கதை சொல்லித் தப்பிக்கும் 'வேதாளம்' விஜய் சேதுபதி... மாதவனிடம் மாட்டுகிறாரா? - ‘விக்ரம் வேதா’ விமர்சனம்
July 27, 201716 கொலை செய்த தாதா ‘வேதா’ விஜய் சேதுபதியைப் பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார், 18 என்கவுண்டர் செய்த போலீஸ் ‘விக்ரம்’ மாதவன் இருவருக்குமா...
படத்தின் கதையைப் பற்றிச் சொல்லும் முன், விஜய் சேதுபதிக்கு, படத்தில் அவர் கொடுப்பதுபோலவே ஸ்பெஷல் ‘Gift-U’ கொடுக்கலாம்! ’வேதா... வேதா’ என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து, திரையில் வரும் நொடியிலேயே திரையை ஆக்ரமிக்க ஆரம்பிக்கிறார். அதன்பின் க்ளைமாக்ஸ் வரை அதகளம் பண்ணுகிறார் நடிப்பில். வடையை வலது கையில் பிடித்து அசால்ட் நடையில் முதுகு காட்டி சரண்டர் ஆக எண்ட்ரி ஆவதில் தொடங்கி, நம்மை சரண்டர் செய்கிறார். வசன உச்சரிப்பில் அதே ஸ்பெஷல் கெத்து. தம்பி கதிர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பாசமும், தாதாயிசத்தின்போது குரோதமுமாய் டபுள் டமாக்கா வெடி வெடிக்கிறார். ‘உனக்கு கத கேட்டுப் பழகிடுச்சு.. எனக்கு கத சொல்லியே பழகிடுச்சு’ என்றபடி மாதவனை மடக்கும் இடங்கள் மாஸ்!
நேர்மையான போலீஸ் மாதவன் வடசென்னையின் தாதாயிசத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, தாதா விஜய் சேதுபதியின் கேங்கை சுற்றி வளைப்பதில் ஆரம்பிக்கிறது கதை. அதன்பின் தானாக சரண்டராகும் விஜய் சேதுபதி, மாதவனுக்கு ஒரு கதை சொல்கிறார். அங்கே ஆரம்பித்து ஒவ்வொரு முறை மாட்டும்போதும் கதை சொல்வதும், அந்தக் கதையின் முடிச்சை அவிழ்க்க மாதவன் முயலும்போது அவருக்கு வேறு சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதுமாகச் செல்கிறது திரைக்கதை. இறுதியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது, விக்ரம், வேதாவைப் பிடிக்கிறாரா.. அவர்மீதும் என்கவுண்டர் ஆயுதம் பாய்கிறதா என்பதை வெள்ளித்திரையில் கண்டுகொள்ளுங்கள்!
இறுக்கமான முகத்துடன், கட்டுமஸ்தான உடல்வாகுடன் இந்தக் கதாபாத்திரத்துக்காகத் தன்னைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார் மாதவன். அந்த ஆரம்பக் காட்சியின், நீளமான சிங்கிள் ஷாட்டில் ஒவ்வொரு இன்ச்சிலும் அநாயாச நடிப்பால் அசத்துகிறார். மனைவி ஷ்ரதா ஸ்ரீநாத்துடனான லவ் மொமண்ட்ஸில், சாக்லேட் பாயாக மாறி ரொமான்ஸ் காட்டுகிறார். விஜய் சேதுபதியின் கதை முடிச்சை அவிழ்க்கும்போது குழம்புவதும், விடை கிடைத்ததும் துள்ளுவதுமாய் நடிப்பின் சீனியாரிடியை நிரூபிக்கிறார்.
ஷ்ரதா ஸ்ரீநாத் சும்மா வந்து போகாமல், முக்கிய பங்கு வகிக்கிறார். ‘சந்திரா’வாக வளையவரும் வரலட்சுமியின் கதாபாத்திரம், கொஞ்சம் வித்தியாசம். வரும் காட்சிகளில் எல்லாம் எக்ஸ்ப்ரஷன்ஸில் கவர்கிறார். இடது கையில் சாப்பிட்டுக்கொண்டே ‘வேதான்னா யாரு?’ என்று விஜய் சேதுபதி கேட்க ‘அக்காங்’ எனும்போது க்யூட்! ‘சேட்டா’வாக வரும் ஹரீஷ் பேரடியும், விஜய் சேதுபதியின் தம்பியாக கதிரும் நல்ல கதாபாத்திரத் தேர்வு!
வழக்கமான திருடன் போலீஸ் கதையை, வித்தியாசமான கேப்ஸ்யூலில் கொடுத்திருக்கும் திரைக்கதையும், இயக்கமும் புஷ்கர் - காயத்ரிக்கு சபாஷ் போட வைக்கிறது. ஒவ்வொரு முறை மாட்டிக்கொள்கிற வேதாளமான விஜய் சேதுபதி, விக்கிரமாதித்தனான மாதவனிடம் கதை சொல்வதும், அதற்கு விடை சொல்லும்போதே வேறு பல விடைகள் மாதவனுக்குக் கிடைப்பதுமாய் சரவெடி கொளுத்துகிறது கதை. சீரியஸான காட்சிகளிலும் மெலிதான நகைச்சுவையை படம் நெடுகக் கொண்டு சென்றிருக்கிறார்கள். படத்தில் அடிக்கடி வரும் பின்னி மில் காட்சியில் ‘இந்த மில்லு வேலை செய்யறதுக்காக வெச்சிருக்காங்களா, இல்ல நம்மள மாதிரி ஆளுக சண்ட போடறதுக்காக வெச்சிருக்காங்களா?’ என்று விஜய் சேதுபதி கேட்பது ஒரு உதாரணம். அந்த ‘நல்லி எலும்பு பரோட்டா’ சாப்பிடும் வி.சேவின் டுட்டோரியல், படம் முடிந்ததும் பரோட்டா கடையைத் தேடவைக்கிறது.
மணிகண்டனின் வசனங்கள் தேவைக்கேற்ற நச். ‘முட்டை உடைஞ்சுடுச்சுனா முட்டை உடைஞ்சுடுச்சேனு பதறக்கூடாது, உடனே ஆம்லேட்டு போட்டு சாப்பிட்டு பிரச்னையை முடிச்சடணும்’, ‘போலீஸ் மகன் போலீஸாதான் இருப்பான். கிரிமினல் மகன் கிரிமினலாதான் இருப்பான்றது, என்ன லாஜிக். அப்போ காந்தி அப்பா காந்தியா, கோட்சே அப்பா கோட்சேவா?' என்று விஜய் சேதுபதிக்கான வசனங்களில் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாய் ஈர்க்கிறார்.
பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவு வடசென்னையையும், பின்னி மில்லையும் அச்சு அசலாகக் கண்முன் கொண்டு வருகிறது. படம் நெடுக வந்து, படம் முடிந்த பின்னும் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது சாம் சி.எஸ்ஸின் ‘தனனனனன நா... தனனனனன நா’ பி.ஜி.எம். அனிருத் குரலில் ‘யாஞ்சி யாஞ்சி’யில் கொஞ்சும் மெலடியில் கவர்ந்து, ‘டசக்கு டசக்கு டும் டும்’மில் கலக்கல் நண்பனாய் ஆடவைக்கிறார்.
முதல்பாதியின் விஜய் சேதுபதி எண்ட்ரிக்குப் பிறகு படம் கொஞ்சம் நொண்டியடிக்கிறது. தாதாவான விஜய் சேதுபதிக்கே தலைமையாக இருக்கும் ‘சேட்டா’ ஹரிஷ் பேரடி என்ன ஆகிறார்? அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அருமைதான்.. ஆனால் அத்தனை இண்டலிஜெண்ட் மாதவன், எல்லாவற்றையும் அந்தக் காட்சியில்தானா யோசிப்பார்? அதற்குமுன் கொஞ்சமும் சந்தேகம் வந்திருக்காதா?
இப்படிச் சில கேள்விகள் இருந்தாலும், தெளிவான திரைக்கதையும், விஜய் சேதுபதியின் க்ளாஸ் நடிப்பும் விக்ரம் வேதாவுக்கு பெரிய ப்ளஸ்ஸாகக் கைகொடுக்கின்றன.
கெத்தாக மீசை முறுக்கி இருக்கிறாரா ஆதி? - ‛மீசைய முறுக்கு’ விமர்சனம்
July 27, 2017இசையமைப்பாளரிலிருந்து கதாநாயகனாக மாறியிருக்கும் ‘ஹிப் ஹாப்’ ஆதி தன் பயோகிராஃபியையே ‘மீசைய முறுக்கு’ என்று படமாக்கியிருக்கிறார். வாழ்க்கை அ...
மிடில் கிளாஸ் வீட்டுப் பையன் ஆதிக்கு ஒரு தம்பி, அம்மா, அப்பா என அழகான குடும்பம். கூச்சமும், பயந்த சுபாவமுமாய் திரியும் ஆதிக்கு இசை உயிர். அப்பாவின் நச்சரிப்புக்காகப் படித்தாலும், இசையில் சாதிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு ஓடுகிறார். இடையே ஹீரோயினுடன் காதலும், காதலால் பிரச்னையும் வருகிறது. கல்லூரி நண்பர்களுடனான ஜாலி மொமண்ட்ஸூம், சீனியர் மாணவர்களுடன் மோதலும், பாசமும் என இருக்கும் ஆதி தன் இலக்கில், காதலில் ஜெயித்தாரா இல்லையா... என்பதே 'மீசைய முறுக்கு' சொல்லும் கதை.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், நடிப்பு என ஹிப் ஹாப் ஆதி பங்களித்திருக்கும் அனைத்து ஏரியாவும் சொல்வது ஒன்றுதான், 'ஜெயித்தாலும் தோற்றாலும் மீசைய முறுக்கு!'
அடித்தவர்களைத் திருப்பி அடிக்க தம்பியைக் கூட்டி வருவது, நாயகியைக் கவர எடுக்கும் முயற்சிகள், டான்ஸ், பாட்டு... என ஹீரோ ஆதி கவர்கிறார். ஆதியின் தந்தையாக நடித்திருக்கும் விவேக், வழக்கமான காமெடி ஏரியாவில் மட்டுமே ஸ்கோர் செய்யாமல், வசனம், சென்டிமென்ட் காட்சிகளிலும் லைக்ஸ் அள்ளுகிறார். நாயகி ஆத்மிகா வழக்கான தமிழ்சினிமா ஹீரோயினாகவே வந்துசெல்கிறார்.
'நீங்கெல்லாம் சொந்தக்காரங்க கால்ல நிற்கிறீங்க. நான் சொந்தக் கால்ல நிற்கிறேன்' என ஆதி பேசும் வசனம், 'கனவுக்காக சிலர் வாழ்க்கையைத் தொலைச்சிடுவாங்க. வாழ்க்கைக்காக சிலர் கனவைத் தொலைச்சிடுவாங்க. நான் என் கனவை விட்டுட்டு, வாழ்க்கையில ஜெயிச்சிருக்கேன்' என விவேக் பேசும் வசனம்... இப்படிப் படம் முழுக்க அர்த்தமுள்ள வசனங்களை அடுக்கியிருக்கிறார் ஆதி. கூல் ப்ரோ!
நடிகர், பாடகர், இசையமைப்பாளராக ஜெயித்திருக்கும் ஆதி, இயக்குநராகக் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார். திடீர் திருப்பங்கள், எதிர்பாராத ட்விஸ்ட் என்றெல்லாம் இல்லாமல், ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது திரைக்கதை. அதில் காதல், நட்பு, குடும்ப சென்டிமென்ட், காமெடி... எனக் காட்சிகள் தாறுமாறாய்ப் பயணிப்பது பெரிய மைனஸ்.
சின்ன வயசுல இருந்தே ஆதி காதலிப்பதெல்லாம் ஓகே. அதற்காக சிறுவயது காதலை முதிர்ச்சியான காதலாக காட்டியிருப்பது மைனஸ். சொல்லப்போனால் படத்தில் கதை என சொல்லும்படி எதுவும் இல்லாமல், கொஞ்சம் சோர்வுக்குள்ளாக்குகிறது.
எதார்த்தமாக நகரும் திரைக்கதையில், ஹிப் ஹாப் ஆதி மேடையில் பாடும்போது ஆடியன்ஸ் அழுவதெல்லாம் ஓவர் டோஸ். சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு, இன்டிபென்டண்ட்டாக இணையத்தில் வெளியிட்ட ஆல்பத்தை அப்படியே படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் ஆதி. படத்தோடு கனெக்ட் செய்திருந்தாலும், எல்லாப் பாடலும் ஒரே மாதிரி ஃபீல்தான். வெரைட்டியாக பாடல்கள் ஏதும் கொடுத்திருக்கலாமே ஆதி?.
காமெடி சண்டைகளுக்கு ஸ்கோர் கொடுப்பது, பிரியாணி எபிசோட் ஆகியவை ரசிகர்களை ஈர்க்கின்றன. ஆத்மிகா ஆதியைக் காதலிப்பது வீட்டில் தெரிந்து பிரச்னை ஆக, கல்லூரிக்குச் சென்றாலும் கூடவே சுற்றுகிறார், ஆத்மிகாவின் அக்கா. அவரை மீறி, ஆதியும் - ஆத்மிகாவும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் செம! சீனியர் சுதாகர் கேரக்டர் அருமை. ஆதியும் அவர் நண்பர்களும் சுதாகர் பெயரைச் சொல்லி கேண்டீனில் எக்ஸ்ட்ரா ஒரு வடையும், சில பல மரியாதைகளையும் பெற்றுக்கொள்ளும் சீன்களும் காமெடி சரவெடி!
படத்தில் விவேக்கும், ஆதியும் மட்டுமே நமக்குத் தெரிந்த பரிச்சயமான முகம். இவர்களைத் தவிர்த்து அடிக்கடி இணையத்தில் கலக்கும் நடிகர்களை படத்தில் நடிக்கவைத்திருப்பது இன்னும் சிறப்பு. யுடியூப் ஸ்டார்களான ஷா ரா , விக்னேஷ், அன்பு, சுதாகர், கோபி என அடிக்கடி மொபைலில் பார்த்து சிரித்த இவர்களை வெள்ளித் திரையிலும் ரசிக்கலாம். இணையத்தில் மட்டுமே தலைகாட்டிய இவர்களை சினிமாவிற்குள் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு புதுவாசல் திறந்துவிட்டதற்கு ஆதிக்கு பாராட்டுகள்.
படம் முழுவதும் மியூசிக்கல் ஃபீல் கொடுத்திருக்கிறார் ஆதி. சின்னச் சின்ன இடங்களில் மார்டன் மியூசிக்கில் ஸ்கோர் செய்கிறார். ஒளிப்பதிவு செய்திருக்கும் செந்தில்குமார் மற்றும் கிருதி வாசன், படத்தொகுப்பு செய்திருக்கும் ஃபென்னி ஆலிவர் மூவரும் ‘உள்ளேன் ஐயா’ லெவலில் தங்கள் இருப்பை பதிவுசெய்கிறார்கள்.
இலக்கை விரட்டிப் பிடித்து 'வாடி புள்ள வாடி...' பாடலைப் பாடும்போது, அவர் கண்களில் வழியும் கண்ணீரில் உதாசீனமும், அவமானமும் கலந்திருப்பது படம் பார்க்கும் நமக்கும் ஃபீல் ஆகிறது. வாய்ப்புக்காக பல இடங்களில் ஏறி இறங்கியது, அவமானப்பட்டது, உதாசீனப்படுத்தப்பட்டது... என தனக்கு நடந்த அனைத்தையும் பதிவு செய்யும் ஆதி, தன் பின்புலத்தை வைத்து கண்ணீர் வரவைக்காமல், 'ஜெயிக்கிறோமோ, தோற்குறோமோ... முயற்சியைக் கைவிட்டுடாதீங்க!' என ஒருவரி அட்வைஸில் எனர்ஜி ஏற்றுகிறார். இந்த எனர்ஜிக்காகவே 'மீசைய முறுக்கி' ஒரு முறை பார்க்கலாம்!
