்நிலையில்தான், இந்திய விமானப்படைக்கு ரஃபேல் போர் விமானங்களை வாங்க மோடி செய்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியது. அதைத்தொடர்ந்து, இதுவரை எந்த பிரதமருக்கும் இல்லாத வகையில், எனது பிரதமர் ஒரு திருடர் என்ற அர்த்தப்படும்படி, “மேரா பிஎம் சோர் ஹே” என்ற ஹேஸ் டேக்கில் மோடிக்கு எதிரான பதிவுகளைப் போட்டு உலக அளவில் ட்ரெண்டிங் செய்தனர்.
ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டியதை ஒப்புக்கொள்ளும்வகையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலண்டே ஒரு பேட்டியளித்தார்.
பிரான்சிடமிருந்து மோடி அரசு வாங்க முடிவு செய்த ரஃபேல் போர் விமானங்களைப் பராமரிக்கவும், உதிரிபாகங்களை உற்பத்தி செய்யவும், தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்யவும், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்க ஒப்பந்தத்தில் வகைசெய்யப்பட்டிருந்தது. பிரான்ஸ் அரசு தேர்வு செய்வதற்கு வசதியாக இரண்டு நிறுவனங்களை இந்திய அரசு குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் இந்திய அரசு ரிலையன்ஸ் டிபென்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை மட்டுமே குறிப்பிட்டிருந்தது என்று ஹோலண்டே கூறியிருந்தார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் விமானத் தயாரிப்பில் எந்த முன் அனுபவமும் இல்லாத, 10 நாட்களுக்கு முன் வெறும் 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் அவசரமாக தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை மோடி அரசு பிரான்ஸுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இதைத்தான் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்க்வா ஹோலண்டே அம்பலப்படுத்தி இருக்கிறார்.
இதன்மூலம் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதுவரை எழுப்பிய சந்தேகங்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் உண்மை என்று ஆகியிருக்கிறது. ஹோலண்டே இப்படி பேட்டி கொடுத்ததும் நிதியமைச்சர் ஜெட்லியும், ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் கொந்தளிக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி பாஜக அரசுக்கு எதிராக வெளிநாட்டுடன் சதி செய்கிறது என்று ஜெட்லி கூறினார். ராகுலும் ஹோலண்டேயும் கூடிப்பேசி பாஜக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார்கள் என்று நிர்மலா சீத்தாராமன் கூறினார். பிரான்ஸுக்கே சென்று இதுதொடர்பாக போராடப் போவதாக நிர்மலா கூறினார். ஒப்பந்தம்போடும்போது அதிபராக இருந்தவர் ஹோலண்டே. அவரே, நடந்த உண்மையைச் சொல்கிறார். பொய் சொல்வதில் புகழ்பெற்ற பாஜக அமைச்சர்களோ ஹோலண்டே சொல்வதை பொய் என்கிறார்கள். பிரான்ஸ் நாட்டில் உண்மைக்கு மாறாக பேசியது நிரூபிக்கப்பட்டால் அவருடைய எதி்ர்காலம் என்னாகும் என்பது ஹோலண்டேவுக்கு தெரியும். அங்கு மீடியாக்கள் இந்திய மீடியாக்களைப் போல ஆளும் அரசின் காலடியில் வாலாட்டிக் கொண்டிருப்பவை அல்ல என்பது நிர்மலாவுக்கு புரியாதது அல்ல. ஹோலண்டே சொன்னது குறித்து தற்போதைய அதிபர் மேக்ரானும் மறுப்பு சொல்லவில்லை. இப்போதும் பொய்களால் பூசிமெழுகவே பாஜக அரசு முயற்சி செய்கிறது.
ஆனால், ராகுல் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை. இதே ரஃபேல் போர் விமானத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமும் இந்திய விமானப்படைக்காக வாங்க முடிவெடுத்து விலை பேசியிருந்தது. அப்போது, ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என்று காங்கிரஸ் அரசு விலை பேசியதாகவும், அதே விமானத்தை மோடி அரசு 1,570 கோடி ரூபாய் விலைக்கு வாங்க முடிவு செய்தது ஏன் என்று ராகுல் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்காக ராகுல் மீது உரிமைமீறல் பிரச்சனையை பாஜக கொண்டுவந்தது. அதையும் மீறி, புதிதாக தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு பராமரிப்பு மற்றும் உதிரிபாக உற்பத்தி உரிமையை பெற்றுக் கொடுத்தது ஏன் என்று பொதுக்கூட்டத்தில் பேசினார் ராகுல். அதைத்தொடர்ந்து 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் ராகுல் மீது வழக்குத் தொடுத்திருக்கிறது.
இப்போது, ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட அதிபரே உண்மையைச் சொல்லும்போதும், ராகுலின் கேள்விகளுக்கு பதில் சொல்வதை மோடி தவிர்க்கிறார். மோடி மவுனம் சாதித்தாலும், ராகுல், மோடியின் அனைத்து தில்லுமுல்லுகளையும் திருட்டுகளையும் அம்பலப்படுத்தி நீதியைப் பெற்றுத் தருவதில் உறுதியாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
“ரஃபேல் ஒப்பந்தத்தில் இப்போதுதான் வேடிக்கை தொடங்கியிருக்கிறது. இனிமேல்தான் விஷயம் சுவாரஸ்யமாகப் போகிறது. விஜய் மல்லையா விவகாரம், லலித் மோடி விவகாரம், நீரவ் மோடி விவகாரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமல்படுத்திய விவகாரம் என்று எல்லாவற்றிலும் மோடியின் திருட்டுகள் அம்பலமாகும். மோடி நாட்டின் பாதுகாவலர் அல்ல. கொள்ளைக்காரர் என்பதை ஒவ்வொன்றாக வெளியே கொண்டுவருவோம்…
பழுத்த அனுபவம்மிக்க இந்திய அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தைத்தான் காங்கிரஸ் அரசு பிரான்ஸ் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அந்த நிறுவனத்தின் மரியாதையையும், இந்திய விமானப்படை அதிகாரிகளின் மரியாதையையும் திருட முயற்சி செய்த மோடியிடமிருந்து நீதியைப் பெற்றே தீருவோம்” என்று ராகுல் உறுதியளித்திருக்கிறார்.
இதனிடையே, அலிபாபாவும் 40 திருடர்களையும் போல, மோடி பாபாவும், அவருடைய 40 அமைச்சரவை சகாக்களும் ரஃபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பான கேள்விகளுக்கு எப்போது பதில் சொல்வார்கள் என்று காங்கிரஸ் கட்சியும் கேட்டிருக்கிறது. 2019 தேர்தலில் மக்கள்தான் மோடிக்கு பதில் சொல்லக் காத்திருக்கிறார்கள்.
மாய பிம்பத்தை உருவாக்கி பிரதமரான மோடி, இப்போது நிஜமான ஊழல் வலைக்குள் சிக்கிவிட்டார்.
சந்தேகப்படும் ராஜலட்சுமி! சூப்பர் சிங்கர் செந்தில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்? அந்த சோகமான நாட்கள் எப்படி இருந்தது?