எல்லாம் ஓகே, ஆனால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு டிரெய்லர் பார்த்த உணர்வே எழுவதால், ஒருவேளை 'மீசைய முறுக்கு 2'வில் மொத்தக் கதையும் சொல்ல இருக்கிறாரோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.
''இந்தியாவில் போர் மூண்டால் 10 நாளில் வெடிமருந்து தீர்ந்து விடும்!'' - சி ஏ.ஜி அதிர்ச்சி அறிக்கை
July 27, 2017அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா இரண்டுமே இந்தியாவுடன் போரிடத் தயார் நிலையில் இருக்கின்றன. இரு முனையில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டாலும் ச...
ஆனால், இந்த வெடிமருந்துகள் தரமானதாக இல்லை. பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடம் இருந்து வெடிமருந்துகள் வாங்கத் திட்டமிட்டும் பயனில்லை. ஆவடியில் உள்ள, கனரக வாகனத் தயாரிப்பு நிறுவனத்தையும் கடுமையாக விமர்சித்திருக்கிறது சி.ஐ.ஜி அறிக்கை. டி 72 பி.எல்.டி என்ற 20 மீட்டர் ஏணி பாலத்துடன் கூடிய கனரக வாகனத்தை உற்பத்தி செய்து ராணுவத்துக்கு அளிக்க ஆர்டர் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.. 2012-17 ஆண்டுக்குள் இந்த வாகனங்கள் சப்ளை செய்யப்பட்டிருக்க வேண்டும். தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டுக் கொண்டே வருவதால், டி 72 பி.எல்.டி வாகனங்கள் சப்ளை செய்யப்படவில்லை. இதே நிறுவனம் தயாரித்த டி90 டாங்குகளில் பொருத்தப்பட்டுள்ள ரேடியேட்டர்கள் தரமானதாக இல்லை என்பதால் ராணுவம் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது என்றும் சி.ஐ.ஜி அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போபர்ஸ் பீரங்கியை மாதிரியாகக் கொண்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் தனுஷ் பீரங்கியில் சீன நாட்டின் மலிவு விலை பேரிங்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள, ‘துப்பாக்கி கேரேஜ் தொழிற்சாலை’ இந்த ரக பீரங்கிகளைத் தயாரிக்கிறது. இதற்கான உதிரி பாகங்களை டெல்லியைச் சேர்ந்த சித் சேல்ஸ் இன்டிகேட் என்கிற நிறுவனம் சப்ளை செய்திருக்கிறது. 2013-ம் ஆண்டு 35.38 லட்சத்துக்கும் 2014-ம் ஆண்டு 53.07 லட்சத்துக்கும் 6 பேரிங்குகள் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. இரு பேரிங்குகளை அந்த நிறுவனம் துப்பாக்கி கேரஜ் நிறுவனத்துக்கு அளித்திருக்கிறது. அதில், ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல CRB Antriebstechnik, Germany நிறுவனத்தின் முத்திரைக் குத்தப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த பேரிங்குகளை சீனாவில் லுயாங்கில் உள்ள 'சைனோ யுனைடெட் இன்டஸ்ட்ரீஸ்' நிறுவனம் தயாரித்திருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. மலிவு விலை என்பதற்காக இதை வாங்கி 'மேட் இன் ஜெர்மனி' என முத்திரைக் குத்தி சித் சேல்ஸ் நிறுவனம் விற்றிருக்கிறது. சித் சேல்ஸ் நிறுவனத்துக்கும் சீன நிறுவனத்துக்கும் இடையே பரிவர்த்தனை குறித்து நடந்த இ- மெயில் விவரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.' இந்த பேரிங்குகள் சரியான முறையில் இயங்கவில்லை என்றால் இலவசமாகவே மாற்றித் தருகிறோம்' என சீன நிறுவனம் கூறியிருக்கிறது. வருங்கால விற்பனையைக் கருத்தில்கொண்டு, சீன நிறுவனம் இத்தகைய வாக்குறுதியை அளித்திருக்கிறது. இதற்கு ஜபல்பூர் தொழிற்சாலையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் உடந்தையாக இருந்திருக்கின்றனர். அந்த அதிகாரிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சித் சேல்ஸ் நிறுவனம், துப்பாக்கி கேரேஜ் நிறுவனத்தின் அடையாளம் தெரியாத அதிகாரிகள் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்தின்போது, இந்த ரக பீரங்கிகளை இந்திய ராணுவம் அதிகம் பயன்படுத்தியது.
15 -ல் தொப்பையை குறைக்கலாம்.!!!!!!
July 27, 20171.நன்கு தூங்கவும் நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்...
நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும். அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால், குப்புறப்படுங்கள்.
2.உப்பை தவிர்க்கவும்
தொப்பை குறைய வேண்டுமானால், உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை விளைவிப்பதோடு, தொப்பையை குறைக்க தடையாக இருக்கும். எனவே உணவில் உப்பை அளவை குறைக்கவும்.
3.காய்கறிகளை அதிகம் சாப்பிடவும்
இது பச்சை காய்கறிகளின் சீசன் என்பதால், உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள். அதிலும் ப்ராக்கோலி, பாகற்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறைவதோடு, தொப்பையும் குறையும்.
4.கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்கவும்
உடல் எடையை இரண்டே வாரங்களில் குறைக்க வேண்டுமானால், கொழுப்புள்ள உணவுகளை அறவே தொடக்கூடாது. குறிப்பாக ஜங்க் உணவுகளான சிப்ஸ், பர்க்கர், பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவற்றை மறக்க வேண்டும்.
5.தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகள்
நேரம் கிடைக்கும் போது தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அதிலும் இடுப்பை பக்கவாட்டில் வளைப்பது, வயிற்றை முன்புறம் அழுத்துவது போன்ற பயிற்சிகளை செய்து வந்தால், தொப்பை குறையும்.
6.நன்கு மூச்சு விடவும்
தினமும் தியான நிலையில் 30 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தாலும், தொப்பை குறைய ஆரம்பிக்கும்.
7.பொட்டாசிய உணவுகளை அதிகம் சாப்பிடவும்
இரண்டே வாரங்களில் தொப்பை குறைவதற்கு, பொட்டாசியம் உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, பொட்டாசியம் உடலில் குறைவாக இருந்தால் தான், தொப்பை போட ஆரம்பிக்குமாம்.
8.தண்ணீர் அதிகம் குடிக்கவும்
தொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால், நிச்சயம் 2 வாரங்களில் தொப்பை குறையும். எப்படியெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருக்கும். இதனால் உடலில் கொழுப்புக்களின் சேர்க்கை குறைவதோடு, உடலில் தங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களும் வெளியேறிவிடும்.
9.நார்ச்சத்துள்ள உணவுகளை நண்பர்களாக்கவும்
நார்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் சேர்த்து வந்தால், தொப்பை கரையும். அதிலும் ஓட்ஸ், ரொட்டி, ப்ரௌன் பிரட் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
10.நடக்கவும்
எதற்கெடுத்தாலும், வண்டியில் செல்வதை தவிர்த்துவிட்டு, நடந்து சென்றால், தொப்பை குறைவதோடு, கால்களும் வலுவாகும்.
11.சைக்கிள் ஓட்டவும்
சைக்கிளில் செல்வதால், சுற்றுச்சூழலை மாசுபடாமல் வைத்திருப்பதோடு, தொப்பையும் கரையும். அதிலும் தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டி வந்து, இரண்டு வாரம் கழித்து பாருங்கள். உங்கள் உடலில் நல்ல மாற்றம் தெரியும்.
12.நீர்ச்சத்துள்ள பழங்கள்
நீர்ச்சத்துள்ள பழங்களான பேரிக்காய் மற்றும் தர்பூசணியை பசி ஏற்படும் போது சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருப்பதோடு, தொப்பையும் குறையும்.
13.மெதுவாக சாப்பிடவும்
எப்போதும் மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடுவதால், அதிகமான அளவில் சாப்பிடாமல் இருக்கலாம். மேலும் இதனை எப்போதும் பின்பற்றினால், தொப்பை வராமல் இருக்கும்.
14.நன்கு வாய்விட்டு சிரிக்கவும்
தொப்பை குறைவதற்கு, நன்கு வாய்விட்டு சப்தமாக அடிக்கடி சிரிக்க வேண்டும். இது வயிற்று தசைகளுக்கான ஒரு உடற்பயிற்சியாகும். மேலும் வாய்விட்டு சிரித்தால், நோயின்றி வாழலாம்.
15.பந்து கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சி
தினமும் உடற்பயிற்சி செய்யும் போது பந்து கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சியை செய்து வந்தால், தொப்பை குறைவதில் நல்ல மாற்றம் தெரியும்
பிக் பாஸ் ஓவியாவின் உணர்வுகளைப் புரிஞ்சுக்கிறீங்க... ஆனா, வீட்ல இருக்கிற ஓவியாவை!
July 27, 2017விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பற்றிய செய்திகளைக் கேட்காமல், பேசாமல் ஒருநாள் நிறைவடையாது என்றாகிவிட்டது. அந்த ...
பொதுமக்கள் ஓவியாவை விரும்புவதற்கான காரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். பிக்பாஸில் சக போட்டியாளர்களால் தொடர்ந்து சீண்டப்படும் நபராக ஓவியா இருந்து வருகிறார். அவரைக் கோபமூட்டவும் அவர் சொல்லாததைச் சொன்னதாகவும் கூறப்பட்டுப் பிரச்னையாக்குவதும் நடக்கிறது. ஒரு கட்டத்தில் அவரைத் தவிர மற்றவர்களெல்லாம் ஓர் அணியாக இவரைத் தனிமைப்படுத்துகின்றனர். அந்தச் சூழலுல் ஓவியா, தன் மீது சுய இரக்கம் கோராது துணிவோடு அதை எதிர்கொள்கிறார். தன் கருத்துகளைத் தயக்கமின்றி கூறுகிறார். கூடுமானவரை அழுவதைத் தவிர்க்கிறார். விரக்தியான முகப்பாவத்தை ஒரு போதும் வெளிப்படுத்துவதில்லை என்பதாகச் சொல்லிக்கொண்டே போகலாம். ஓவியாவின் இந்தப் பண்புகளை ரசித்து அவருக்காக வாக்களித்தவர்கள் எத்தனை பேர் தங்கள் வீட்டில் இருக்கும் ஓவியாக்களைப் (அதாவது ஓவியாவின் பண்புகளைக் கொண்டவர்களை) புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.
பிக்பாஸ் ஓவியா தன் மனதில்பட்டதைத் தயங்காமல் வெளிப்படுத்துவதைச் சிலாகிப்பவர்கள், தங்கள் வீட்டில் உள்ள ஓவியாவை அதுபோலப் பேச அனுமதித்திருக்கிறார்களா? அப்படி அனுமதித்திருந்தால் பெண்கள் தாங்கள் விரும்பும் படிப்புத் தொடங்கிக் காதல் வரை முதலில் பெற்றோரிடம்தானே கூறியிருப்பார்கள். அதுபோன்ற ஜனநாயகம் நம் வீடுகளில் இருக்கிறதா என்ன? அப்படி இருந்திருக்கும் பட்சத்தில் படித்த படிப்பைப் பயன்படுத்தாமல் சான்றிதழ்களில் முடக்குவதும், ஆணவக் கொலைகள் நடந்திருக்கவும் வாய்ப்பே இல்லை அல்லவா!
மழையை மற்றவர்கள் வேடிக்கைப் பார்க்க, ஓவியா மட்டுமே மழையில் நனைந்து, ஆடி மகிழ்கிறார். தான் நினைப்பதைச் செய்கிறார். அதைப் பாராட்டும் எத்தனை பேர் தங்கள் வீட்டில் குழந்தைகள், பெண்களின் மழையில் நனையும் ஆசைக்குக் குறுக்கே நிற்காமல் இருந்திருக்கிறார்கள். மழையில் நனைவது மட்டுமல்ல பெண்களின் சின்னச் சின்ன ஆசைகள் அவர்கள் இறக்கும் வரை நிறைவேறாமலே போய்விடுகிறது.
ஓவியா சகப் போட்டியாளர்களிடம் தன் நிலையை எடுத்துக்கூறும்போதெல்லாம் அவர்கள் அதைப் புரிந்துகொள்ளாமல் மடைமாற்றிவிடுகிறார்கள். ஓவியாவைக் கோபமேற்றவும் செய்கிறார்கள். அதைப் பார்க்கும் நீங்கள் ஓவியாவைத் தவிர்த்தவர்கள் மேல் கோபமுறுகிறீர்கள். இந்தக் கோபம் ஓவியாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதிலிருந்தே வருகிறது. இதேபோல உங்கள் வீட்டில் இருக்கும் ஓவியாவை முழுமையாக தம் கருத்துகளைக் கூற அனுமதித்திருக்கிறீர்களா? இடைமறிக்காமல் பேச்சைக் கேட்டு, அதன்பின் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறீர்களா? அவர் கூறுவதிலிருக்கும் நியாயங்களை அவரின் பார்வையிலிருந்து புரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா? அநேகமாக ஒரு பகுதியினர் ஆம் என்றும் ஒரு பகுதியினர் இல்லையென்றும் கூறுவர். ஆனால், பெரும்பகுதியினர் மழுப்பலான பதிலைத்தான் சொல்வார்கள்.
பிக் பாஸ் ஓவியா, நிகழ்ச்சியின் நெறியாளர் நடிகர் கமல்ஹாசனிடம் பேசும்போது, அந்த வீட்டில் தனக்கு எதிராக நடப்பவற்றைத் தெளிவாகச் சொல்லவில்லை என்ற ஆதங்கம் பார்வையாளர்கள் பலருக்கும் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் அவர் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டை விடுவிக்கும் வீடியோ ஒளிப்பரப்பானதும் பார்வையாளர்களின் கைத்தட்டல் அரங்கை அதிரச் செய்தது. இதே போன்று தன்னை வெளிப்படுத்தும் முறையில் சொற்களை லாவகமாகக் கையாளத் தெரியாத 'வீட்டு' ஓவியாக்களை இனம் கண்டுள்ளீர்களா? தன் மனதிலிருக்கும் விஷயங்களைக் கேட்பவருக்குச் சரியாகச் சென்றடையும் சொற்களால் விளக்க முடியாமல், அதனால் கோபம் அல்லது இயலாமையால் சூழப்படுவர். அதனால் அழுகையோடு தன் பிரச்னையை இன்னும் பெரிதாக்கிக் கொள்வர். பிக் பாஸ் ஓவியாவிடம் காட்டும் பரிவை இவரிடமும் காட்டும்போது வீட்டு ஓவியாவின் பிரச்னை எளிதாகத் தீர்ந்துவிடும் அல்லவா!
பிக் பாஸ் ஓவியா தனக்கு எதிராக நடந்துகொள்ளும் எவரையும் அவர் கேட்கும் 'ஸாரி' எனும் ஒரு சொல்லால் மன்னித்து, நட்பு பாராட்டுகிறார். அதேபோல, தான் செய்யும் தவறை உணர்ந்த கணத்தில் மன்னிப்பும் கேட்டு விடுகிறார். உங்கள் வீட்டு ஓவியா கேட்கும் மன்னிப்புகளை ஏற்றுகொள்கிறீர்களா? அந்த வருத்தத்தை முழுமையாகப் புரிந்துகொள்கிறீர்களா? அந்த மன்னிப்பு கேட்கும் சரியான தருணங்களை அவர்களுக்கு வழங்குகிறீர்களா... ஏனெனில் பல வீடுகளில் சிறிய பிரச்னைகள் நடந்தாலும் வீட்டை விட்டு வெகுநேரம் வெளியே சென்றுவிடுவதைப் பலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள். அவர்கள் திரும்பி வரும் நேரம் வரை அந்த மன்னிப்பைச் சுமந்துகொண்டு வீட்டு ஓவியா காத்திருக்க வேண்டும். அந்தக் காத்திருப்பு மிகக் கொடுமையானதல்லவா?