September 26, 2018பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி வாகைச் சூடிய செந்தில் கணேஷிற்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகள்...
இந்நிலையில் அவரின் மனைவியுடன் இணைந்து பாடிய பாடல் ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதில், கணவன், மனைவி இரண்டு பேரும் சந்தேகப்பட வேண்டும் என்றும், அவரின் சந்தேகம் எப்படி அமைய வேண்டும் என்று தெளிவுப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, பலரின் காதல் திருமணத்திற்கு பின்னர் தோல்வியில் முறிந்து விடும். ஆனால், இவர்களின் காதல் இன்றும் வெற்றி வாகைச்சூட காரணம் திருமணத்திற்கு பின்னரும் காதலிப்பது என்று கூறியுள்ளார்கள்.
மேலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடுவதற்கு முன்னர் இவர்களுக்கான சம்பளம் நினைத்த அளவு கிடைக்காது என்ற அதிர்ச்சி தகவலை சூப்பர் சிங்கர் செந்தில் வெளியிட்டுள்ளார்.
சிலர் தருவதாக கூறி, பாதி பணத்தை குறைத்துதான் கொடுப்பார்களாம். அப்போது எல்லாம் மனது உடைந்து நொருங்கி விடும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, தற்போது கலைஞர்களுக்கும், கலைக்கும் ஏற்ற மரியாதை வழங்கப்படுவதில்லை. இவ்வாறான பல சோகமான நாட்களை நகர்ந்துதான் வெற்றிப்பாதைக்கு வந்ததாக ராஜலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டுப்புற கலைஞர்களுக்கு மதிப்பு,மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று இருவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2.0 பற்றி ஷங்கரிடம் ரஜினி வருத்தம்! வெளிவராத பரபரப்பு தகவல்கள்!
September 23, 2018ஷங்கர், ரஜினிக்கு மட்டுமல்ல… தமிழ்சினிமாவுலகத்திற்கே மிக முக்கியமான படமாக விளங்கப் போவது 2.0 திரைப்படம்தான். குடும்பம் குடும்பமாக தியேட்டரு...
இந்த நிலையில்தான் 2.0 படத்தின் புல் எடிட்டர்டு வெர்ஷனை முழுசாக உட்கார்ந்து பார்த்தாராம் ரஜினி. படம் முடிந்ததும் அருகிலிருந்த ஷங்கரிடம் ரஜினி கேட்ட கேள்விதான் பலத்த ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது. “எங்கிட்ட கதை சொல்லும்போது இப்படியில்லையே?” என்பதுதான் அந்த ஷாக் கேள்வி.
படத்தின் கதை என்ன?
செல்போன் டவர்களாலும், அதிர்வுகளாலும் பறவை இனங்கள் அழிந்து வருவதாக விஞ்ஞானம் கூறுகிறது. இதைதான் தன் 2.0 ல் அஸ்திவாரமாக வைத்து கதை பின்னியிருக்கிறார் ஷங்கர். அப்படி பாதிக்கப்படும் பறவை இனங்களில் ஒரு ராட்சத பறவைதான் அக்ஷய்குமார். தன் இனத்திற்கு தீங்கு விளைவிக்கும் மனித இனத்திற்கு பாடம் கற்பிக்க வருகிறது அப்பறவை.
மனிதர்கள் கையிலிருக்கும் செல்போன்களை மட்டுமல்ல, நாடெங்கிலும் இருக்கும் செல்போன் டவர்களை எரித்தும் உடைத்தும் அட்டகாசம் செய்கிறது. கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் செல்போன்களும் பறந்து வானத்தோடு வானமாக ஐக்கியமாகிறது. அக்ஷய் குமாரின் அட்டகாசத்தை அடக்க கிளம்புகிறார் சிட்டி என்கிற ரோபோ ரஜினி. கடும் போராட்டத்திற்குப் பின் ஒரு வழியாக பறவையின் கொட்டம் அடக்கப்படுகிறது. நாடு சகஜ நிலைக்கு திரும்புகிறது.
இந்த கதைப்படி பார்த்தால், எல்லாருடைய பரிதாபமும் பறவை இனங்கள் மீதும், அந்த இனத்திற்காக போராடுகிற அக்ஷய் குமாரின் மீதும்தான் வரும். தான் வில்லனாக சித்தரிக்கப்படுவோம் என்கிற அச்சம் வந்திருக்கிறதாம் ரஜினிக்கு.
அதைதான் நாகரீகமாக ஷங்கரிடம் வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி. அக்டோபர் முதல் வாரத்திற்குள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முடிக்கப்பட்டு என் டேபிளுக்கு வந்தாகணும் என்று கடுமையான உத்தரவை போட்டுவிட்டார் ஷங்கர்.
பறவையே வா… பழத் தோட்டம் காத்திருக்கிறது!
ராஜா ரங்குஸ்கி ஒரு புதிரான விளையாட்டு. தியேட்டரில் பாருங்கள் மக்களே...
September 23, 2018பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடுவில் சில சிறு பட்ஜெட் படங்கள் களத்தில் இறங்கத்தான் செய்கின்றன. அதிலும் நல்ல கதையுள்ள படங்களுக்கு மக்கள் மத்திய...
கதைக்களம்
ஊரில் போலிஸ் இளைஞனாக கதையின் ஹீரோ சிரிஷ். இவருக்கு பெரிதாக குடும்ப பின்னணியெல்லாம் இல்லை. வழக்கம் போல தன் காவல் ரோந்து பணிகளை செய்து வருகிறார். அவருக்கு நண்பனாக சக போலிஸ் தோழன் கல்லூரி வினோத் மட்டுமே.
இடையில் ஹீரோயின் சாந்தினியை சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். எழுத்துதுறையில் ஆர்வலராக இருக்கும் இவருக்கென ஒரு தனி பாலிசி. ஒரு நாள் அவர் குடியிருப்பில் பெண் ஒருவர் கொல்லப்படுகிறார். ரோந்து பணிக்காக சென்ற ஹீரோ இதை கண்டு அதிர்ச்சியாகிறார்.
தொடர்ந்து அடுத்தடுத்த கொலைகள். சம்மந்தமில்லாமல் இவர் இக்குற்ற வழக்கில் சிக்க, நடப்பது என்ன? பின்னணியில் இருப்பது யார்? என புரியாத புதிராக நகர்வது தான் ராஜா ரங்குஸ்கி.
படத்தை பற்றிய அலசல்
ஹீரோ சிரிஷ் மெட்ரோ படத்தை தொடர்ந்து 2 வது படமாக இந்த ஆக்ஷன் கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார். கதையில் இவர் தான் ராஜா. ஒரு சாதாரண போலிஸ் காவலர். காதல் ஒரு பக்கம். பழி மறுபக்கம் என அமைதியற்று அலைகிறார். பொருத்தமான கதையை தான் அவர் தேர்வு செய்திருக்கிறார். அவர் முன்பு நேர்காணல்களில் சொன்னது போல இப்படம் பலருக்கும் பிடிக்கும்.