ஓவியாவிடம் பலர் ரசிப்பதன் அடிப்படை என்பது அவர் அவராக இருக்கிறார். அதாவது, சமூகத்தில் ஆண்களால், ஆண் மனநிலையைப் பெண்ணின் மனநிலையாக மாற்றிக் கட்டமைப்பட்டிருப்பதைப் போல இல்லாமல், பெண் மனநிலையில் அதை வெளிப்படுத்துவதில் நேர்மையாக இருக்கிறார் என்று பார்வையாளர்களால் உணரப்படுகிறது. திரையில் அழும் குழந்தையை விட, நிஜத்தில் நம் வீட்டில் அழும் குழந்தையின்மீது அதிகப் பரிவு ஏற்படும். உடனே அந்தக் குழந்தை அழும் காரணத்தைச் சரி செய்வோம். அதேபோல நம் வீட்டு ஓவியாக்களையும் புரிந்துகொள்ள முயல்வோம்.
அழுத்தமான திரைக்கதையை நம்பி களமிறங்கும் அர்ஜுனின் நிபுணன்
July 27, 2017ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் நிபுணன். அர்ஜுனின் 150வது படமான இதில் பிரசன்னா, வரலட்சு...
நிபுணன் என்பது கதாநாயகன் அர்ஜுனை குறிப்பிடுவது. கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில், அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயர பறக்கும் ஒரு சாதனையாளனின் கதை தான் நிபுணன்.
நமது நாட்டை உலுக்கிய ஒரு மிக முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. படத்தை பார்த்த சில பிரபலங்கள் கதையில் நிறைய சிறந்த விஷயங்களை கூறி வருகின்றனர்.
இந்த படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜுலி வெளியேற்றப்பட்டாரா? என்ன காரணம்
July 27, 2017பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தான் தற்போது தமிழகம் முழுவதும் பேச்சு. அந்த வகையில் இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என்ற பரபரப்பு உருவாகி ...
இந்நிலையில் இன்று வரவிருக்கும் எபிசோட் ப்ரோமோவில் பிக்பாஸ் ‘இந்த வீட்டில் இருக்க தகுதியில்லை’ என்று நீங்கள் நினைக்கும் நபர் யார்? என்று கேட்டுள்ளார்.
அதற்கு அனைவரும் ஒரு மனதாக ஜுலியை தேர்ந்தெடுத்து வெளியேற்றியுள்ளனர், ஜுலி வெளியேறினாரா? என்பதை இன்று பார்த்தால் தான் தெரியும்.
மேலும், ஜுலியை வெளியேற்ற காயத்ரியும் சம்மதித்துள்ளார், சமீபத்திய பிக்பாஸில் தொடர்ந்து காயத்ரியை நல்லவிதமாகவே காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இன்னும் நான் அதை விஜய் சாரிடமே சொல்லவில்லை- அடுத்தப்படம் குறித்து சூப்பர் தகவலை வெளியிட்ட முருகதாஸ்
July 27, 2017இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். இவர் படத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க இவர் தொடர்ந்து மூன்றாவது ...
இந்நிலையில் இவர் இதுக்குறித்து தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் தெரிவிக்கையில் ‘ஒரு ப்ரஸ்மீட் வைத்து சொல்லலாம் என்று இருந்தேன்.
ஆனால், தற்போதே சொல்கிறேன், விஜய் சாருடன் மூன்றாவது முறையாக இணையவுள்ளேன், கத்தி படத்தை போல் இப்படமும் அழுத்தமான மெசெஜ் உள்ள படம்.
அந்த மெசெஜ் என்ன என்பதை இன்னும் விஜய் சாரிடம் கூட நான் சொல்லவில்லை’ என்று முருகதாஸ் கூறியுள்ளார்.
பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?
July 18, 2017பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....? என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களி...
என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.
பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..
நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.
இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..
கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.
வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்.
என் பேரை டேமேஜ் பண்ணிட்டாங்க! பிக் பாஸில் சினேகன்
July 18, 2017பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் இன்று தான் நடத்திவைத்த திருமணங்கள் பற்றி பேசினார். ”2004ல் இருந்து 2011 வரை ஒரு அமைப்பை நடத்தி வந்தேன். அ...
”2004ல் இருந்து 2011 வரை ஒரு அமைப்பை நடத்தி வந்தேன். அதன் மூலம் தாலியே கட்டாமல் திருமணம் நடத்தி வைத்தேன். ஜாதி பார்க்காமல், வேண்டுமென்றே கெட்ட நேரமான இராகு காலத்தில் தான் திருமணம் நடக்கும். இதுபோல 23 திருமணங்கள் நடத்தி வைத்துள்ளேன். அனைவரும் தற்போது வரை சந்தோசமாக தான் உள்ளார்கள்.
"விதவையாக இருந்த பெண்களுக்கும் திருமணம் நடத்தி வைத்தேன். ஆனால் மீடியாக்களில் என் பெயரை டேமேஜ் செய்துவிட்டார்கள். இதை கேட்டால் என்னை பைத்தியக்காரன் என்பார்கள்" என கூறினார் சினேக
'தமிழ் தலைவாஸ்’ பிராண்டு அம்பாசிடரானார் கமல்!
July 18, 2017புரோ கபடி லீக் 5-வது சீஸன் போட்டி வருகிற 28-ம் தேதி முதல் அக்டோபர் 28-ம் தேதி வரை இந்தியாவின் 12 நகரங்களில் நடக்கிறது. இதில் களம் காணும் 12...
கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் 'அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்' என்று ட்விட்டினார். பலரும் அர்த்தம் புரியவில்லை என தொடர்ந்து கமென்ட் செய்தனர்.
அடுத்த ட்விட்டாக, 'புரியாதோர்க்கு ஆங்கிலப் பத்திரிகையில் நாளை வரும் சேதி' எனத் தலைப்பிட்டு ஒரு கவிதையையும் எழுதியிருந்தார். இந்நிலையில்தான் இந்த பிரஸ் ரிலீஸ் வெளியாகியிருக்கிறது. ‘தமிழ் தலைவாஸ்’ பிராண்டு அம்பாசிடர் ஆனதைத்தான் கமல் இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள்.
கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழிகள்..!
July 18, 2017பொதுவாக பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர், உடல் அளவில் மட்டுமின்றி, மனதளவிலும் மிகவும் பலவீனமாகி இருப்பார்கள். * இரண்டாம் முறை கருத்தர...
* இரண்டாம் முறை கருத்தரிக்கும் போது, பெண்கள் சரியான டயட்டை பின்பற்ற வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் உடலானது மிகவும் பலவீனமாக இருப்பதால், பெண்கள் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவறாமல் டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதால், மீண்டும் கருத்தரித்த பின் பெண்கள் மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மன அழுத்தத்திற்கு உட்பட்டு மீண்டும் கருச்சிதைவை சந்திக்கக்கூடும். குறிப்பாக இப்போது கணவன்மார்கள், மனைவிக்கு மிகுந்த ஆறுதலாக இருக்க வேண்டும்.
* மற்றொரு முக்கியமான குறிப்பு என்னவென்றால், காப்ஃபைன் உள்ள உணவுப்பொருட்களை அறவே தொடக்கூடாது. மேலும் எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடாது.
* ஒருவேளை இக்காலத்தில் காய்ச்சல் வந்தால், அப்போது இயற்கை வைத்தியங்களைத் தவிர, வேறு எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் தொடவேக்கூடாது.
* குறிப்பாக எந்த ஒரு பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். பின் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எப்போதும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறெல்லாம் நடந்து வந்தால், நிச்சயம் நல்ல அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.
இந்த பிக் பாஸ் கமல் பிளானை நம்ம அரசியல்வாதிங்களே புரிஞ்சிக்கலை!
July 18, 2017வெள்ளித்திரையிலிருந்து சின்னத் திரைக்கு வந்திருக்கும் நடிகர் கமல் விஸ்வரூபம் பட பஞ்சாயத்திற்கு பின்னர் தமிழக அரசியல்களத்தின் மைய புள்ளியாக ...
அதே சமயம் அரசியலுக்கு வந்து விட்டு ஊழல் பற்றி பேசு என்கிறார் அமைச்சர் ஒருவர் எங்களை விமர்சிக்க கமலுக்கு தகுதியில்லை என்று ஒரு அமைச்சர் பேசுகிறார்.BJP மாநில தலைவர் தமிழிசையோ ஜெயலலிதா இருந்த போது கமல் ஏன் ஊழல் பற்றி பேசவில்லை என கேள்வி எழுப்பி குட்டையை குழப்புகிறார். இதையெல்லாம் கவனிக்கும் போது இவர்கள் அனைவரும் அரசியலில் மட்டுமல்ல சினிமாக்காரர்களை அனுமானிப்பதிலும் தப்புக் கணக்குதான் போடுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
கமலஹாசன் அரசியல் விமர்சனம் செய்பவர்தான், தற்போது அவர் பேசிய பேசி வருகிற அரசியல் விமர்சனங்கள் தமிழக மக்கள் நலன் சார்ந்தது அல்ல. நம் தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, குடி தண்ணீர், டெல்டா விவசாயம் பொய்த்து போனது என மக்களின் அடிப்படையான ஜீவாதார பிரச்சினைகள் பற்றி பேசவோ, நீட் தேர்வை ரத்து செய்யவோ உரிமைக் குரல் எழுப்பவில்லை. மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்ததால், மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதைக் கண்டித்து ட்விட் போட வில்லை..
தனியார் தொலைக்காட்சி ஒன்று வியாபார நோக்குடன் நடத்தி வரும் நிகழ்ச்சியின் தலைமை பொறுப்பு வகிக்கும் கமலஹாசன் தனது நிகழ்ச்சியை பிரபலப்படுத்தும் பொறுப்பும் கடமையும் அவருக்கு உண்டு. அதற்கு கமலஹாசன் எடுத்த ஆயுதம்தான் இந்த தமிழக அரசியல்.
தற்போதைய ஸ்டராங்காக இல்லாத அரசின் ஊழல்களை பற்றி பேசினால் எதிர்ப்புகள் அதிகமாகும். அப்போதுதான் நடத்தும் Cameshow பிரபலமடைந்து விடும் என்ற அவரின் நம்பிக்கை வீண் போகவில்ல. அத்துடன் நடிகரின் அரசியல் விமர்சனங் களுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் தாங்களும் பிரபலமடையலாம் என்ற அவர்களின் கணக்கு தவறாகவில்லை.
மொத்தத்தில் தமிழக மக்களை பாதிக்கும் உண்மையான பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளி, மக்களை திசை திருப்ப கமலை தமிழக அரசு பயன்படுத்திக் கொண்டது போல,தனதுநிகழ்ச்சியை பிரபலப்படுத்த அரசியல் சர்ச்சைகளை பயன்படுத்தி பன்னாட்டு கம்பெனிக்கு பணம் சம்பாதித்து கொடுக்கும் வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளார் – கமலஹாசன் இந்த சூட்சமம் தெரியாமல் – புரியாமல் தமிழக அரசியல்வாதிகள் கமல்ஹாசனுக்கு ஆதரவு குரல் எழுப்பியது வேடிக்கையானதே.
ஷாப்பிங் மால்களில் ‘ஹஸ்பண்ட் ரெஸ்ட் ரூம்’ – சீனா அசத்தல்!
July 18, 2017ஒரு காதலியை ஷாப்பிங் அழைத்து செல்லும் ஆடவன் அதே பெண் தன் மனைவியான பிறகு ஷாப்பிங் அழைத்து செல்லும் போது மட்டும் ஒவ்வொரு கணவர்களும் முகத்த...
ஆம்.. ஆண்களின் இந்த ‘தனிமை’ கஷ்டத்தை உணர்ந்துதான் சீனா ஷாங்காயில் உள்ள ‘குளோபல் ஹார்பர் மால்’ என்ற வர்த்தக நிறுவனம் போக்கும் வகையில் ஒரு ஸ்பெஷலான் தனி கண்ணாடி அறைகளை அமைத்து அசத்தி உள்ளது. ‘கணவர்கள் ஓய்வு பூத்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தனி கண்ணாடி அறையில், பெண்கள் ஷாப்பிங் செய்யும் நேரத்தில் கணவர்கள் பொழுதை போக்கலாம். கண்ணாடி அறையில் ‘டிவி’ வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் பிடித்த சேனல்களை வைத்து நிகழ்ச்சிகளை பார்த்து மகிழலாம்.
மேலும் கண்ணாடி அறையின் ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதியில் தேவைப்பட்டால் மசாஜ் வசதியையும் ஏற்படுத்தி கொள்ளலாம். படுக்கையில் படுத்து கொண்டால், அதுவே உடலை மசாஜ் செய்து விடும். முதல் கட்டமாக 4 ஷாப்பிங்கள் மால்களில் கணவர்களுக்கான இந்த பிரத்யேக ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. தலா ரூ.4 லட்சம் செலவில் இவை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இலவசமாக இந்த மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். பின்னர் இந்த மையத்தை பயன்படுத்துவதற்கு மொபைல் ஆப் மூலமாக சிறு தொகை செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வசதி தற்போது ஷாங்காய் நகரில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், அனைத்து கடைகளிலும் தனிமை கணவர்களுக்கு சிறப்பு அறைகளை ஏற்படுத்த பல்வேறு நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாலிபக் கவிஞர் வாலி – காலமான நாளின்று!
July 17, 2017திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.1958 ஆம் ஆண்டு ‘அழகர் மலைக்கள்ளன்’ என்ற படத்திற்குதான் தனது முதல் பாடலை எழுதினார...
தமிழில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேல் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி, எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்…, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்…”உள்ளிட்ட ஏராளமான பாடல்களை குறிப்பிடலாம்.
“புதிய வானம்… புதிய பூமி, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே…, “ஏமாற்றாதே ஏமாறாதே…, நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்…, கண் போன போக்கிலே கால் போகலாமா.., காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன்.., வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கையிகளில்.., நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை…, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்.., ஊர்வசி ஊர்வசி…, அம்மா என்றழைக்காத உயிரில்லையே…”என எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்து, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சித்தார்த் என இக்கால நடிகர்களின் படங்கள் வரை பாடல்கள் எழுதி உள்ளார்.
கடைசி பாடல்
இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் தயாராகும் படத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் அவர் எழுதிய பாடல்தான் கடைசி பாடலாகும்.
விருதுகள்
பத்மஸ்ரீ விருது-2007
வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர்.
1970 – எங்கள் தங்கம்
1979 – இவர்கள் வித்தியாசமானவர்கள்
1989 – வருஷம் பதினாறு , அபூர்வ சகோதரர்கள்
1990 – கேளடி கண்மணி
2008 – தசாவதாரம்.
20 நூல்கள்
திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது 20 நூல்களையும் எழுதி உள்ளார் வாலி.
எம்.ஜி.ஆர். – கருணாநிதி
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் கருணாநிதி ஆகியோர் அரசியலில் இருவேறு துருவங்களாக இருந்த நிலையில், இரண்டுபேரிடமும் நல்ல நட்புறவை வளர்த்துக்கொண்டவர் வாலி.
எம்.எஸ்.விஸ்வநாதன் – இளையராஜா – ஏ.ஆர். ரஹ்மான்
தமிழ் திரையுலகின் இசை ஜாம்பவான்களான எம்.எஸ்.விஸ்வநாதன் – இளையராஜா ஆகிய இரு இசையமைப்பாளர்களின் இசையில்தான் வாலி ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார் என்றபோதிலும், ஏ.ஆர். ரஹ்மான் இசையிலும் இளமை துள்ளும் பல பாடல்களை எழுதியுள்ளார்.