ஹீரோயின் சாந்தினி பல படங்களில் நடித்த அனுபவத்தை காட்டியுள்ளார். ரங்குஸ்கியாக அவர் கேரக்டரில் இருந்தாலும் ஹீரோவுக்கு நிகரான இடம் இங்கே அவருக்கு என சொல்லலாம். கிட்டத்தட்ட ஒரு ஹீரோயினை மையப்படுத்திய கதை போல என்றால் மிகையல்ல.
இயக்குனர் தரணி தரண் ஜாக்சன் துரை படத்தை கொடுத்து மற்ற படங்களுக்கு மத்தியில் இடம் பிடித்தது போல இப்படத்திலும் அவர் பிடித்து வைத்திருக்கிறார். முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் நம் கவனத்தை அதிகப்படுத்தியுள்ளார்.
கல்லூரி வினோத் இப்படத்தில் ஒரு சப்போட்டிங் ரோல் என்றாலும் சில இடங்கள் அடிக்கும் காமெடிகள் படம் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் புத்துணர்வு கொடுக்கிறார். வாழ்த்துக்கள்.
சுற்றி வளைக்காமல் நேரடியாக விசயத்திற்குள் வரும்படியான காட்சி நகர்வுகளை பார்க்கும் போது பல படங்களை பார்த்து பழகியவர்களுக்கு கொஞ்சம் Uneasy போல தான். ஆனாலும் சம்திங் மிஸ்ஸிங் என சொல்லவைக்கும். அதனால் ஒளிப்பதிவாளருக்கும் இதில் பங்குண்டு.
இசைக்கு யுவன். நாம் சொல்லவா வேண்டும். இந்த படத்திற்கு அவர் பெரிதளவில் சம்பளம் வாங்கவில்லை என்றாலும் தனக்காக இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்து வைத்துள்ளதோடு, அவர்களின் எதிர்பார்ப்பை இங்கேயும் நிறைவேற்றியுள்ளார். சிம்பு இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இதுமட்டுமல்ல. படத்தில் நாம் எதிர்பாராத விசயங்களும் உண்டு. அதை நாங்கள் இங்கே சொல்லப்போவதில்லை.
கிளாப்ஸ்
படத்தில் கதை நகர்வு சலிப்படையாமல் நம்மை இழுத்து செல்வது தான்.
இயல்பான காமெடிகள் காமெடி நடிகர்கள் இல்லை என்ற குறையை மூடிவிட்டது.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கதைக்கு பக்க பலம்.
எதிர்பாராத கிளைமாக்ஸ் Interesting Segment.
பல்ப்ஸ்
ஹீரோ இன்னும் கொஞ்சம் எக்ஸ்பிரஷன்களை கூட்டியிருக்கலாம்.
பாடல்கள் மனதில் இடம் பெறுவது கொஞ்சம் கேள்வியாக தான் இருக்கிறது.
மொத்தத்தில் ராஜா ரங்குஸ்கி ஒரு புதிரான விளையாட்டு. தியேட்டரில் பாருங்கள் மக்களே...
சீமராஜா சினிமா விமர்சனம்
September 14, 2018கரு:தடை பல கடந்து, இரண்டு ஊர் பகைக்கு இடையே வளரும் காதலும் அந்த காதலரின் வரலாற்று பின்னணியும் தான் இப்படக் கரு. கதை: திருநெல்வேலி மாவட்டம்,...
கதை: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள சிங்கம் பட்டிக்கும், புளியம்பட்டிக்கும் இரண்டு ஊருக்கும் பொதுவான ஒரு மார்கெட் சந்தையால் ஆண்டு கணக்கில் பகை. அந்த பகையை சிங்கம்பட்டி சீமராஜா சிவகார்த்திகேயன் எப்படி தன் புத்திசாலிதனத்தால் தீர்த்து, எட்டு வருஷம் நடக்காத கோவில் பரிவட்ட திருவிழாவை நடத்தி காட்டி, தான் உயிருக்கு உயிராய் விரும்பும் புளியம்பட்டி பொண்ணுசுதந்திரதேவி – சமந்தாவை தடை பல கடந்து கரம் பிடிக்கிறார் என்பது தான் "சீமராஜா" படத்தின் கதையும், களமும்.
காட்சிப்படுத்தல்: சிவகார்த்திகேயன் - சமந்தா ஜோடியுடன் சூரி, யோகி பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், நெப்போலியன், லால், சிம்ரன், மனோபாலா, ரஞ்சனி,"பிச்சைக்காரன்" மூர்த்தி, சூப்பர் குட் சுப்பிரமணி... ஆகியோருடன் கீர்த்தி சுரேஷும் கெஸ்ட் ரோலில் நடிக்க, 24 ஏ எம் பட நிறுவனம் ஆர்டி ராஜா தயாரிப்பில், டி.இமான் இசையில் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்", "ரஜினி முருகன்" வெற்றிப் படங்களை சிவகார்த்திகேயனுக்கு தந்த இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் "சீமராஜா. " படத்தில் காமெடி காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம்.... அசத்தல் எனலாம். அப்படி ஒரு செம காமெடி கதையில் கொஞ்சம் அந்த கால ஜமீன் மற்றும் ராஜா காலத்து கதையையும் ப்ளாஷ்பேக்கில் கலந்து ரொம்பவே'பெப்' ஏத்தி மொத்தப் படத்தையும் எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்புல்லாகவும் தரமுடியுமோ..? அத்தனைக்கு அத்தனை அழகாக காட்சிப்படுத்தி தந்திருக்கின்றனர் "சீமராஜா" படக் குழுவினர் என்பது இப்படத்திற்கு பெரிய ப்ளஸ்!
கதாநாயகர்: சீமராஜா எனும் சிங்கம் பட்டி ஜமீனின் ஜாலி இளவரசராகவும், ப்ளாஷ்பேக்கில் சீமராஜாவின் பாட்டனுக்கு பூட்டன், ஓட்டன்... வீரமிகு மன்னர் கடம்ப வேல்ராஜாவாகவும் சிவகார்த்திகேயன், தனக்கு சாலப் பொருத்தமான செம மாஸான கதையிலும், களத்திலும் கலக்கியிருக்கிறார் கலக்கி.
அதிலும், இரண்டு குதிரை பூட்டிய சாரட் வண்டியில் இளவரசர் சீமராஜாவாக, கணக்கு சூரியுடன் சேர்ந்து பண்ணும் அலப்பறையில் ஆகட்டும், அவரது முப்பாட்டன், ஓட்டன் ஜமீன் மன்னர் கடம்ப வேல்ராஜா வாகஒற்றை குதிரையை ஓட்டிச் சென்று வீரத்துடன் போர் புரியும் போது காட்டும் மிடுக்கில் ஆகட்டும் பலே, பலே.... சொல்ல வைக்கிறார்.
'வாழ்றதுக்கு எப்படி நன்பன் முக்கியமா வேணுமோ அதே மாதிரி எதிரியும் கூட இருந்து கிட்டே இருக்கணும்... அப்போதான் மனுஷனுக்கு ஜெயிக்கணுங்கிற வெறி இருக்கும்...", "உழுதவனுக்கு உளுத்துப் போன அரிசி உட்கார்ந்து சாப்பிடுறவனுக்கு பிரியாணி அரிசியா...? " என விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் ஆதரவு குரல் கொடுக்கும் இடங்களில் கூட சிவா செம அசத்தல்.