வாலிபக் கவிஞர்
பத்மஸ்ரீ விருது, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர் வாலி. 82 வயதானாலும் இன்றுவரை வாலிபக் கவிஞராகவே வலம் வந்தவர்.
பள்ளித் தோழர் சூட்டிய பெயர் வாலி!
தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பிரபல இதழில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி’யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி ‘வாலி’ என்னும் பெயரைச் சூட்டினார். எம்.ஜி.ஆர், சிவாஜி தலைமுறை தொடங்கி, ரஜினி-கமல் தலைமுறையில் தொடர்ந்து இன்று புதிதாய் அறிமுகமாகும் கதாநாயகர்களுக்கும் பாடல்கள் எழுதுமளவுக்கு, அனைத்துத் தலைமுறையினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு படைப்பாளி கவிஞர் வாலி.
திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் என்று அவர் தனது தமிழாற்றலைப் பல பரிமாணங்களில் வெளிப்படுத்தியவர் என்பதை எப்படி மறக்க முடியும்? இராமாயணத்தைக் கூட இவ்வளவு எளிமையாக, புதுக்கவிதை வடிவில் சொல்ல முடியும் என்று நிகழ்த்திக்காட்டியவர் அல்லவா?
அசோகவனத்துச் சிறைவாசத்திலிருந்த சீதை, அனுமன் கொண்டுவந்த கணையாழியைப் பார்த்துப் பூரித்ததை…
பேரானந்தத்தில் பிராட்டி
பேச்சற்று நின்றாள்
கணையாழியை- ஈரக்
கண்களால் தின்றாள்.
என்று சொல்லிய லாவகம் ஒன்று போதுமே?
தாய்ப்பாசம் குறித்து எத்தனையோ பாடல்கள் வந்திருந்தாலும், கவிஞர் வாலி எழுதி, இசைஞானி இசையமைத்து, யேசுதாஸ் பாடிய “அம்மாவென்றழைக்காத உயிர் இல்லையே?” பலரின் மனதில் பசுமையாய்ப் இன்றும் பதிந்து கிடக்கிறதே?
ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கவிஞர் வாலி எழுதிய கவிதையை பலரின் மனதை தொட்டது.
மரபு வழியில் – ஒரு
மராட்டி
எனினும் ரஜினியை
“என் மகனே,’ என்று
தழுவிக்கொண்டாள்
தமிழ்த்தாய் என்னும்
பிராட்டி!
முன்பு நிகழ்ந்த ஒரு விழாவில் கவிஞர் வாலி “எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்தும் எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பிச்சையே. அவரால்தான், சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தவன். சோறு திண்ணவே நேரம் இல்லாதவன் ஆனேன்” என்று பேசியவர் மறைந்த நாளின்று.
மோடி கவர்மெண்ட் மீதான நம்பிக்கை நம்மாள்கிட்டே எக்கச்சக்கமா இருக்குது!
July 17, 2017உலக நாடுகளில் மக்கள் தங்கள் அரசாங்கத்தின் மீது கொண்ட நம்பிக்கை குறித்து போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அறிக்கையில் இந்தியா முதல் மூன்றாம் இ...
ஒரு நாட்டின் அரசின் மீது மக்கள் வைக்கும் நம்பிக்கை அந்நாட்டின் முன்னேற்றத்திற்கும், ஸ்திரதன்மைக்கும் மிக அவசியம். மேலும் அரசாங்கத்தின் முடிவுகள் மற்றும் திட்டங்களுக்கு மக்களின் நம்பிக்கையே அதிக பலனளிக்கும்.
ஒரு அரசு அதன் குடிமக்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்க முடியும் மற்றும் பொது சேவைகளை சிறப்பாக வழங்க முடியும் என்ற நம்பிக்கை அளித்தால் மட்டுமே அந்நாட்டு மக்களுக்கு தங்கள் அரசின் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.
அந்த வகையில் உலக புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை உலக நாடுகளில் உள்ள அரசாங்கள் மீது அந்நாட்டு மக்கள் எந்தளவு நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்ற அறிக்கையை வெளியிட்டது.
ஓசிஈடி என்ற பொருளாதார நிறுவனத்தின் ‘கவர்ண்மண்ட் அட் அ கிளான்ஸ்’ (Government at a Glance) என்ற அறிக்கையின் விவரங்கள் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் வெளியான பட்டியலில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் பிரதமர் மோடியின் அரசின் மீது 73 சதவித மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக இந்த கணக்கெடுப்பு அறிவித்துள்ளது.
முதல் இரண்டு இடங்களில் சுவிட்சர்லாந்து (80 சதவீதம்) மற்றும் இந்தோனேசியா (79 சதவீதம்) இடம்பெற்றுள்ளன. இந்தியாவை தொடர்ந்து கனடா நான்காம் இடத்தை பிடித்துள்ளது. அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டிரூடோ தலைமையிலான அரசின் மீது 62 சதவீத மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
கனடாவை தொடர்ந்து 58 சதவீதத்துடன் துருக்கி மற்றும் ரஷ்யா, 55 சதவீதத்துடன் ஜெர்மனி ஆகியவை அடுத்தத்த இடங்களை பிடித்துள்ளன.
பிரிட்டன் பிரதமர் தெரஸா மே அரசு 41 சதவீத மக்களின் நம்பிக்கை பெற்று 10ம் இடத்தையும், 36 சதவீதத்துடன் ஜப்பான் 11ம் இடத்தையும் பிடித்துள்ளது.
அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வெறும் 30 சதவீத மக்களின் நம்பிக்கை பெற்று 12ம் இடத்தில் உள்ளது
கமல் சொன்னதுலே இன்னா தப்புங்கறேன்? ஸ்டாலின் ரியாக்ஷன்!
July 17, 2017பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராகி விட்ட கமல் ஹாசனை தமிழக அமைச்சர்கள் ரவுண்டு கட்டி தாகி வருகிறார்கள். ஒருவர் கமல் எல்லாம் ஒரு ஆளா என்கிறார்...
நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பதையும், பீகாரை விட தமிழகம் லஞ்சம் ஊழலில் மோசமாக இருக்கிறது என்பதையும் தெரிவித்திருந்தார். மக்களின் உணர்வைத்தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்காக அவரைப் பாய்ந்து பிராண்டும் வகையில் தமிழக அமைச்சர்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். சட்டத்தைக் காட்டி மிரட்டிப்பார்க்கிறார்கள். கமல்ஹாசன் பங்கேற்கும் தனியார் தொலைக்காட்சி குறித்த விவாதங்களுக்கும், அரசாங்கம் பற்றிய அவருடைய கருத்துக்கும் வேறுபாடு உள்ளது. தமிழகத்தை ஆளும் பினாமி குதிரை பேர ஆட்சியின் அவலட்சணத்தை வெளிப்படுத்தும் உரிமை கமல்ஹாசன் உள்பட வாக்களித்த அனைவருக்கும் உண்டு.
தமிழகம் ஊழலில் மிதக்கிறது என்பதை வருவாய் புலனாய்வுத்துறை, சி.பி.ஐ, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என அனைத்து அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன. ஆர்.கே.நகரில் முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பொறுப்பில் பணப்பட்டுவாடா நடைபெற்றதும், கூவத்தூர் முகாமில் எம்.எல்.ஏக்கள் விலை பேசப்பட்டு குதிரை பேரம் நடந்ததும், குட்கா ஊழலில் காவல்துறை உயர் அதிகாரிகள் முதல்-அமைச்சர் வரை சம்பந்தப்பட்டிருந்ததும் உரிய ஆவணங்கள் மூலம் அம்பலப்பட்டிருப்பதுடன், நீதிமன்றங்களாலும் இந்த அரசாங்கம் பல முறை கண்டிக்கப்பட்டிருக்கிறது.
உரிய விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அத்தனை அமைச்சர்களும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசை ஊழல் அரசு என்று பொதுமக்கள் சொல்வதைத்தான், குடிமக்களில் ஒருவரான கமல்ஹாசனும் தெரிவித்திருக்கிறார். அதற்காக அவர் மீது வன்மம் கொண்டு அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பதும், மிரட்டுவதும் ஜனநாயகத்தின அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
இப்படி பேசும் அமைச்சர்களை முதல்-அமைச்சர் வேடிக்கை பார்ப்பது அதை விட அடாவடி செயலாகும். தமிழக அரசின் ஊழல் குறித்த கமல்ஹாசனின் கருத்து, தமிழ்நாட்டு மக்களின் குரலாகும். அதை அடக்க முயற்சிக்கும் அமைச்சர்கள், இந்த ஆட்சி இன்னும் எத்தனை காலம்? என்பதை உணர்ந்து, தங்களைத் திருத்திக்கொள்ளட்டும்”என்று கமலுக்கு சப்போர்ட்டாக ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.
இதையடுத்து கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் அன்பு சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்ல தோன்றவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், அதில்:‛‛ அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது’.என கூறி உள்ளார்.
பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வசதிகள்: வெளியான புகைப்படம்
July 17, 2017பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையென உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் வெள...
கர்நாடக மாநிலம் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அடைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு அங்கு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டை எழுப்பிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா, பெங்களூர் நகர காவல் துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் பொலிஸ் அதிகாரி ரூபா எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என உறுதிப்படுத்தும் வகையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்த அறையின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் அறையில் யோகா செய்வதற்கான சிறப்பு மெத்தை, உயர் ரக சமையல் பாத்திரங்கள் என அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் விருதும், மானியமும்! கவரிமான்களும்… கரப்பான்பூச்சிகளும்!
July 17, 2017ஆறு வருஷத்துக்கான விருதையும் ஒரே நேரத்துல சேர்த்து வச்சு கொடுத்தாலும் கொடுத்தாங்க. கவரிமான்கள் ஒரு பக்கமும் கரப்பான் பூச்சிகள் இன்னொரு பக்க...
சிறந்த படமாக ‘அழகர்சாமியின் குதிரை’ தேர்ந்தெடுக்கப்படவில்லையே என்கிறார் சுசீந்திரன். “உங்க கண்ணுக்கு நானோ, வைரமுத்துவோ தெரியலையா?” என்கிறார் பாடலாசிரியர் பா.விஜய். “இந்த ஆறு வருஷத்துல ஒரு நல்லப்பாட்டு கூடவா நாங்க எழுதல?” என்று திமுக காரரான பா.விஜய் கேட்பதற்கு அதிமுக ஆட்சி எப்படி பதில் சொல்லும்?
“ஏன்யா… கரண் சிறந்த நடிகர்னா கோடம்பாக்கத்துல ஏன் இடி விழாது?” என்று பெரும் கவலை பிடித்தாட்டுகிற விதத்தில் குமுறுகிறது இன்னொரு கூட்டம். “ரஜினி, கமல், அஜீத், (அப்படியே நேர்ல வந்து வாங்கிட்டுதான் மறுவேலை பார்ப்பாரு) விஜய், தனுஷ்னு ஒரு ஹீரோவை கூட இந்த அரசு மதிக்கவில்லை. “பேர் தெரியாத ஆளுங்கள்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள்ள புகுந்த மாதிரியிருக்கேய்யா இந்த விருது பட்டியல்?” என்று குமுறுகிறது அதே கோடம்பாக்கம்.
“இந்த விருதை வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணுறது. விருதோட சேர்த்து ஒரு வீடு கொடுத்தாலாவது பிரயோஜனமா இருக்கும்” என்கிறார் டைரக்டர் வசந்தபாலன். விருது பெற்றவர்களின் மனநிலை இப்படியிருக்க, சிறுபடங்களுக்கான மானிய விவகாரம் இன்னும் சுத்தம். இந்த ஆறு வருஷத்துல கிட்டதட்ட 300 படத்துக்கு மேல வந்திருக்கு. ஆனால் 149 படங்களுக்கு மட்டும்தான் மானியத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கு. “அம்மா இருக்கும்போது பரிந்துரைக்கப்பட்ட படங்களுக்கு அப்படியே கொடுக்காமல், இவங்க இன்னொரு முறை வடிகட்டிக் கொடுத்தது அடுக்கவே அடுக்காது” என்று சிறுபட தயாரிப்பாளர்கள் பல கண்ணீர் வடிக்கிறார்கள்.
முக்கியமாக ‘வெங்காயம்’. சங்ககிரி ராஜ்குமார் இயக்கி, தமிழ்சினிமாவே கொண்டாடிய படம். மிக மிக சிறு தயாரிப்பு படம் என்றால் சத்தியமாக அதுவேதான். இயக்குனர் சங்கமே தனது உறுப்பினர்களுக்கு படத்தை திரையிட்டு மகிழ்ந்தது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த படத்தை மானியம் கொடுத்து கொண்டாடுவதுதானே முறை? மண்ணாங்கட்டி…. திரும்பிக் கூட பார்க்கவில்லை இந்த மானியத் தேர்வு கமி(—–)ட்டி.
“ஒண்ணுமே இல்லாம கிடந்தோம். கொஞ்சமாச்சும் சந்தோஷப்படுங்கப்பா. அந்தம்மா உசிரோட இருந்திருந்தா, பல்லி வாலு அறுந்த மாதிரி துள்ளந்துடிக்க கிடந்திருப்போம். ஒருத்தரும் சீண்டியிருக்க மாட்டாங்க. இந்த எடப்பாடி தேவலாம்ப்பா” என்கிறார்கள் அதே கூட்டத்திலிருந்து சிலர்.
இந்த விருதுகளும் மானியங்களும் வழங்கப்படுகிற தேதி இன்னும் முடிவாகவில்லை. “அந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி அசருகிற விதத்தில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்” என்று இப்பவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள் சங்கப் பிரமுகர்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஐம்பது வருஷ திராவிட பாரம்பரியம் இப்போதும் ஒருமுறை சோப்புப் போட்டு சுத்தப்படுத்தப்படும். எடப்பாடி முகத்தில் அம்மாவின் புன்னகை ஒளிரும்.
மெல்ல மெல்ல இவரை(யும்) ‘சந்திரமுகி’யாக்காமல் சினிமா ஜால்ராக்கள் ஓயாது என்பதுதான் கடைசி கட்ட தகவல்.
“ஒரு நல்லது நடக்கணும்னா, நாலு கெட்டதுதான் நடந்துட்டு போகட்டுமே” என்கிறீர்களா? அப்படின்னா நீங்க விஷால் கோஷ்டிதான். வாங்க சோடியா நின்னு ஆடலாம்!
அஜீத்தின் தைரியம் கமலுக்கு இல்லை! உசுப்பிவிடுகிறாரா அமைச்சர்?
July 17, 2017தானுண்டு… தன் தனி மனித சுதந்திரம் உண்டு என்று சந்தோஷமாக இருக்கும் அஜீத்தை ஏன் இந்த வம்புக்குள் இழுக்கிறார்களோ, அந்த அரசியலுக்கே வெளிச்சம். ...
சமீபகாலமாக கமல்ஹாசன் வீசும் ஒவ்வொரு சொல்லும், ஏதாவது ஒரு அதிமுக பிரமுகரின் அடி வயிற்றில் விழுந்து அனலாக கொதிக்கிறது. “எல்லா துறையிலும் ஊழல் மலிந்துவிட்டது” என்று சொன்னாலும் சொன்னார். அமைச்சர்களின் கோபத் தீ கமலின் வீட்டையே கொளுத்திவிடுகிற அளவுக்கு கொழுந்துவிட்டு எரிகிறது. “கமலெல்லாம் ஒரு ஆளா? அவனுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது” என்று உயர் கல்வி அமைச்சர் ஒருமையில் பேசியதை இன்னமும் அதிர்ச்சி விலகாமல் நோக்குகிறது தமிழகம்.