அதே மாதிரி, "நம்பிக்கை துரோகம் நான் இதுவரை பார்த்திராத ஒன்று... நான் மீண்டும் வருவேன் என் உயிரே போயினும் இந்த மண்னை மீட்க வருவேன் ...." என்றபடி மடியும் இடத்தில் கடம்பராஜா- சிவகார்த்தி, ஏனோ தெரியவில்லை,நம்மையும் கண் கலங்க வைத்து விடுகிறார்.
மேலும், சமந்தா என்ட்ரி காட்சியில் தன் ஆண் புறாக்களைத் தேடி, வளையல் வியாபாரி கெட்-அப்பில் வாட்ச் விற்பனையாளராக அவரிடம் சிக்கும், சிவா, தன்னை அடிக்க கட்டை எடுத்துவரும் சமந்தாவைப் பார்த்து, "தயவு செய்து முதல்ல கட்டையை கீழே போடுங்க, எது கட்டைன்னு தெரியலைன்னு... " கலாய்க்கும் இடம் உள்ளிட்ட பல காட்சிகளில் தன் பாணி குறும்பு கொப்பளிப்புகளிலும் குறை வைக்காதது... படத்திற்கு கூடுதல் பலம்.
கதாநாயகி: புளியம்பட்டி சிலம்பு செல்வி - சுதந்திர செல்வியாக சமந்தா செம. சமத்தா சிலம்பம் எல்லாம் சுற்றும் வீரப்பெண்ணாக மிரட்டியிருக்கிறார்... மிரட்டி. சிவகார்த்தி, படத்தில் ஒரு இடத்தில் சமந்தாவைப் பார்த்து அடிக்கும் "பன்ச்" போன்றே சமந்தா, "சும்மா சாமுத்ரிகா லட்சணுத்துல சலிச்சு எடுத்த சுகர்ல..." அம்மணி அழகு தேவதையாகவும்வசீகரிக்கிறார்.
பள்ளி விழாவில் உடற்பயிற்சி ஆசிரியையான சமந்தாவுக்கு சிவகார்த்தி நல்லாசிரியர் விருது வழங்கி நல் அழகாக இருக்காங்கள்ள... அதான் விருது என்னும் போதும் தியேட்டர் சிரிப்பொலியில் அதிர்கிறது.
மற்றொரு நாயகி: கெஸ்ட் ரோலில் ப்ளாஷ்பேக்கில், மன்னர் கடம்ப வேல்ராஜா - சிவகார்த்தியின் மனைவியாக தலை காட்டியிருக்கும் கீர்த்தி சுரேஷ், எதிர்பார்ப்பை கூட்டுகிறார்.
காமெடியன்: சூரி - சிவகார்த்தி காம்பினேஷன் எத்தனை பிரசித்தி என்பதற்கு "வ.ப. வாலிபர் சங்கம்", "ரஜினி முருகன்" என ஏகப்பட்ட படங்கள்சாட்சி. இந்தப் படமும் அதற்கு சற்றும் சளைத்ததல்ல... "ராஜா நீங்க ஏமாளி ராஜா.. ", "கொன்னுபுடுவீங்க கொன்னு..." என்றெல்லாம் சிவாவையே கலாய்க்கும் அவரது கணக்குப் பிள்ளை மேத்ஸ் - சூரி, செல்பியை சிலேப்பி... என்று பண்ணும் காமெடி கலாட்டாவில் தொடங்கி, ஆம்பளை புறாக்களைத் தேட வந்த இடத்தில், புறாக்களுக்கு, இதுதான் சரவணபவன் என சோள காட்டை காட்டிடுவது எனத் தொடர்ந்து, "பர்ஸ்ட் நைட் பெட்ஷீட்" விற்பது வரை காட்சி காட்சி சிரிப்பு மூட்டுகிறார்…அதிலும், "நான் உள்ள போய் செல்வியை தூக்க போறேன்.... நாலு பேர் அடிச்சு கேட்டாலும் உண்மைய சொல்லாத...i எனும் சிவகார்த்தியிடம் "நாக சைதன்யாவே வந்தாலும் சொல்ல மாட்டேன்..." எனும் இடத்தில், மிரட்டல்.
அதே நேரம், ஜில், ஜங், ஜக் என மூன்று மனைவிகளின் புருஷனான சூரிக்கு நான்காவதாக ஒரு திருமணம் க்ளைமாக்ஸில் இயக்குனர் செய்து வைப்பதும் சில காட்சிகளில் சூரியை சிக்ஸ் பேக்கில் விட்டிருக்கும் துணிச்சலும் கொஞ்சம் ஒவருங்கோ…
உப நாயகர்: சிவாவின், அப்பா கேரக்டரில் அவமானத்தில் சாகும் எட்டுப் பட்டி ராஜாவாக நெப்போலியன், ராஜாவுக்கு உரிய மிடுக்கு காட்டி அடக்கி வாசித்திருக்கிறார்.
வில்லி: சிம்ரன், வில்லன் லாலின் வில்லி மனைவியாக "நக்கத்தரங்கெட்ட நாயி.. நடு ஜாமத்துல எலும்பு கேட்டுச்சாம்.. " , "நீங்கள்ளாம் வேட்டியில தான்டா சண்டியர் கட்டு கட்டுவீங்க..... நான் புடவையிலயே கட்டுவேன் பாக்கறீங்களா? பாக்கறீங்களா...? என புடவையை வரிந்து கட்டி, இந்த ரீ-என்ட்ரியில் விஸ்வரூபம் எடுக்க முயன்றிருக்கிறார். பேஷ், பேஷ்!
வில்லன்: "என்னால ராஜா ஆக முடியாது... ஆனா நான் இருக்கிற ஊர்ல இன்னொரு ராஜா இருந்கக் கூடாது... " என வீம்பு பிடிக்கும் வின்ட் மில் வில்லன் - காத்தாடி கண்ணனாக வில்லன் லால் ஜமாய்த்திருக்கிறார்.
பிற நட்சத்திரங்கள்: யோகி பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மனோபாலா, ரஞ்சனி, "பிச்சைக்காரன்" மூர்த்தி, சூப்பர் குட் சுப்பிரமணி... ஆகியோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.
தொழில்நுட்பகலைஞர்கள்: படத்தொகுப்பு, பக்கா தொகுப்பு, பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியிலும் ஒவியப் பதிவாக மிளிர்கிறது. டி.இமானின் இசையில், வாரன் வாரன் சீமராஜா வழிய விடுங்கடா ...", "மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டுப்பாரேன் என்னைப் பத்தி... ", "பட்டுன்னு ஒட்டுற பொண்ணுங்க .... வரும் ஆனா வராது.... ", "கொடுத்த அடியதிரும்ப திரும்ப கொடுக்கிறான்....", "உன்ன விட்டா எனக்கு யாரும் இல்ல ....", "கொற்றவனே குலக்கொழுந்தே .... ", "எட்டூரு எட்டும் படி ...." உள்ளிட்ட அனைத்துப் பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதம். கூடவே, படத்திற்கு பெரும் பலம்.
பலம்: பொன்ராம்- சிவகார்த்திகேயன்-சூரி-டி.இமான் கூட்டணியும் , "சீமராஜா" எனும் டைட்டிலும் பலம்.
பலவீனம்: அப்படி, பெரிதாக எதுவுமில்லை…
இயக்கம்: பொன்ராமின் எழுத்து, இயக்கத்தில், பூமாரங்கைக் காட்டிலும் - பெருமை வாய்ந்த பண்டைய ஆயுதமான "வளரி" பற்றிய பெருமை பேசியிருக்கும் விதமும், நாய் டைகரை சிறுத்தையாக்கிய, காமெடி மூலம் செல்பி வாட்ஸ் - அப் மோகிகளுக்கு வைத்திருக்கும்குட்டும் அசத்தல்! இவை எல்லாவற்றையும் காட்டிலும், .." விவசாயி என்னக்குய்யா லாபம் பார்த்துருக்கான்? ", "தமிழனோட நிலம் தமிழன் கிட்டதான் இருக்கணும்...", "நாம என்ன செய்றோங்கறதை விட எதிரிங்க என்ன செய்றாங்குகிறதை பார்க்கிறது தான் முக்கியம்." என்றெல்லாம் விவசாயமும், வீரமும் பேசியிருக்கும் விதமும் ஹைலைட்டோ ஹைலைட்!
" தல'க்கே தலை புள்ள பொம்பள புள்ள தான்.... பொம்பள புள்ளன்னா அவ்வளவு கேவலமா என்ன?" ன்னு காமெடி. படத்தில் கிடைத்த கேப்பில் எல்லாம் "பன்ச் "சும், மெஸேஜும் வைத்திருக்கும் இயக்குனர் பொன்ராமுக்கு ஒரு ஹேட்ஸ் ஆப்சொல்லியே ஆகவேண்டும்.
பைனல் "பன்ச்": "சீமராஜா' சிவகார்த்திகேயன்படங்களில் மற்றும் ஒரு 'சிறப்பு ராஜா!"
காட்டை புறக்கணித்த கமல்! ஆடியோ விழாவில் அக்கப்போர்!
September 14, 2018கமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடை...
மங்களேஸ்வரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் என்ற புதியவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவரும் இயக்குனருமான கேயார் பேசும்போது, “தயாரிப்பாளர் ரகுநாதன் சுயமரியாதை அதிகம் உள்ளவர், அதனாலேயே வீம்பு பிடித்தவர். எதற்காகவும் யாரிடமும் போய் நிற்க மாட்டார். திரையுலகில் 45 வருடங்களை கடந்தும் படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை காட்டுகிறது. சினிமா ஒரு பக்கம் அமோகமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ரொம்பவே மோசமாகவும் இருக்கிறது.. இதை சம்பந்தப்பட்ட்டவர்கள் சரி செய்யவேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
கவிஞர் வெண்ணிலா பேசும்போது, “எனது நண்பன் இயக்குனர் மங்களேஸ்வரன், இயக்குனர் கனவுகளோடு சென்னைக்கு கிளம்பி இன்றோடு 20 வருடங்கள் கடந்துவிட்டது. இயக்குனர் பாரதிராஜாவை சந்திப்பதற்கான பரிந்துரை கடிதத்துடன் புறப்பட்ட அவர், இன்று தனது கனவை நனவாக்கி, தனது படத்தின் விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவுடன் அமர்ந்திருப்பதை பார்க்கும்போது மிக பெருமையாக இருக்கிறது” என்றார்.
தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, “ராஜராஜன் சிலை தஞ்சைக்கு மீண்டும் வந்ததில் இருந்து. காவிரி நீராகட்டும், இப்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேசியிருப்பதாகட்டும் நல்ல விஷயங்களாக நடக்கின்ற்ன தமிழக அரசுக்கும் டி.ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கமர்ஷியலாக படம் எடுத்து சம்பாதித்து விட்டு போக நினைக்காமல் சமூக நோக்கிலான படங்களை மட்டுமே எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர் ரகுநாதனை பாராட்ட வேண்டும்.
தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமலை தனது படத்தில் அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ் திரையுலகிற்கு கமல் சார் இவ்வளவு பெருமை சேர்த்துள்ளார் என்றால் அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளர் ரகுநாதனுக்கும் உண்டு. எனக்கு கமல் சார் மீது ரொம்பநாளாகவே, இப்போதுவரைக்கும் ஒரு வருத்தம் உண்டு. இந்த மரக்கதக்காடு குழுவினர் இந்தப்படத்தை தயார்செய்துவிட்டு இதன் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரை தொடர்புகொண்டனர். தயாரிப்பாளர் ரகுநாதன் கமல் சாரை சந்திக்க இரண்டுமுறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசி வரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா இல்லை இந்த தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா என தெரியவில்லை.
நான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன் உண்மையிலேயே நீங்கள் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க நினைத்தீர்கள் என்றால் உங்களை அறிமுகப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு நாட்களாக படம் எடுக்காமல் இருந்து இன்று சமூக மாற்றத்திற்காக ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றால் அவரை பாராட்ட வேண்டிய கடமைஉங்களுக்கு நிறைய இருக்கிறது. நீங்கள் கட்சி ஆரம்பிங்க.. மக்களுக்கு நல்லது செய்யுங்க.. வேண்டாம் என சொல்லவில்லை.. அதற்கு முன்னால் உங்கள் கூட இருப்பவர்களுக்கு, உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது பண்ணனும். அப்புறமா மத்தவங்களுக்கு நல்லது பண்ணலாம். உண்மையில் ரகுநாதனை நீங்கள் பாராட்டினால் தமிழ் சினிமாவே பாராட்டிய மாதிரி” என தனது மனக்குமுறலை கொட்டினார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது, ” இந்த விழாவில் பேசலாமா வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன்.. ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம். பல ஆண்டுகளுக்குப்பின் மூத்த தயாரிப்பாளர்களை இந்த மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.
கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்சநாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு.. இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர்.. இந்தப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார்.
இந்தப்படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் தோன்றியது. கமல் அழகாக இருந்ததால் தான் நான் அவரை சப்பாணி கேரக்டருக்கு தேர்வுசெய்தேன்.. அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போதுதான் மக்களுக்கு அது பிடிக்கிறது. இதே நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள். பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் சப்பாணியாக நடிக்கவைக்க முடிவு செய்திருந்தேன். படத்தை கலரில் எடுத்ததால் கமலை தேர்வுசெய்தேன்.. அப்படி சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள கூடாது.
எங்கங்கே செல்வதற்கு கஷ்டமாக இருக்குமோ, அங்கேயெல்லாம் போய் இயற்கை அழகை தோண்டி எடுத்து வந்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். இந்த திரையுலகின் சாலையை செப்பனிட போகிறவர்கள் இவர்களை போன்ற இளைஞர்கள் தான்.