இன்னொரு பக்கம் பிக் பாஸ்க்கு எதிராகவும் கமலுக்கு எதிராகவும் கட்சிகளையும் அமைப்புகளையும் தூண்டி விடுகிற வேலைகளும் சைலன்ட்டாக நடந்து வர, முன் வைத்த காலை ஒரு போதும் பின் வைக்கப் போவதில்லை என்ற பிடிவாதத்தில் இருக்கிறார் கமல். இந்த நிலையில்தான் கமல் மீது வன்கொடுமை சட்டத்தை ஏவி அவரை உள்ளே தள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம். அதோடு விட்டாரா?
“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முன், “நடிகர்களை மிரட்றாங்க” என்று அஜீத் பேசியபோது இந்த கமல் எங்கே போயிருந்தார்? அஜீத்தின் துணிச்சல் கமலுக்கு இருக்கிறதா?” என்று கேட்க, சும்மாயிருக்கும் அஜீத்தை எதுக்குப்பா இவங்க சண்டைக்குள் இழுக்குறாங்க என்று அதிர்ச்சிக்குரல் கேட்கிறது.
எல்லாரும் கூடி கமல்ஹாசனுக்கு கட்சி ஆரம்பித்துக் கொடுத்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள் போலிருக்கு! பா.ஜ.க வின் புதிய இந்தியாவில், இதுவும் ஒரு அஜன்டாவா இருக்குமோ?
நடிகர் கமலுக்கு ஆதரவாக களமிறங்கிய ஓபிஎஸ்
July 17, 2017நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த...
தமிழகத்தில் ஊழல் அதிகரித்து வருவதாக நடிகர் கமல் கருத்து தெரிவித்த நாள் முதல் அதிமுக அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இன்று பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் கமலுக்கு தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்த பிறகு கருத்து கூறட்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள பதிவில், நடிகர் கமலுக்கு ஜனநாயக முறையில் அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும். அவர்களின் பதவி மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி அவரை அச்சுறுத்தக்கூடாது என கூறியுள்ளார்.
2015 சென்னை வெள்ளத்தின் போது அரசின் மீட்பு பணி குறித்து கமல் விமர்சித்ததிற்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது நினைவுக் கூறத்தக்கது.
சட்டப்படி அனுமதியில்லை: கமல் குறித்த கேள்விக்கு நடிகை கவுதமி பதில்
July 17, 2017பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட நடிகையின் பெயரை கமல்ஹாசன் குறிப்பிட்டது சட்டப்படி தவறு என நடிகை கவுதமி கூறியுள்ளார். கேரளாவில் பிரபல இள...
கேரளாவில் பிரபல இளம் நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். இது சம்மந்தமாக பல்சர் சுனில் உட்பட 7 பேரை பொலிசார் கைது செய்தார்கள்.
கடத்தலில் மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்ப்பு இருப்பதாக அவரையும் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சை தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பாதிக்கப்பட்ட கேரள நடிகையின் பெயரை குறிப்பிட்டார். இதையடுத்து நடிகையின் பெயரை குறிப்பிட்டத்தற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் கமலை வற்புறுத்தியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து நடிகை கவுதமியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர் அதற்கு பதிலளித்த அவர், இது வேதனையான விடயம். அந்த நடிகையின் பெயரை குறிப்பிட சட்டப்படி அனுமதி இல்லை என கூறியுள்ளார்.
ஓங்கி ஒரு குத்து! பிக்பாஸ் பரணி மீது கமல் காட்டம்
July 16, 2017பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களின் எதையோ ஒன்றை செய்ய...
அவர்களுக்குள் சண்டை, வாக்குவாதம் இவைதான் நிகழ்ச்சியின் உச்சமாக இருக்கிறது. இந்நிலையில் ஆரம்பத்திலிருந்தே ஓரங்கட்டப்பட்ட பரணி கடந்த வாரம் வெளியேறினார்.
இந்நிலையில் மீண்டும் பரணியை அழைத்து கமல் நடந்தது என்ன என்பது குறித்து விவாதம் செய்கிறார். உடனே பரணி நான் எதுவும் திரித்து சொல்லவில்லை. உண்மையை சொல்லப்போகிறேன்.
அப்போது பேசிய கமல் ஓங்கி ஒன்னு கன்னத்துல குடுக்கலாம் போல இருக்கு என்று பரணியை பார்த்து கூறியது போல பிரமோவில் காட்டியுள்ளார்கள்.
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் -விமர்சனம்- அதர்வா இனிமேல் ‘அம்மணி’ கணேசன் என்றே அழைக்கப்படுவாராக!
July 16, 2017கே.பி.சுந்தராம்பாள் நடிக்கிற படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கினால் எப்படியிருக்கும்? அப்படிதான் இருக்கிறது ஜெ.க.சு.ரா! சுமார் பத்து பனிரெண்டு ...
தன் கல்யாண இன்விடேஷனை பழைய காதலியை பார்த்துக் கொடுப்பதற்காக மதுரைக்கு வருகிறார் அதர்வா. அவர் காதலிக்கிற காலத்தில் குடியிருந்த வீட்டின் மாடியில், சுருளிராஜன் (சூரி) குடியிருக்க, “அக்காவுக்கு இன்விடேஷன் வைக்கணும். அவங்க இல்லியா?” என்று அப்பாவியாக கேட்கும் அதர்வாவை நம்பி, அந்த அக்காவின்(?) புது வீட்டை காண்பிக்க கிளம்புகிறார் சூரி. போகிற வழியில் அதர்வாவின் லவ் எபிசோட் விரிகிறது. அடப்பாவி… மனுஷனுக்கு லட்டு லட்டாக நாலு பிகர் தேறிய கதையை சூரி அறிந்து கொதிக்கும்போது படத்தின் க்ளைமாக்சே வந்துவிடுகிறது. அங்குதான் வழி கொடுத்தவனுக்கே, ‘நோ என்ட்ரி’ போட்டு நோகடிக்கிறார் அதர்வா. அதென்ன…? செம ஜாலியான அந்த கடைசி முக்கால் மணி நேரத்திற்காகவே முதல் ஒண்ணேகால் மணி நேரத்தை பொறுத்துக்கொள்ளலாம்.
அதர்வாவுக்கு துறுதுறு லவ் பொருந்துகிறதோ, இல்லையோ? இந்த கதை அவரை தனக்குள் அப்படியே ‘ஜப்பக்’கென்று பொருத்திக் கொள்கிறது. ஒரே போர்ஷனில் குடியிருக்கும் ரெஜினாவை கவிழ்த்து அவரை காதலிக்கும் போதே, அதே வீட்டின் இன்னொரு போர்ஷனிலிருக்கும் அதிதியை கரெக்ட் பண்ணுகிற காட்சிகள் விரிகிறது. அடங்கொப்புறானே என்று வெப்பம் அடங்குவதற்குள், வீட்டை காலி பண்ணிக் கொண்டு ஊட்டியில் போய் இறங்குகிறது அதர்வா குடும்பம். கண்ணை விழிக்கும்போதே பிரணிதா. அங்கும் ஒரு டபுள் செஞ்சுரி.
இப்படி அதர்வாவுக்கு தரப்பட்ட காதல் பஞ்சுகளையெல்லாம் சேர்த்து அழகான தலையணையாக்கி நம்ம நெஞ்சில் வைத்து ஒத்தடம் கொடுக்கிறார் டைரக்டர் ஓடம் இளவரசு. ஒரே ஒரு சங்கடம். இந்த கேரக்டரில் அதர்வாவை தவிர வேறு யாராவது நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் லேசாக தோன்றி மறைவதுதான் துரதிருஷ்டம்.
ரெஜினா மெல்ல இளைஞர் மன்றத்தின் இளவரசியாகிக் கொண்டிருக்கிறார். “என்னடா… என்னை பார்த்தா அக்கா மாதிரியா இருக்கு?” என்று அதட்டிக் கொண்டே அதர்வாவை வளைக்கும் லவ் லாவகம், கொஞ்சநேரத்தில் பிசுபிசுத்துப் போவதை கைதட்டி ரசிக்கிறது தியேட்டர்.
பிரணதியை இறக்கியதே ரசிகர்களை கிறுகிறுக்க விடதான் என்பதை அவர் திரையில் வரும்போதெல்லாம் தெரியவிடுகிறார் ஒளிப்பதிவாளர். கோணத்திற்கு ஒரு அழகாக இருந்தாலும், கோக்குமாக்கு அழகால் திணறடித்திருக்கிறார் அவரும். ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் கண்ணியத்திற்கு இழுக்கில்லாமல் கை பிடிக்கிறார் அதர்வாவை. அப்புறம்…? அதிதி. கூட்டத்தில் வந்து போகக் கூட லாயக்கில்லாத அழகு. எப்படியோ? அதிர்ஷ்ட மழையில் இவரும் ஹீரோயினி அந்தஸ்து பெற்றிருக்கிறார்.
அதர்வா ஒரு பக்கம் தவறவிட்டாலும், ஆஞ்சநேயர் மலையை தாங்கியது போல மொத்த படத்தையும் தாங்குகிறார் சூரி. அதிலும் அங்க சுற்றி இங்க சுற்றி நம்ம தலையில கைய வச்சுப்புட்டானே என்பதை உணர்ந்து சூரி கொடுக்கும் எக்ஸ்பிரஷன்…. சூப்பரோ சூப்பர். எடுத்த எடுப்பிலேயே இவரை ரவுடி ரேஞ்சுக்கு பில்டப் கொடுப்பதும், அதற்கப்புறம் சொல்லப்படும் காரணங்களும் ரொம்ப சப்பண்ணே…
ஐ ஆம் வெயிட்டிங்… என்ற வசனத்தை இனிமேலும் சொன்னால் சம்பளம் கட் என்று மொட்டை ராஜேந்திரனுக்கு உத்தரவு போட்டாலொழிய அவர் காமெடியில் ஒரு மலர்ச்சியும் நேரப்போவதில்லை. மகனுக்கும் அப்பாவுக்குமான ரிலேஷன்ஷிப், பிரண்ட்ஷிப் போல இருக்கணும் என்று உணர்த்துகிறார் டி.சிவா.
டி.இமானின் இசையில் ஒரு பாடலாவது தேறிவிடும் என்று காத்திருக்க வைக்கிறார். அந்த காத்திருப்புக்கு பலன், ‘அம்முக்குட்டியே’ பாடல். (உடம்பு இளைக்கலாம். திறமை இளைக்கக் கூடாது சார்…)
ஜெமினிகணேசனாகவே நடித்து பெயர் வாங்கிவிட்டபடியால், அதர்வா இனிமேல் ‘அம்மணி’ கணேசன் என்றே அழைக்கப்படுவாராக!
திண்டாட்டத்தைக் கொண்டாட்டமாக்கிய கேங்ஸ்டர் சினிமா... பண்டிகை விமர்சனம்
July 14, 2017வேலுவுக்கு (கிருஷ்ணா) தனது பாஸ்போர்ட் மற்றும் வெளிநாட்டு வேலைக்காக நிறைய பணம் தேவை, சூதாட்டத்தால் இழந்த பணத்தையும், வீட்டையும் மீட்க முனி...
புதிய களத்தைக் கையில் எடுத்தது, பரபரப்பும் விறுவிறுப்புடன் கதையைக் கொண்டு சென்றது என்றவகையில் கவனிக்க வைக்கிறார் அறிமுக இயக்குநர் ஃபெரோஸ். வன்முறை கொஞ்சம் அதிகம்தான் என்றாலும் வாழ்க்கைக்கு அறத்தின் தேவையை வலியுறுத்தும் க்ளைமாக்ஸ் ட்விஸ்டுக்கு லைக் போடலாம்.
கிருஷ்ணாவுக்கு இந்தப் பாத்திரம் பக்காவாகப் பொருந்திப் போகிறது. முதலில் பண்டிகையில் கலந்து கொள்ள மறுப்பதும், பின்பு விருப்பமே இல்லாமல் பணத்தேவைக்காக கலந்து கொள்வதுமாக ஒவ்வொரு உணர்வையும் கவனமாகக் காட்டியிருக்கிறார். கிருஷ்ணாவின் போன் உடைந்ததற்கு ‘ப்ளாக்’ பாண்டி டென்ஷனாகி ‘உன்னை நம்பித்தானேடா நான் தனியா போன் வாங்காம இருந்தேன்" என்று கோபப்படுவது, கருணாஸின் தந்திரம் உட்பட படத்தோடு ஒன்றிய காமெடி ரசிக்கவைக்கிறது. "ஹேர்வாஷுக்காக ஊத்தினப்போ பீர் கொஞ்சம் வாய்க்குள்ள போயிடுச்சு" என்று போதையில் சலம்பும் ஆனந்தி பாத்திரம் ரசிக்கவைக்கிறது. ஆனால் அநியாயத்துக்குக் குட்டியூண்டு கேரக்டர்.
பருத்திவீரன், தம்பி வெட்டோத்தி சுந்தரம் தொடர்ந்து இதிலும் க்ரைம் பார்டனர் வேடம் சரவணனுக்கு. படம் முழுவதும் ஹீரோவுக்கு இணையாக வந்து, கலக்குகிறார். "எத்தனையோ முறை தோத்திருக்கேன், இன்னைக்குதான்டா ஏமாறுறேன்" என்று புலம்பி விரக்தியில் அலைவதும், முதன்முறை ஏமாறும்போதும் கர்ப்பிணி மனைவி வீட்டைவிட்டுப் போகும்போதும் அதிர்ச்சியும் சோகமும் கலந்த ரியாக்ஷன்களில் நீ கலக்கு சித்தப்பு!
'சலங்கை ஒலி' கமல்ஹாசனை நினைவுபடுத்தும் தோற்றத்தில் நிதின் சத்யாவுக்கு வித்தியாசமான வேடம். கடகடவென பெட்டிங் நம்பர்களைச் சொல்வதும், செம்பட்டத்தைத் தலையோடு சரவணன், கிருஷ்ணாவுக்கு ஐடியாக்கள் சொல்வதுமாக க்ளாப்ஸ் அள்ளுகிறார். வில்லனாக மதுசூதனன் ராவ் பலமுறை நடித்த வேடம்தான் என்பதால் மீண்டும் ஒருமுறை சர்வசாதாரணமாய் செய்துமுடித்திருக்கிறார். உப வில்லன்களாக வரும் அருள்தாஸ், அர்ஜெய், ட்வின்ஸாக நடித்திருக்கும் சபரீஷ், 'ஆத்மா' பேட்ரிக் என எல்லோரும் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.
ஹீரோதான் ஜெயிப்பான் என்ற டெம்ப்ளேட்டை ஓங்கி அடித்து உடைத்திருந்த விதமும் சபாஷ். இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ் இரண்டிலுமே எதிராளியை ஜெயித்தாலும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வதும், பின்பு அதிலிருந்து வெளியேவர முயல்வதுமாக காட்டி செம ப்ளே அமைத்திருக்கிறார் இயக்குநர் ஃபெரோஸ். கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பில் அவரின் மெனக்கெடலுக்கு உதாரணமாக இதைச் சொல்லலாம். கிருஷ்ணாவாகட்டும், சரவணனாகட்டும் இருவருக்குமே பணம் தேவை. ஆனால் இருவருமே பணத்தை இழந்து கொண்டேதான் இருப்பார்கள். கிருஷ்ணா தனக்கு முதன் முதலில் கிடைக்கும் ஆயிரம் ரூபாயை டொனேஷன் பாக்ஸில் போடுவார், பிறகு முதல் போட்டியில் ஜெயித்த பணத்தை மருத்துவ செலவுக்காக கொடுப்பது... சரவணன் பந்தயம், சூதாட்டம் என இருக்கும் பணத்தை இழந்து கொண்டே இருப்பார். க்ளைமாக்ஸ் வரையிலுமே அந்த கேரக்டர் ஸ்கெட்சை சாதுர்யமாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.
"புத்திசாலிங்க, முட்டாள ஏமாத்தறதுக்குக் கண்டுபிடிச்சதுதாண்டா அதிர்ஷ்டம்",, "விதி வெட்டியா இருந்தா எப்ப வேணா வந்து விளையாடிட்டு போகும்", "எல்லாத்துக்கும் சாதாரணமா கெடைக்கற விஷயம் எனக்கு அடிச்சதுக்கப்பறம்தான் கெடச்சது" எனப் பல இடங்களில் நறுக் வசனங்கள்.
படம் முழுவதும் நம்மை ஒரு படபடப்பிலேயே வைக்கிறது ஆர்.ஹெச்.விக்ரமின் பின்னணி இசை. கிருஷ்ணா சண்டைக்கு களத்தில் இறங்கும் ஒவ்வொரு முறையும் ஒலிக்கும் அந்தப் பின்னணி இசை சூப்பர். பாடல்கள் நினைவில் நிற்கவில்லை என்பதையும் சொல்லவேண்டும்.
இடையில் காவ்யாவுடன் (ஆனந்தி) காதல், ஃபியர் காமெடி, ஐட்டம் சாங் என வலிந்து திணிக்கப்படும் சில விஷயங்களால் படம் அலைக்கழிக்கப்பட்டது சின்ன மைனஸ். கதையின் மையத்தோடு ஒன்றாமல் நெருடலாக நிற்கின்றன காதல் காட்சிகள். ஆனந்தியுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே கிருஷ்ணாவின் போன் கீழே விழுந்து உடைவது சரி, ஆனால் அடுத்து அவர் பத்தாயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் வாங்கித்தான் ஆனந்தியிடம் பேசவேண்டுமா என்ன? இப்படி சில காட்சிகளில் லாஜிக் சறுக்கல்கள்.
கொஞ்சம் விட்டால் வெள்ளித்திரை சிவப்புத்திரையாக மாறிவிடும் அளவுக்கு ரத்தம் தெறிக்கும் வன்முறை. படத்தின் கதைப்படி அது தேவைதான் என்றாலும் கொஞ்சம் குறைத்திருக்கலாமே பாஸ்!
மிக சில குறைகள் இருந்தாலும் வித்தியாசமான களம், சுவாரஸ்யமான மேக்கிங் என பல ப்ளஸ்கள் இருப்பதால் 'பண்டிகை'யில் கொண்டாட்டம்!
பேருதான் தப்பாட்டம்! செய்யறதெல்லாம் சரியாதான் இருக்கு!
July 14, 2017‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘தப்பாட்டம்’. இப்படக்குழுவினர், விவசாயத்தைக் காப்பாற்றுவதற்காக டெல...
இது குறித்த செய்திகளை பத்திரிக்கைகள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் அறிந்து கொண்ட தேசிய – தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு ‘தப்பாட்டம்’ படக்குழுவினரைப் பாராட்டி, அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று, திருச்சியில் ரயில் நிலையத்தில் பல்வேறு விவசாயப் போராட்டங்களில் கலந்து கொண்டு உயிரிழந்த விவசாயக் குடும்பத்தினர் 4 பேருக்கு தலா 25000 ரூபாய் வீதம் ஒரு லட்சம் பணத்தை தேசிய – தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.அய்யாக்கண்ணு முன்னிலையில், தப்பாட்டம் படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவாவும், கதாநாயகன் ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகரும் வழங்கினார்கள்.
இதனையடுத்து, பேசிய சங்கத் தலைவர் பி. அய்யாகண்ணு, “தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நிவாரணம் வேண்டி, மந்திரிகளிடமும், முதலமைச்சரிடம் நேரடியாக மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது தப்பாட்டம் படக்குழுவினர் பண உதவி செய்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் படத்தின் மொத்த வசூலையும் விவசாயிகள் நலனுக்கு தரவிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.” என்றார்.
மூன் பிக்சர்ஸ் பெருமையுடன் தயாரித்திருக்கும் ‘தப்பாட்டம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகரும், கதாநாயகியாக டோனாவும் நடித்திருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் கோவை ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தப்பாட்டக் கலைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை முஜிபூர் ரஹ்மான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். ஆதம் பாவா தயாரித்திருக்கிறார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.
பண்டிகை -மேக்கிங் பாதி, மெட்ரீயல் மீதி என்று மேஜிக் பண்ணிய வகையில் ‘ஃபெஸ்டிவெல்’ டைரக்டர் ஆகியிருக்கிறார் பெரோஸ்.
July 14, 2017‘தீபாவளி, பொங்கல், ரம்சான், கிறிஸ்துமஸ்… இதெல்லாம்தானே பண்டிகை, இவிய்ங்க என்னப்பா புதுசா ஒரு பண்டிகையை காட்றாய்ங்க?’ என்று திடுக்கிட வைக்கு...
சொந்தமிருந்தும் அநாதையாக திரியும் கிருஷ்ணா ஒரு ஓட்டலில் வேலை பார்க்கிறார். ஒரு செல்போன் வாங்கக் கூட காசில்லாதளவுக்கு கஷ்டம்! சூதாட்டத்தில் தன் வீடு, தொழில் செய்யும் இடம் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு கட்டிய மனைவியும் கோபித்துக் கொண்டு போன நிலையிலிருக்கிறார் பருத்திவீரன் சரவணன். இவ்விருவருக்கும் தேவை பணம். அதை சூதாட்டத்தில் ‘அமுக்கலாம்’ என்று கிளம்பும் அவர்களும், நண்பர்களும் படுகிற அவஸ்தைதான் ‘பண்டிகை’! (ஆங்… பண்டிகை என்றால், நாமெல்லாம் டி.வியில் பார்ப்போமே, ரெஸ்ட்லிங். அதுதான். அதை மினிமம் பட்ஜெட்டில் போட்டு புரட்டினால் இந்த ‘பண்டிகை’. அதாவது முரட்டுக்குத்து)
ஓவர் ஆக்ட்டிங் புகழ் கிருஷ்ணாவை இந்தப்படத்தில் அடக்கி ஒடுக்கி நடிக்க வைத்த ஒரே காரணத்திற்காகவே வலிக்குமளவுக்கு கைதட்டலாம் அறிமுக இயக்குனர் பெரோசுக்கு. தன் கேரக்டர் உணர்ந்து நடித்திருக்கிறார் கிருஷ்ணா. படத்தில் முக்கால்வாசி நேரம் பைட்தான். உடம்பு பஞ்சராகிற அளவுக்கு உழைத்திருக்கிற கிருஷ்ணாவுக்கு இப்படம் பெயரையும் புகழையும் வாங்கித் தரும். சந்தேகமில்லை. இவருக்கும் ஆனந்திக்குமான லவ் ஆரம்பமாகும் இடமும், அதை தொடரும் காட்சிகளும் புதுசு. அதனாலேயே நிறைய ரசிக்க முடிகிறது. (மிஸ்டர் கிருஷ்ணா, நடிப்பில் இந்த அளவை தாண்டாமல் நடிக்க கற்றுக் கொண்டால் பின்வரும் காலங்கள் உங்களுக்கானதாக அமையும்)
ஆனந்திக்கு படத்தில் அவ்வளவு வேலையில்லை. கொடுத்த கொஞ்ச நேரத்தில் தனது மென்சிரிப்பால் கவர்ந்து, புன்சிரிப்பால் புதைத்துவிட்டு போகிறார் நம்மை. ஒரு சீனில் இவர் தேவையில்லாமல் என்ட்ரி கொடுத்து, கொள்ளையடிக்கப் போகும் கோஷ்டியுடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். ஆனால் அந்த செல்ஃபியால் ஒரு திருப்பமும் இல்லை படத்தில்!
பருத்தி வீரன் சரவணன் ஒவ்வொரு முறை ஏமாந்து போய் கண்கலங்கும்போதும் மனுஷன் தப்பிச்சுடக் கூடாதா என்று தோன்றுகிறது. இந்த பரிதாபம்தான் அந்த கேரக்டரின் மீதிருக்கும் அழுத்தம். அதை மிக சரியாக பிரதிபலிக்கிறது திரைக்கதை.
சூதாட்டப்பணம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அறிந்து கொள்ளை அடிக்கக் கிளம்பும் கிருஷ்ணா அண் கோஷ்டி அந்த பங்களாவுக்குள் நுழைந்ததிலிருந்து வெளியே வருகிற வரைக்கும் நமது நெஞ்சுக்குள் இசிஜி எமெர்ஜென்சி சவுண்ட் கேட்க ஆரம்பித்துவிடுகிறது. என்னவொரு படபடப்பு? அதிலும் அந்த இரட்டையர்களின் பைட்டிங் ஸ்டைலும், கத்தியும் செம ஷார்ப். யாருப்பா நீங்க?
கருணாஸ், பிளாக் பாண்டி, மதுசூதனன், அருள்தாஸ் என்று படத்தில் வருகிற அத்தனை பேரும் கனக்கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். முன்னாள் ஹீரோ நிதின் சத்யாவுக்கும் இதில் ஒரு டிபரண்ட் ரோல்.
ஆர்.எச்.விக்ரம் இசையில் பின்னணி இசை அமோகம். ஆனால் படத்தின் வேகத்திற்கு பிரேக் போடுகிற மாதிரி பாடல்களை நுழைத்த எடிட்டர்தான் இசையமைப்பாளருக்கு வில்லன்.
எவ்வளவு கொள்ளையடிச்சாலும், நிம்மதிதான் முக்கியம் என்று முடிவெடுக்க விட்டதற்காகவே அறிமுக இயக்குனர் பெரோசை பாராட்டலாம்.
மேக்கிங் பாதி, மெட்ரீயல் மீதி என்று மேஜிக் பண்ணிய வகையில் ‘ஃபெஸ்டிவெல்’ டைரக்டர் ஆகியிருக்கிறார் பெரோஸ்.
சிசேரியன் அதிகரிப்பு – மத்திய அரசு அதிரடி!
July 14, 2017நம் நாட்டில் சிசேரியன் மூலமாக பிரசவம் செய்வது 15% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில்,...
சிசேரியன் செய்துகொள்வதில், கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களே முன்னிலையில் உள்ளன. திருமணத்தை 30 வயது வரை தள்ளிப்போடுவது அல்லது ஒருவேளை திருமணம் முடிந்தாலும், குழந்தை பெறுவதை 30 வயது வரை தள்ளிப்போடுவது போன்றவற்றால், பெண்களின் இடுப்பு எலும்பு வளர்ச்சியில் பெரும் பாதிப்பு நிகழ்கிறது. இதனால், சிசேரியன் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. உரிய காலத்தில் திருமணம் செய்வதே இதற்கான தீர்வாக இருக்க முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருந்தது. இந்நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசின் சுகாதார திட்டத்தில் அங்கீகாரம் பெற தனியார் மருத்துவமனைகள் தாங்கள் நடத்திய சிசேரியன் பிரசவ எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது பற்றி மத்திய அரசு சுகாதார திட்ட அதிகாரிகள், “மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலஅமைச்சகத்தின் கீழ் மத்திய அரசின் சுகாதார திட்டம் செயல்படுகிறது. இதன் அங்கீகாரம் பெற சிசேரியன் பிரசவ எண்ணிக்கையை மருத்துவமனைகள் தெரிவிக்க வேண்டும். புதிய செயல்பாட்டின் கீழ் ஒருமாதத்தில் இதை தெரிவிக்க வேண்டும். அரசு மற்றும் மருத்துவமனைகளின் புதிய உடன்பாடுபடி இதை தெரிவிக்காவிட்டால் அங்கீகாரத்தை கைவிடுவது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதுள்ள குறிப்பாணையின் கீழ் இந்த தகவலை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மருத்துவமனைகளையும் கேட்டுள்ளோம். புதிய பட்டியல் செயல்முறை தொடங்கும்போது இது கட்டாயமாக்கப்படும். இந்த நடவடிக்கை மூலம் சிசேரியன் பிரசவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்று அரசு விரும்புகிறது. பிரசவத்துக்கு மருத்துவமனையை பெற்றோர் தேர்ந்தெடுக்க இது உதவும்”என்று கூறினர்.
அதாவது அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுப்பதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாக பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். இது போன்ற சிசேரியன் பிரசவம் 10 முதல் 15 சதவீதம்தான் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்து உள்ளது. ஆனால் தெலுங்கானா நகரப்பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 74.8 சதவீதம் இருக்கிறது. தமிழகத்தில் 58 சதவீதமும் கேரளாவில் 41 சதவீதமும் இருக்கிறது என்று சென்னையை அடிப்படையாக கொண்ட பொது சுகாதார அமைப்பு ஒன்று தெரிவித்து இருக்கிறது.
அமெரிக்காவில் இது போன்ற பிரசவங்கள் 20 சதவீதம், இங்கிலாந்தில் 24 சதவீதம், பின்லாந்தில் 16 சதவீதம் என்ற விகிதத்தில் இருக்கிறது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகாகாந்தி 2 மாதத்திற்கு முன் இதுபற்றி சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். சுகப்பிரசவத்திற்கு பதிலாக இது போன்ற சிசேரியன் தேவையில்லாதது என்றும் மேனகா காந்தி குறிப்பிட்டு இருந்தார்.கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் மெயில் அனுப்பி இருந்தார்.
குறிப்பாக தீவிர சிக்கல் இல்லாத நிலையிலும் எனக்கு சிசேரியன் செய்து குழந்தையை எடுத்தார்கள். நான் சுகப்பிரவத்துக்கே ஆசைப்பட்டேன். நான் தவறாக வழிநடத்தப்பட்டேன் என்று பாதிக்கப்பட்ட ஒரு பெண் மத்திய அமைச்சர் மேனகாகாந்திக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். அது மட்டுமின்றி சிசேரியன் அறுவை சிகிச்சை மிகுந்த ஆபத்தானது என்றும் பெண்களுக்கு மன அழுத்தம் மற்றும் குறைந்த அளவு தாய்ப்பால் சுரக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது நாட்டில் 1000 தனியார் மருத்துவமனைகள் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வு மையங்கள் மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..
அரசியல் தலைவர்களின் ஒழுக்கத்தை வெளிப்படுத்த வரும் ‘ சிவா மனசுல புஷ்பா’
July 14, 2017ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகி கதை எழுதி, இயக்கி தயாரித்து வரும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’. இது முழுக்க முழுக்க அரசியல் படம். சம...
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழா சென்னை, தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. படத்தின் போஸ்டரை நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே கே ரித்திஷ் வெளியிட அதை தயாரிப்பாளர் ஜே எஸ் கே பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே ராஜன் உடனிருந்தனர்.
பின்னர் இப் படத்தைப் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இயக்குநரும் ஹீரோவுமான வாராகி , “பல அரசியல் சர்ச்சைகளை நிச்சயம் இப்படம் உருவாக்கும். ஒரு கட்சியின் ஆண் பிரமுகருக்கும் இன்னொரு கட்சியின் பெண் பிரமுகருக்கும் உள்ள உறவை சொல்லும் கதைக் கருவைக் கொண்ட படம் இது .அந்த ஆண் பிரமுகருக்கு ஒரு மனைவியும் பெண் பிரமுகருக்கு ஒரு கணவரும் உண்டு என்ற ரீதியில் கதை போகும் அரசியல் சர்ச்சைகளை நிச்சயம் இப்படம் உருவாக்கும். காரணம் கதை அப்படி காமராஜர், கக்கன் போன்ற உன்னதமான தலைவர்களை கொண்டிருந்த நாடு இது ஆனால் இன்று ஒழுக்கம் குறைந்து விட்டது என்பதை சொல்லும் படம் இது .
மூன்று நாயகர்களிடம் இக்கதையை கொண்டு சென்றேன். யாரும் இதில் துணிந்து நடிக்க மறுத்தார்கள். ஆகவே, இப்படத்தில் நானே நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு அரசியல்வாதி என்றாலே நல்லவனாக இருக்க வேண்டும் இப்போதைய காலகட்டத்தில் அப்படி ஒருவரை பார்ப்பது அரிதாகிறது. . இன்னும் இரண்டு மாதத்தில் இப்படத்தினை திரைக்கு கொண்டு வர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்,” என்று தெரிவித்தார்.