மூன்று நாட்கள் நம்மை வீட்டுக்குள் அடைத்துவைத்தாலே நம்மால் உட்கார முடியாது. கடந்த 27 வருடமாக சிறை எனும் நான்கு சுவருக்குள் அடைபட்டுக்கிடக்கும் அந்த ஏழு பேரும் மீண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும். அதற்கு தமிழக அரசு பரிந்துரைக்க முடிவெடுப்பதோடு நின்று விடாமல் அழுத்தம் கொடுக்கவேண்டும்.. அவர்கள் இனி உள்ள காலத்திலாவது நிம்மதியாக வாழட்டும்” என்றார்.
விழாவின் முடிவில் ‘மரகதக்காடு இசைத்தகட்டை பாரதிராஜா வெளியிட்டார்
‘சந்திரமுகி’ படத்தில் சிம்ரன் விலகியது ஏன்? வெளியான காரணம்!
September 14, 2018ரஜினி நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ படத்தில் சிம்ரன் நடிக்க முடியாமல் போனதற்கு உண்மையான காரணம் தற்போதுதான் தெரியவந்துள்ளது. ரஜினி திரைப் ப...
ரஜினி நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ படத்தில் சிம்ரன் நடிக்க முடியாமல் போனதற்கு உண்மையான காரணம் தற்போதுதான் தெரியவந்துள்ளது.
ரஜினி திரைப் பயணத்தில் மறக்க முடியாத மெகா ஹிட் படங்களில் ஒன்றுதான் ‘சந்திரமுகி’. இந்தப் படம் 2005ல் வெளியானது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும்படத்தில் பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர், விஜயகுமார் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் நயன்தாரா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை சிம்ரன்தானாம். இந்தப் படத்திற்காக முதல் 3 நாட்கள் படப்பிடிப்பில் எல்லாம் கலந்து கொண்டார் சிம்ரன். அந்த நேரத்தில் நடிகை சிம்ரன் தான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்த விஷயத்தை இயக்குனர் பி.வாசு மற்றும் தயாரிப்பு நிர்வாகத்திடம் சிம்ரன் கூறினார். அவர்கள் எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் சிம்ரனுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார்களாம். அப்புறம்தான் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமானார்.
அப்போது ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை விட்டுவிட்டேன் என்று வருத்தப்பட்டாராம் நடிகை சிம்ரன். அதற்குப் பலனாக தற்போது ‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மிக்க சந்தோஷப்பட்டாராம் நடிகை சிம்ரன்.
வழக்கமான மசாலா படங்களில் இருந்து தப்பித்து புதிய அனுபவத்தை பெற ஒரு யூடர்ன் அடித்து வரலாம்.
September 14, 2018தமிழ் சினிமாவில் தற்போது நாயகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளிவரத்தொடங்கியுள்ளது. நயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா வ...
நயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா வரிசையில் சமந்தா களமிறங்கியிருக்கும் படம் தான் யுடர்ன்.
கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான இப்படத்தை அப்படத்தின் இயக்குனரான பவன் குமாரே தமிழ், தெலுங்கிலும் இயக்கியுள்ளார்.
இவர் ஏற்கனவே லூசியா என்ற படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இப்படமும் தமிழில் எனக்குள் ஒருவன் என்றபெயரில் வெளியானது.
தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்துவரும் சமந்தாவுக்கு இப்படமும் வெற்றி கொடுத்ததா பார்ப்போம்.
கதைக்களம்
சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் தொடர்ந்து பல கொலைகள் நடக்கிறது. இதை பற்றி தொடர்ந்து பத்திரிக்கையாளரான சமந்தா எழுதி வருகிறார்.
இதனால் இவரின் மீது போலிஸ்க்கு சந்தேகப்பார்வை விழுகிறது. போலிசாக ஆதி நடித்துள்ளார்.
இதன் பின் பல பிரச்சனைகளை சந்திக்கிறார் சமந்தா. கடைசியில் அந்த விபத்துக்கான காரணம் என்ன? மரணம் தடுக்கப்பட்டதா? சமந்தா பிரச்சனையிலிருந்து தப்பித்ததா என்பதே மீதி கதை.
பல முடிச்சுகளுடன் சுவாரஸ்யமாக செல்லும் இப்படத்தில் கமெர்ஷியலுக்காக பாடல்கள் என எதையும் சேர்க்கவில்லை.
படத்தை அதிகம் இழுக்காமல் 2 மணிநேரத்தில் முடித்துள்ளனர். யூகிக்க முடியாத பல காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
படத்தில் சமந்தா, ஆதியைப்போல மற்ற கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், ராகுல் ரவீந்திரன், பூமிகா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பூர்ணசந்திர தேஜஸ்வியின் பின்னணி இசையில் திரில்லரை மெயிண்டெயின் பண்ணியுள்ளார். ஓளிப்பதிவுக்காக மெனக்கெட்டிருக்கிறார் நிகித் பொம்மிரெட்டி.
க்ளாப்ஸ்
சமந்தா உள்ளிட்ட மற்ற நடிகர்களின் நடிப்பு
வலுவான திரைக்கதை, யூகிக்க முடியாத முதல்பாதி காட்சிகள்
பல்ப்ஸ்
இரு மொழிகளில் தயாரானதால் பல இடங்களில் டப்பிங் செட் ஆகவில்லை.
சில இடங்களில் வரும் நாடகத்தன்மையான வசனங்கள்
மொத்தத்தில் வழக்கமான மசாலா படங்களில் இருந்து தப்பித்து புதிய அனுபவத்தை பெற ஒரு யூடர்ன் அடித்து வரலாம்.
தொட்ரா / விமர்சனம் - எலும்பை முறிப்பார்கள் என்று எதிர்பார்த்தால், கொஞ்சம் கொஞ்சம் சுளுக்கி அனுப்புகிறார்கள்!
September 07, 2018ரத்தம் குடிக்கும் காட்டேரிகள் முன், சத்தம் போடாமல் சரிந்து விழும் காதலர்களை பற்றிய கதைதான் ‘தொட்ரா’! தலைப்பில் இருக்கிற கரண்ட், திரையிலும் ...
பழனி அடிவாரத்தில் வசிக்கும் ப்ருத்விராஜுக்கு, அதே ஏரியாவிலிருக்கும் சாதிப் பிரமுகரான எம்.எஸ்.குமாரின் தங்கை வீணா மீது லவ் வருகிறது. கடையில் விற்கும் கை முறுக்கு ரேஞ்சில் காதலை டீல் பண்ணுகிறார்கள் இருவரும். ஒரு எக்குதப்பான நேரத்தில் எஸ்கேப் ஆகிற ஜோடிகளை தேடி, எம்.எஸ்.குமார் அண் கோ அலைகிறது. காதல் ஜோடியை பலவந்தமாக பிரிக்கிற அண்ணன், கோர்ட் உத்தரவின் பேரில் தங்கையை அங்கு கூட்டிவர, கோர்ட்டின் முடிவென்ன? காதல் வென்றதா? இதுதான் க்ளைமாக்ஸ்.
படம் சூடு பிடிப்பதற்கு சுமார் முக்கால் மணி நேரம் ஆகிவிடுகிறது. அதுவரைக்கும் உப்புசப்பில்லாத சீன்களால் தள்ளு வண்டி டிரைவர் ஆகிவிடும் அறிமுக இயக்குனர் மதுராஜ், அதற்கப்புறம் அதே தள்ளு வண்டியை திடீர் பென்ஸ் காராக்கி திகைக்க விடுவது சிறப்பு. அதுவும் காதல் ஜோடிக்கு சங்கர், திவ்யா என்று பெயர் வைத்திருப்பதன் மூலம், அண்மையில் நடந்த ஆணவக்கொலையை கண்முன் கொண்டு வருகிறாரா… பதறுகிறது மனசு. பட்ட பகலில் நட்ட நடு சாலையில் நடந்த அந்தக் கொலை கிளிப்பிங்சை ரெபரென்ஸ் ஆக வைத்துக் கொண்டு படம் பிடித்திருக்கிறார்கள். அந்த நிமிஷக் காட்சிகள் மட்டும் திக் திக்!
ப்ருத்விராஜுக்கு ஏற்பட்ட தொடர் சறுக்கலை இந்தப்படம் முட்டுக் கொடுத்து நிமிர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. நமது கடைசி துடுப்பு இதுதான் என்பதை உணர்ந்து போராடியிருக்கிறார் இவரும். குறிப்பாக அந்த கல் குவாரியில் அடிபட்டு கதறும் காட்சிகள், பதற வைக்கிறது.
ஹீரோயின் வீணாவுக்கு கதை பேசும் கண்கள். தேவைப்படுகிற அளவுக்கு கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார். ஒரு பக்கம் பாசக்கார அண்ணன். இன்னொரு பக்கம் உயிரை கொடுக்கும் லவ்வர். என்ன முடிவெடுப்பது என்று தவியாய் தவிக்கும் வீணா, அடர்த்தியான கதைகளுக்கேற்ற அல்டிமேட் வரவு!
வில்லன் எம்.எஸ்.குமாருக்கு கை கூடி வருகிறது நடிப்பு. அறிமுக நடிகர் என்று சொல்ல முடியாதளவுக்கு பர்பெக்ஷனில் கலக்குகிறார். கடைசிவரைக்கும் இந்த அண்ணன் தன் சாதி மீது தீராத பற்று கொண்டிருந்தால், அந்த கேரக்டர் சறுக்கியிருக்காது. படமும் சறுக்கியிருக்காது. தேவையில்லாத காம்ப்ரமைஸ்!
பணம் பறிக்க என்னென்னவோ வியாபாரம். ஆனால் ஏ.வெங்கடேஷ் செய்யும் காதல் வியாபாரம் புதுசோ புதுசு. (இதெல்லாம் நிஜத்தில் நடப்பதாக இயக்குனர் பிரஸ்மீட்டில் தெரிவித்ததால் மட்டுமே இதை நம்ப வேண்டியிருக்கிறது) பணத்தின் மீது குறி வைப்பவர் திடீரென ஹீரோயினை பயன்படுத்த அலைவதுதான் படு பயங்கர டிராமாவாக இருக்கிறது.
கண்ணழகி சூசன், மைனாவுக்கு பின் இந்தப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். அவரது கோவக்கார இமேஜூக்கு மீண்டும் ஒரு பெருந்தீனி.
ஆர்.என்.உத்தமராஜாவின் இசையில் பாடல்கள் ஈர்ப்பு. புதியவர் என்றாலும், பின்னாளில் தவிர்க்க முடியாத இடத்தை பிடிப்பார் என்று நம்ப வைக்கிற ட்யூன்கள் அத்தனையும்.
ஒளிப்பதிவாளர் செந்திலின் பல்வேறு கோணங்களை விடுங்கள். அந்த கொலைக்காட்சி… அப்படியே கண்முன் வந்து கலங்க விடுகிறது.
தொட்ரா… எலும்பை முறிப்பார்கள் என்று எதிர்பார்த்தால், கொஞ்சம் கொஞ்சம் சுளுக்கி அனுப்புகிறார்கள்!
ரஜினி நடிக்க வேண்டிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கின்றாரா?
September 07, 2018ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கின்றார் என்றால் அந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் ரஜினிகாந்...
அப்படியிருக்கையில் கௌதம் மேனன், வெற்றிமாறன், ரஞ்சித், மணிகண்டன் ஆகியோரிடம் கதை கேட்டார், இதில் மணிகண்டன் கூறிய கடைசி விவசாயி கதை ரஜினிக்கு பிடித்து இருந்ததாம்.
பிறகு என்ன காரணம் என்று தெரியவில்லை, அந்த படம் தொடங்கவே இல்லை, மணிகண்டனும் இந்த கதை ரஜினி நடித்தாலே பெரியளவில் ரீச் ஆகும் என காத்திருந்துள்ளார்.
தற்போது இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது, விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மீண்டும் பிரமாண்ட படத்திற்காக உடல் எடையை ஏற்றி, இறக்கும் விக்ரம்
September 06, 2018பாலிவுட்டில் மிக பிரமாண்டமாக தயாராக உள்ள ‘மாஹாவீர் கர்ணன்’ படத்தில் கர்ணனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சியான் விக்ரம், அந்த கதாபாத்திரத்திற்கா...
பிரமாண்ட படம்:
‘துருவ நட்சத்திரம்’, ‘சாமி 2’ படப்படிப்பு முடிந்து இறுதிக் கட்ட பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதையடுத்து பாலிவுட்டில் ரூ. 300 கோடி செலவில் உருவாக உள்ள ‘மஹாவீர் கர்ணன்’ படத்தில், கர்ணனாக நடிக்க விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முதலில் ப்ரித்வி ராஜ் நடிக்க முய்ற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு கால்ஷீட் வழங்க முடியாத சூழல் உள்ளதால், கர்ணனாக விக்ரமை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
உடம்பை கூட்டும் விக்ரம்:
சாமி 2 படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டதால், கர்ணன் படத்திற்காக, பீமா படத்தை விட உடல் எடையை கூட்டி, ஆஜானுபாகுவான உடலுடன் ‘கர்ணன்’ ஆக நடிக்க விக்ரம் தயாராகி வருகின்றார்.
இதற்காக வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை விக்ரம் தவிர்த்து வருகின்றார்.
இப்போ சென்னைக்கு வாங்க…! வில்லனுக்கு இப்படியொரு பாராட்டா?
September 03, 2018இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த அனுராக் காஷ்யப்பிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கடந்த வெள்ளியன்று வெளியான படம் இமைக்கா நொடிகள். அஜய் ஞ...
இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த அனுராக் காஷ்யப்பிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கடந்த வெள்ளியன்று வெளியான படம் இமைக்கா நொடிகள். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா ஆகியோர் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. வெளியான 4 நாட்கள் முடிவில் இமைக்கா நொடிகள் தமிழகம் முழுவதும் ரூ.10.25 கோடி வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கோடியாய் கோடியாய் கொட்டும் நயன்தாராவின் இமைக்கா நொடிகள்!