சிவகார்த்திகேயன் வண்டியில் இருக்கும் ஸ்டிக்கர் யார் தெரியுமா? வெளிவந்த தகவல்
July 13, 2017சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வேலைக்காரன் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதில் சிவகார...
இதில் சிவகார்த்திகேயன் குப்பத்து இளைஞராக நடிக்கின்றார், இவர் நயன்தாராவை வண்டியில் வைத்து அழைத்து செல்வது போல் புகைப்படம் உள்ளது.
இதில் பைக்கில் காசி குப்பம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது, அதன் அருகிலேயே பிரகாஷ்ராஜின் புகைப்படமும் ஒட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிரகாஷ்ராஜ் இப்படத்தில் ஒரு அரசியல் தலைவராக நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பிக்பாஸ் விஷயத்தில் கமல் அடித்த பல்டி- மாற்றி பேசினாரா?
July 13, 2017பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எழுந்து வரும் சர்ச்சைகளுக்காக கமல்ஹாசன் நேற்று பத்த...
அப்போது ஒரு கேள்விக்கு கமல் ‘அடுத்த வீட்டில் நடப்பதை காட்டி தான், நம் வீட்டு பிள்ளைகளை திருத்த முடியும்’ என்பது போல் பதில் அளித்தார்.
ஆனால், ஒரு சில வருடங்களுக்கு முன் இதே கமல் ‘என் வீட்டு பாத்ரூமில் நடப்பதை நீங்கள் எட்டிப்பார்க்காதீர்கள்’ என கூறினார்.
இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கமல் பல்டி அடித்துவிட்டாரே என சமூக வலைத்தளங்களில் ஒரு பேச்சு எழுந்துள்ளது.
மேலும், அதற்கு அவரே விளக்கம் தரும் வகையில் ‘அவர்கள் ஒப்பந்தம் போட்டு இங்கு வந்துள்ளார்கள், என் கருத்து அதில் உடன்படாது’ என்றும் கூறியுள்ளார்.
பிக் பாஸான என்னை அரெஸ்ட் செய்யப் போறாங்களா? – கமல் ஆவேசம்
July 13, 2017உலக நாயகனான நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையில் காம்பியராக பொறுபேற்று நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி, சென்ன...
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கமல் பிக்பாஸ் சர்ச்சை குறித்து கூறுகையில், “ அவர்கள் தன்னை சிறையில் போட்டுப்பார்க்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களும் என் ரசிகர்கள்தான் என்றார். அதே சமயத்தில் தன்னை கைது செய்யச் சொல்லும் கூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், கைது செய்வோம் என்றால் அது நடக்கட்டும். சட்டம் என்னைப் பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் நடந்த பேட்டி விவரம் இதோ:
பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணணும்.. உங்களை அரெஸ்ட் பண்ணணும்னு சிலர் வழக்கு தொடர்ந்திருக்காங்களே?”
”நீதிமன்றத்தை நானும் நம்புகிறேன். மற்றபடி 11 வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒளிபரப்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இவர்களுக்கு இந்தி புரியாததால் தெரிந்திருக்காது. கன்னடத்திலும் வந்திருக்கு. அதுவும் தெரியாது. ஆனா கலாசாரம் மட்டும் தெரியும். தேசத்தைத் தெரிந்தவர்களுக்கு தேசத்தின் கலாசாரமும் தெரிய வேண்டும். தசாவதாரம் எடுத்தால் கொண்டாடுவார்கள். விஸ்வரூபம் எடுத்தால் பிடிக்காது. இவர்களுக்குப் பயந்து கொண்டு இருக்க முடியாது. எனக்கு எல்லா ரசிகர்களும் வேண்டும். இவர்களும் ரசிகர்கள்தான்,என்னை சிறையில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிற ரசிகர்கள்!
”இந்து மக்கள் கட்சி உங்களைக் குறிவைக்கிறார்களா.. அல்லது விஜய். டிவியைக் குறிவைக்கிறார்களா?”
“இந்து மக்கள்… அப்படிங்கும்போதே காரணம் நான்தான். என் சட்டைக்கலர். தேவையில்லாம அவர்களையும் வம்புக்கு இழுத்து நிக்க விரும்பல. ஆனால் அது விஜய் டிவியைக் குறிவைத்திருந்தால் அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!”
”ஜி.எஸ்.டி வரும்னு செய்திகள் வர்றப்ப ‘ஜி.எஸ்.டி வந்தால் நான் சினிமாவை விட்டு வெளியேறுவேன். ஜி.எஸ்.டி கட்டமாட்டேன் என்று சொல்லியிருந்தீர்களே…”
“இல்லல்ல. எல்லாமே தப்பா ‘Quote’ பண்றீங்க. அமைச்சரோட பேசற அளவுக்கு வம்புல மாட்டிவிடறீங்க. இது என்னுடைய அரசு. முகம் பிடிக்காம இருக்கலாம். அவங்க உடுப்பு பிடிக்காம இருக்கலாம். ஆனா நான் உருவாக்கின அரசு. ‘நான் கட்டபொம்மன் அல்ல. இது ஈஸ்ட் இண்டியா கம்பெனி அல்ல’ன்னு சொன்னத, ‘நான் கட்டபொம்மன் அல்ல.. இது ஈஸ்ட் இண்டியா கம்பெனி’னு மாத்திட்டாங்க. குற்றம் சொல்லல. என் பேச்சு புரியாம இருக்கலாம்.
ஜி.எஸ்.டியக் குறைக்கணும்னு கேட்டுகிட்டோம். குறைச்சாங்க. குறைச்சதுக்காக நன்றி சொல்லாம இருக்க முடியாது. 28ல இருந்து 18க்கு குறைச்சதுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கோம். ஆனா அது போதாதுனும் சொல்லணும். இன்னமும் இது பரிசீலனைக்கு உரிய விஷயம்தான். என் அரசப்பாத்து நான் கோவிச்சுக்குவேன். அது எந்த அரசாக இருந்தாலும்!
”நீங்கள் உங்கள் கருத்துகளை அடிக்கடி வலியுறுத்திப் பொதுவெளியில் பேசுவதால், உங்களைக் குறிவைத்தே விமர்சிக்கிறார்கள், வழக்கு தொடுக்கிறார்கள் என்று எண்ணுகிறீர்களா?”
“37 வருஷமா.. அதாவது என்னை நோக்கி ஒரு கேமரா திரும்பும்னு நான் நம்பினதுல இருந்து நான் என் கருத்தைப் பேசிட்டுதான் இருக்கேன். ‘சட்டம் என் கையில்’ படத்துல முத்தக்காட்சில நடிச்ச கமல்ஹாசன் சீர்கெடுக்காத கலாசாரம், இப்ப பிக் பாஸுல கெட்டுப்போகுதுன்னா, காலதாமதமாக என் கைதை அவர்கள் கோருகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்!”
”பிக் பாஸ் நிகழ்ச்சி எந்த வகைல சமூகத்துக்கும், கலாசாரத்துக்கும் தேவையான ஒண்ணு?”
“கிரிக்கெட் எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுக்குத் தேவையான ஒன்று. மேலும் அடுத்த வீட்ல புருஷன் பொண்டாட்டியப் அடிக்கறதப்பார்த்தா ‘இந்த மாதிரிலாம் பண்ணிடாத’ம்பாங்க. அப்டி கத்துக்க இது ஏதுவாக இருக்கும்.”
“சேனலை விடுங்கள். சமூக ஊடகங்கள்ல உங்களுக்காகத்தான் நிகழ்ச்சியைப் பார்ப்பதாக, நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்றே பலரும் கருத்து தெரிவிக்கிறார்களே..!”
“நம்பும் மக்களுக்கு நான் நல்ல விருந்தளிக்க கடமைப்பட்டிருக்கிறேன். நம்பாதவர்கள் கோவத்தின்பேரிலாவது இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் நல்லதுதான்.. பார்க்கட்டும்!”
“விஸ்வரூபம் வந்தப்ப DTHல ஒளிபரப்பணும்னப்ப திரைத்துறையினர் எதிர்த்தாங்க. இப்ப ஜி.எஸ்.டி பிரச்னையப்ப சிலர் இனிமே DTHலதான் ஒளிபரப்பணும்னு சொல்றாங்களே?”
“இந்த சுவருக்கு அறிவிருந்தால் புரிந்து கொண்டிருக்கும். இந்தச் சுவர் நான் இதுபற்றிப் பலமுறை கேட்டிருக்கு. அவர்கள் தாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தப்படுவேன்.”
“பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் ‘சேரி பிஹேவியர்’ என்று சொன்னதுக்கு பரவலாகப் பலர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களே?”
“காயத்ரிக்கு நான் திரைக்கதை எழுதிக்கொடுத்திருந்தால், அது என் பொறுப்பு. அதற்கு மன்னிப்பு கேட்கலாம். தவிர, அங்க எப்படி சென்சார் பண்ண முடியும்? நான் வாழும் சொசைட்டில அதவிட மோசமான வார்த்தைகள் பேசிட்டுதான் இருக்காங்க. சாதினு பேசறாங்க. அதையே நீக்க முடியல.’’
“நீங்கள்கூட கஞ்சா கருப்பிடம் ‘சைவம் சாப்பிடும் உங்களுக்கு கோவம் வரலாமா?’ என்று கேட்டீர்கள். அப்படியானால் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு கோவம் அதிகம் வருமா?”
“மற்ற எல்லா மொழிகளிலும் சைவம் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. தமிழில் மட்டுமே அது மதத்தின் பெயரால் உலவுகிறது. அசைவம் என்றால் ஒரு மதமாகப் பார்க்கப்படுகிறது. மற்றபடி இது வரலாற்று ரீதியாக, மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.”
“கேளிக்கை வரி இல்லாத படங்களுக்குக் கூட மக்களிடம் கேளிக்கை வரி வசூலிக்கிறார்களே.. அப்ப நீங்க திரைத்துறையை எதிர்த்துக் குரல் எழுப்புவீர்களா?
“மக்களாகிய நீங்கள் யோசியுங்கள். நாங்கள் செய்யும் தொழில் எவ்வளவு சிரமம் என்று உங்களுக்குத் தெரியும். கருப்புக்கலரோ, செவப்புக்கலரோ கலந்திருக்கற சோடாக்கு குடுக்கற மரியாதைய விட என் சினிமாவுக்கு விலை வடிவில் நிர்ணயிக்கப்படும்போது எனக்குக் கோபம்தான் வரும். ஏன்னா அரைமணிநேரத்துக்கு மேல அந்த சோடாவை வைத்துக் குடித்தால் போரடித்துவிடும். அதன் காட்டம் குறையும். நாங்க ரெண்டரை மணிநேரம் தாக்குப்பிடிக்கறோமே.”
“பிக் பாஸ் மூலமா என்ன கருத்தைச் சொல்ல வர்றீங்க?”
“கூடி வாழ்தல். உளவியல் மாற்றங்கள் நிகழும். கே.பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்றோர் பணமா பாசமா, பூவா தலையா, எதிர்நீச்சல் மாதிரியான படங்களில் கூட்டுக்குடும்பத்தில், ஒரே வாழிடத்தில் நடக்கும் சச்சரவுகளைப் பற்றிப் பேசினார்கள். அதுதான் பிக் பாஸ். அதில் பாலசந்தர் என்ற ஒருவர் எழுதுகிறார். இதில் அவங்கவங்க எழுதிக்கறாங்க.”
“கேளிக்கை வரி சம்பந்தமா தமிழக அரசுக்கு உங்க வேண்டுகோள் என்ன?”
“சினிமாவை நசுக்கும் எந்தவிதமான வரியையும் விதிக்காதீர்கள். மேசைக்கடியில் நடக்கும் எந்த வியாபாரத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்!”
“’சத்யமேவ ஜெயதே’ மாதிரியான நிகழ்ச்சியை நீங்க பண்ணிருந்தா இந்த மாதிரி கேள்விகள், எதிர்ப்புகள் வந்திருக்காதே…?!”
“நான் என் லைஃப்லயே சத்யமேவ ஜெயதே’வப் பண்றேன். காசு வாங்காம. 37 வருஷமா நற்பணிமூலமா அதான் பண்றேன். பிடிக்காதுனு ஹேராம், விருமாண்டிலாம் எடுக்காம இருக்க முடியாதே? பிக் பாஸ் ஹவுஸ்ல இருக்கற பலருக்கு தமிழ் சரியா பேசவராது. தமிழ்த்தாய் வாழ்த்து தெரியாது. அதெல்லாம் கத்துக்கறாங்க.”
“வையாபுரி மனைவி ‘அவர் ரெண்டு வாரத்துல வந்துடுவார்னு சொல்ற ஆடியோ ஒண்ணு சுத்துதே”
“அவர் சொல்லிட்டுப் போயிருக்கலாம். நான் ரெண்டு வாரத்துல வந்துடுவேன்னு. அதை அவர் மனைவி சொல்றாங்க.”
”உங்கள் நண்பர் ‘சிஸ்டம் சரியில்லை’ என்றார். நீங்கள் ‘சட்டசபைக்கு மறுதேர்தல் வைக்கணும்’னு சொன்னீங்க..”
“ரெண்டும் ஒரே கருத்துதான். ஒரே திசையை நோக்கிச் செல்லும் வெவ்வேறு கருத்து. இன்னொண்ணு, சிஸ்டம் சரியில்லைனு மொதல்ல சொன்னது நான். ஒன்றரை வருஷம் முந்தி சொன்னேன். ரொம்ப நன்றி அவருக்கு.”
“ரஜினி கட்சி தொடங்கினால் உங்கள் நிலைப்பாடு என்ன?”
”நியாயமாக இருந்தால் நல்லது நடக்கும். இல்லையென்றால் என் விமர்சனங்கள் அவருக்கும் பொருந்தும்.”
”தமிழகத்தில் ஊழலும் லஞ்சமும் தலைவிரித்தாடுதுனு நீங்க சொன்னதுக்கு நிதி அமைச்சர் ஜெயக்குமார் ‘கமல்ஹாசன் பொத்தாம்பொதுவாகச் சொல்வதை ஏற்கமுடியாதுனு சொல்லிருக்காரே?”
“ரோடு சரியில்லைனு சொல்றேன். நான் ஒரு ரோடு வழியா கடந்துபோயிருப்பேன், காட்டுன்னா? சரி.. நான் சொல்றேன். எல்லாத்துறையிலயும்.. மறுபடியும் சொல்றேன்.. எல்லாத்துறையிலும்!”
”விளம்பரம், டி.வி நிகழ்ச்சில பங்கேற்கறதுலாம் உங்கள் பணத்தேவைக்கா.. விரும்பி செய்கிறீர்களா?”
“விரும்பித்தான் செய்கிறேன். ஆனால் ‘பணத்துக்காகச் செய்யவில்லை சமூகசேவைக்காகச் செய்கிறேன் என்று சொல்ல நான் அரசியல்வாதி இல்லை. இதுதான் என்னுடைய சம்பாத்தியம். இதிலிருந்துதான் என் வீட்டு வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது.”
“பிக்பாஸ் ஷோவில், உங்கள் கருத்தைச் சொல்ல சேனல் நிர்வாகம் தடையாக இருக்குமா?”
“இல்லை. நான் எடுப்பதுதான் முடிவு.”
“கேரளாவில் ஒரு நடிகர், நடிகை ஒருவர் சம்பந்தப்பட்ட வழக்கில் கைதாகியிருக்கிறாரே.. அது பற்றி..”
“அதில்தான் நீதிக்கு உண்டான மரியாதையாக நான் பார்க்கிறேன்.”