எனினும், இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அனுராக் காஷ்யப் இன்னமும் மும்பையில் தான் இருக்கிறார். இது குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில், அனுராக் காஷ்யப் சார் ஏன் இன்னமும் மும்பையில் இருக்கிறீர்கள்? நீங்கள் சென்னைக்கு வருவதற்கு இது தான் சரியான நேரம். உங்களது இமைக்கா நொடிகள் படத்திற்கு என்னவொரு கைதட்டல், விசில் தெரியுமா? தமிழ் சினிமாவிற்கு உங்களைப் போன்று தான் ஒரு வில்லன் தேவை என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுநீரக கற்களால் அவதியா? இதை எல்லாம் சாப்பிடக்கூடாதாம்
September 03, 2018பிரச்சினைகளில் சிறுநீரக கற்கள் ஒன்றாகிவிட்டது. போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரக கற்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக அமைகின...
போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது சிறுநீரக கற்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
சிறுநீரகத்தில் கற்கள் வருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று வெளியில் இருந்து வருவது. இது, உணவுப்பழக்கம், குடிதண்ணீர், வாழ்க்கை முறை போன்ற காரணிகளை உள்ளடக்கியது.
இன்னொன்று உடம்புக்குள்ளேயே ஏற்படும் பாதிப்பு. இந்த முறையில் பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, பரம்பரை பரம்பரையாக சிறுநீரக கல் பாதிப்பு கடத்தப்படுவது ஆகும்.
முதலில் முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்கு மாறி அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும். பின் தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவி காய்ச்சல் ஏற்படுத்தும். சிறுநீரில் ரத்தம் வெளியேறும். இவையே சிறுநீரக கல் அடைப்புக்கான அறிகுறிகள்.
சிறுநீரக கல்லை வெளியேற்ற, வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள் அவை என்ன என்பதை பார்ப்போம்.
தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு, 2 முறையாவது குடிக்க வேண்டும்.
பார்லியை நன்கு வேக வைத்து, நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.
வாழைத்தண்டு முள்ளங்கி சாறு, 30 மிலி. அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம், சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினா கீரையை தொடர்ச்சியாக, சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.
சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள், சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சாப்பிடக்கூடாதவை
உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல் தவிர்க்க வேண்டும்.
ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா தவிர்க்க வேண்டும்.
கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
பொறுமை இருந்தால் நீங்களும் கண்டிப்பாக இந்த 60 வயது மாநிற மனிதனை தேடலாம்.
September 03, 2018தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் ராதாமோகன். ஆனால், சமீபமாக இவர் ஒரு ஹிட் கொடுத்து ரீஎண்ட்ரி ஆக மிகவும் முயற்சி செய்து வருகின்றா...
கதைக்களம்
விக்ரம் பிரபு தன் அப்பா பிரகாஷ்ராஜை பார்க்க மும்பையில் இருந்து சென்னை வருகின்றார். பிரகாஷ்ராஜுக்கு தன்னையே யார் என்று தெரியாத அளவிற்கு மறதி உள்ளது.
அதை தொடர்ந்து ஹோமில் இருக்கும் தன் அப்பாவை துணி எடுக்க அழைத்து செல்கின்றார் விக்ரம் பிரபு. அப்போது தன் கவனக்குறைவால் அப்பாவை ஹோம் வாசலிலே மிஸ் செய்கின்றார்.
பிறகு தன் அப்பாவை தேடி தெரு தெருவாக விக்ரம் பிரபு அலைய, ஒரு போலிஸை கொலை செய்துவிட்டு வரும் சமுத்திரகனியிடம் பிரகாஷ்ராஜ் சிக்குகின்றார். சமுத்திரக்கனிக்கு எவிடன்ஸ் ஏதும் இருக்க கூடாது அதனால் பிரகாஷ்ராஜை கொலை செய் என பாஸிடம் இருந்து ஆர்டர் வருகின்றது.
இதை தொடர்ந்து விக்ரம் பிரபு தன் அப்பாவை கண்டுபிடித்தாரா, சமுத்திரக்கனி பிரகாஷ்ராஜை என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
விக்ரபு பிரபு நீண்ட வருடங்களாக ஒரு ஹிட் படத்திற்கு போராடி வருகின்றார். இந்த படம் அவருக்கு ஹிட் கொடுக்குமா என்று தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக நல்ல பெயரை வாங்கி கொடுக்கும்.
பிரகாஷ்ராஜ் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கின்றார், அனைத்தையும் மறந்து அவர் தன் மகன் பெயர் சிவா மட்டுமே நினைவில் வைத்து சிவா சாப்பிட்டாயா, சைக்கிள் ஓட்டினாயா என்று அவர் கேட்கும் இடம் கண் கலங்க வைக்கின்றது.
சமுத்திரக்கனி ஒரு கொலையை செய்துவிட்டு, அதை மறைக்க குமரவேல் குடும்பம், பிரகாஷ்ராஜ் ஏன் தன் கூடவே இருக்கும் பையனை கூட கொல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றார். ஆனால் அவர் எப்படி இதிலிருந்து வெளியே வந்து சாதாரண மனிதனாக மாறத்துடிக்கின்றார் என்பதையும் மிக அழகாக காட்டியுள்ளனர்.
படத்திற்கு மிகவும் பக்க பலமாக இருப்பது விஜியின் வசனமும், இளையராஜாவின் பின்னணி இசையும் தான். அன்பு தான் இந்த உலகம் அதை வெளியில் காட்டாமல் நாம் தான் உள்ளுக்குள்ளே அடக்கி வச்சுகிறோம் போன்ற வசனம் ரசிக்க வைக்கின்றது.
ஆனால், இத்தனை இருந்தும் மிக பொறுமையாக செல்லும் திரைக்கதை, படத்திற்கு இந்த ஸ்லோ தேவை என்றாலும் ஜென்ரல் ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்களா ராதாமோகன்.
க்ளாப்ஸ்
நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு, அதிலும் பிரகாஷ்ராஜ் செம்ம ஸ்கோர் செய்கின்றார். விக்ரம் பிரபு- ‘மேயாத மான்’ இந்துஜாவின் காட்சிகள் பிரகாஷ்ராஜ் சொன்ன கதை போல் கிளைமேக்ஸ் வரும் விதம் ரசிக்க வைக்கின்றது.
படத்தின் வசனம் மற்றும் குமரவேல் மதுமிதா தம்பதிகளின் யதார்த்தமான காமெடி.
பிரகாஷ்ராஜ் தன் காதல் கதையை சொல்லும் இடம் கவிதை போல் உள்ளது.
இளையராஜா பின்னணி இசை.
பல்ப்ஸ்
மிக மெதுவாக நகரும் திரைக்கதை.
சமுத்திரக்கனி திருந்தி வாழவேண்டும் என்று நினைக்கும் போது அப்படி ஒரு முடிவு தேவையா...
மொத்தத்தில் கொஞ்சம் பொறுமை இருந்தால் நீங்களும் கண்டிப்பாக இந்த 60 வயது மாநிற மனிதனை தேடலாம்.