“கேரளாவில் நடிகைகள் தங்கள் பாதுகாப்பிற்காக அணி திரண்டிருக்கிறார்கள். சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“அது என்ன சினிமாவில்? எல்லா இடங்களிலும் பெண்கள் பாதுகாப்பு எனக்கு முக்கியம். ஒரு பெண் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதுதான் இங்கிருக்கும் ஒவ்வொரு ஆணின் கடமை.’’
மண்ணும் சூரியனும் தேவையில்லை... இனி விவசாயம் இப்படித்தானா?
July 13, 2017தண்ணீர் இல்லை... விவசாயம் செய்ய வளமான மண் இல்லை... களத்தில் இறங்கி வேலை செய்ய ஆட்கள் இல்லை... இப்படி ஒவ்வொரு நாளும் விவசாயத்திற்கான சிக்க...
அறைகளில் செய்யப்படும் விவசாயம்
மண்ணும், சூரியனும் தேவையில்லா விவசாயம் !!!
ஒரு பெரிய அறை. ஒன்றன் மேல் ஒன்றாக, அடுக்காக இருக்கும் அலமாரி. ஒவ்வொரு தட்டிலும் செடிகள் நடப்பட்டிருக்கும். ஒவ்வொரு தட்டிற்கும் மேலே, எல்.ஈ.டி. பல்புகள் எரிந்துக் கொண்டிருக்கும். இதுதான் வெர்டிகல் ஃபார்மிங்கின் அடிப்படை. மிகக் குறைந்த அளவிலான தண்ணீர், மண்ணின் அவசியமில்லாமல் விவசாயம் செய்வது இந்த முறையின் சிறப்பம்சம். இதில் இரண்டு வகை இருக்கிறது : ஏரோபோனிக் ( Aeroponic ) மற்றும் ஹைட்ரோபோனிக் ( Hydroponic) .
பொதுவாக ஒரு செடி வளர சூரிய வெளிச்சம், கார்பன் டை ஆக்ஸைட், தண்ணீர், ஆக்ஸிஜன் மற்றும் நியூட்ரிஷன்கள் தேவை. இந்த வெர்டிகல் ஃபார்மிங்கில் சூரிய வெளிச்சத்திற்குப் பதில் எல்.ஈ.டி பல்புகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. மண்ணிற்கு பதில் செடிகள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு வகை துணியில் நடப்படுகின்றன. இதில் ஏரோபோனிக் முறையில் வேர்களுக்குத் தண்ணீர் "ஸ்ப்ரே" ( Spray ) செய்யப்படுகிறது. ஹைட்ரோபோனிக் முறையில் நியூட்ரிஷன் நிறைந்த நீரின் பெட்டியில் வேர்கள் இருக்கின்றன. இந்த இரண்டு வகையிலுமே களத்தில் செய்யப்படும் விவசாய முறையைக் காட்டிலும் அதிகளவிலான தண்ணீரை மிச்சம் செய்ய முடியும். குறிப்பாக, ஏரோபோனிக் முறையில் வழக்கமாகக் களத்தில் உபயோகப்படுத்தப்படும் தண்ணீரில் 95 சதவீதம் வரை மிச்சம் பிடிக்க முடியும்.
இன்றைய தினத்தில் உலகிலிருக்கும் நன்னீர் அசுத்தமாவதற்குக் காரணம் 70 சதவீதம் விவசாயம் என்றுதான் சொல்லப்படுகிறது. அதே போல், உலகிலிருக்கும் நன்னீரில் 70 சதவீதம் விவசாயத்திற்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது. விவசாயம் செய்வதற்கான இடமும் பெருமளவு சுருங்கிப் போய்விட்டது. இந்தப் பிரச்னைகளிலிருந்து மனித இனத்தைக் காக்க மாற்று விவசாய முறைகள் அவசியப்படுகின்றன. அதற்கான மிகச் சிறந்த மாற்று முறையாக இந்த வெர்டிகல் ஃபார்மிங் முறை இருக்கிறது.
அறையின் சீதோஷ்ண நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால், வருடம் முழுக்கவே பயிர்களை இதில் விளைவிக்கலாம். மழை, வெள்ளம், வெப்பம், வெயில் போன்ற காரணங்களால் பயிர் சேதமடைவது பெருமளவு தடுக்கப்படும். மேலும், இந்த முறையைப் பெரும்பாலும் வளர்ந்த நகரங்களில்தான் செயல்படுத்துகின்றனர். நகர மக்களின் தேவைகளை அவர்களாகவே பூர்த்தி செய்துகொள்ளும் வழியை இந்த முறை கொடுக்கிறது. மேலும், அடுக்கு வரிசையில் விவசாயம் செய்யப்படுவதால் மண்ணின் பரப்பில் விவசாயம் செய்து கிடைக்கும் மகசூலை விட 130 தடவைகள் அதிகம் கொடுக்கும் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
விவசாயம் - வெர்டிகல் ஃபார்மிங்
1999ல் கொலம்பியா யுனிவர்சிட்டியைச் சேர்ந்த டிக்சன் டெஸ்பொம்மியர் ( Dickson Despommier ) எனும் பேராசிரியர் தன்னுடைய மாணவர்களைக் கொண்டு செய்த ஆராய்ச்சிதான் இன்றைய வெர்டிகல் ஃபார்மிங்கின் அடிப்படையாக அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் சில பள்ளி, கல்லூரிகளின் கேன்டீனில்தான் இந்த முறையைப் பரீட்சித்துப் பார்த்தார்கள். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாகப் பல நிறுவனங்கள் இந்தத் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தன.
லண்டனின் ஒரு பழைய வெடிகுண்டு தொழிற்சாலையில், நியுயார்க்கின் குடோனில், பெல்ஜியத்தின் கார்பெட் தொழிற்சாலையில் , மறுசீரமைக்கப்பட்ட கப்பல் கன்டெய்னரில் எனப் பல இடங்களில் இந்த வெர்டிகல் ஃபார்மிங் முறையைச் செயல்படுத்தியிருக்கிறார்கள். இதில் குறிப்பாக அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் இயங்கும் " ஏரோ ஃபார்ம்ஸ் " ( Aero farms ) எனும் நிறுவனம் இந்தத் தொழில் முறையின் முன்னோடியாக இருக்கிறது.
இப்படிக் கருத்தியியல் ரீதியாக ஒரு சிறந்த முறையாக அறியப்பட்டாலும், இதில் நிறைய சிக்கல்கள் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, இதில் மிகச் சில வகையான பயிர்களை மட்டுமே விளைவிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இந்த விவசாய முறைக்குச் செலவும் அதிகம். நிலத்தில் செய்யும் போது, சூரிய வெளிச்சம் நமக்கு இலவசமாக கிடைக்கிறது. இங்கு வெளிச்சத்தை நாம் உருவாக்குகிறோம். இது இயற்கைக்கு எதிரான செயலாக இருக்கிறது . ரசாயனங்கள் கலக்காமல் இயற்கை முறையில்தான் இந்த விவசாயம் செய்யப்படுகிறது என்றாலும் கூட, எல்.ஈ.டி விளக்கு வெளிச்சத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு உயிர் வாழும் இந்தச் செடிகள் வீரியமிக்கவையாக வளருமா? என்ற கேள்வியும் எழுகிறது.
எதுவாக இருந்தாலும், 2050ல் உலக மக்கள் தொகை ஆயிரம் கோடியை எட்டும். அப்போது மிகப் பெரிய உணவுப் பஞ்சம் ஏற்படும். அத்தனைப் பெரிய மக்கள் தொகைக்கு, உணவளிக்கக் கூடிய ஒரே மாற்று வழி " வெர்டிகல் ஃபார்மிங்" தான் என்று உறுதியாக சொல்கிறார்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்போர்.
கண்ட மாடுகளுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்ல! கமல் ஆவேசம்!
July 13, 2017கூடங்குளம், கதிராமங்கலம், நெடுவாசல் என்று எந்த ஆபத்துக்கும் வராத சந்து மக்கள் கட்சி, சினிமாக்காரர்கள் தும்மினால் கூட போட்டது போட்டபடி ஓடி வ...
இருந்தாலும், ஒருவித ‘பப்ளிசிடி ஸ்டன்ட்’ இது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். இந்த விஷயம் மக்களுக்கு தெரியும் என்பதே தெரியாத இந்த மக்குகளுக்கு நேற்றும் கொலகுத்து. இவர்களின் போராட்டத்திற்கு சின்னதாக அசைந்து கொடுத்தார் கமல். (ஒருவேளை விஜய் டிவிக்கு பப்ளிசிடியாக இருக்கும் என்று நினைத்திருக்கலாம்)
நேற்றிரவு எட்டரை மணி சுமாருக்கு மீடியாக்களை கமல் அழைக்க, மற்ற சேனல்களின் வேன்கள் கூட நேரடி ஒளிபரப்புக்கு அலைபாய்ந்தன. முண்டியடித்துக் கொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதுவரை இல்லாத கோபத்துடன் பதிலளித்தார் கமல். எல்லா கேள்விகளையும் துணிச்சலாக எதிர்கொண்டது அவரது அறிவையும் ஆற்றலையும் ஒருசேர வெளிப்படுத்த… ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் அவர் சொன்ன பதில் செருப்படி.
சந்து மக்கள் கட்சி குறித்த கேள்விதான் அது. “ஆராய்ச்சி மணியை யார் வேண்டுமானாலும் அடிக்கலாம். ஆனால், கன்றை இழந்த மாட்டுக்குதான் பதில் சொல்ல வேண்டும். கண்ட மாடுகளுக்கும் அல்ல” என்று யாருமே எதிர்பார்க்காத பதிலை கூறி பதற விட்டார் கமல். இவர்களை மாடு என்று திட்ட வேண்டும் என்று கமல் முடிவு செய்துவிட்டதாகவே தெரிகிறது. ஏன்?
பொதுவாகவே சங்க காலத்தில் பசு தன் கன்றின் மரணத்திற்காக நீதி கேட்ட வரலாறை ஒப்பிக்கும் தமிழறிஞர்கள், ‘கன்றை இழந்த பசு’ என்றுதான் குறிப்பிடுவார்கள். ‘கன்றை இழந்த மாடு’ என்று குறிப்பிட்டதேயில்லை. நேற்று கமல் வித்தியாசமாக உச்சரித்ததன் மூலம், அவர் எவ்வளவு பெரிய புத்திசாலி என்பதை நிரூபித்தார்.
சந்து மக்கள் கட்சி இனிமேலாவது இதுபோன்ற அற்ப விஷயங்களில் கவனம் செலுத்தாமல், கதிராமங்கலம் பக்கம் போய் சாகும் வரை தண்ணி குடிக்காமலிருக்கலாம்!
தனி சமையலறை; தனி ஃபிளாட்; 2 கோடி லஞ்சம்! - சசிகலாவை சிக்க வைத்த சிறை சந்திப்புகள்
July 13, 2017சொத்துக் குவிப்பு வழக்கின் சீராய்வு மனு மீது மிகுந்த நம்பிக்கையில் இருந்த சசிகலாவுக்கு, கூடுதல் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார் கர்நாடக சி...
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை குறித்து பல்வேறு தகவல்கள் வெளி உலகில் வலம் வருகின்றன. முதல்வராக இருந்த ஜெயலலிதா, இங்கு அடைபட்டிருந்தபோது ஏ.சி உள்பட பல வசதிகள் செய்துகொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சுரங்க முறைகேடு வழக்கில், ரெட்டி சகோதரர்கள் சிறைபட்டிருந்தபோது சர்வசாதாரணமாக வெளியில் சென்று வந்தனர் என்ற செய்தியும் வெளியானது. இந்நிலையில், கர்நாடக சிறைத்துறையின் டி.ஐ.ஜி ரூபா நடத்திய திடீர் ஆய்வு சசிகலா உறவுகளை நிலைகுலைய வைத்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய சிறைத்துறை அதிகாரி ஒருவர், “சிறைக்கு வந்த நாள் முதலாக, சர்க்கரை நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார் சசிகலா. அவருடன் அடைக்கப்பட்ட இளவரசிக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டது. சிறையில் பலமுறை மயங்கி விழுந்தார்.
அவருக்குத் தேவையான மருந்துகளை விவேக் கொண்டு வந்து கொடுப்பார். இதுதவிர, வாரத்தில் மூன்று முறை வழக்கறிஞர்கள் சசிகலாவை சந்தித்துப் பேசுவது வழக்கம். சிறைக்கு வந்த மறுநாளே, ‘எங்களுக்குத் தேவையானதை நாங்கள் சமைத்துக் கொள்கிறோம். அதற்கேற்ற ஏற்பாடுகளைச் செய்து கொடுங்கள்' எனக் கேட்டார் சசிகலா. அவருடைய கோரிக்கையை சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தோம். அவர்களோ, ‘நாளொன்றுக்கு சிறைக்கு வரும் கடிதங்களில் பெரும்பாலானவை சசிகலா பெயரில் வருகிறது. அந்தக் கடிதங்களை எல்லாம் கர்நாடக தமிழர்கள்தான் எழுதுகிறார்கள். ஜெயலலிதா மரணம் அவர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குக் காரணம், சசிகலா குடும்பம்தான் என அவர்கள் நம்புகின்றனர்.
இந்த நேரத்தில் அவர்களுக்கு நாம் உதவும் தகவல் தெரிந்தால், வெளியில் தேவையற்ற கெட்ட பெயர் ஏற்படும். அரசின் கடும் நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும்' என உறுதியாகக் கூறிவிட்டனர். சிறை அமைந்திருக்கும் பகுதிக்கு சில கிலோமீட்டர் தொலைவில் அப்பார்ட்மெண்ட் ஒன்றையும் வாடகைக்கு எடுத்திருக்கிறார் விவேக். பெங்களூரு வரும்போதெல்லாம் அங்குதான் தங்குவார். இந்த வீட்டில் இருந்துதான் சசிகலாவுக்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் சென்று சேர்ந்தன. சிறைத்துறைக்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கையான ஒன்றுதான். கடந்த பத்து நாள்களுக்கு முன்பு சிறைத்துறை டி.ஐ.ஜியாக பெண் அதிகாரி ரூபா பதவியேற்றார். அவர் வந்த பிறகுதான் எங்களுக்கு அதிக சிக்கல்கள் ஏற்பட்டன" என விவரித்தவர், " கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர் ஒருவர், சிறைத்துறை அதிகாரிகளுக்கு மிகவும் நெருக்கம். சசிகலாவுக்குத் தேவையான வசதிகளை இந்த நபர்தான் செய்துகொடுத்தார். பெங்களூருவுக்குப் பக்கத்திலேயே இருப்பதால், என்ன தேவையென்றாலும் இந்த நபரைத்தான் தொடர்பு கொள்கின்றனர். ‘இப்படியொரு பதவியில் இருந்துகொண்டு சிறைக்கு வரலாமா?' என பன்னீர்செல்வம் அணியினர், இவரைப் பற்றி விமர்சனம் செய்தனர்.
ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், சிறை அதிகாரிகள் உதவியோடு சசிகலாவுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுத்தார். டி.ஐ.ஜி ரூபா இதைப் பற்றி விரிவாக விசாரித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத நேரத்தில் அதிரடியாக ரெய்டு நடத்தினார். அப்போதுதான் தனி சமையல் அறை விவகாரம் வெளியில் தெரிந்தது. அவரது குடும்பத்தாரோடு தொடர்புகொள்ள, செல்போன் பயன்படுத்துகிறாரா என்றும் தீவிரமாக சோதனை செய்தார் அதிகாரி. என்னென்ன பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார். இப்படியொரு ரெய்டு நடந்த விவகாரம், டி.ஜி.பி சத்திய நாராயண ராவுக்குத் தெரியாது. விளக்கம் கேட்டு அவர் அனுப்பிய நோட்டீஸுக்கு ரூபா அளித்த பதில்தான், பெரும் விவாதத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. டி.ஜி.பிக்கு அவர் அனுப்பிய அறிக்கையின் முழு விபரங்களும் வெளியாகிவிட்டன. சசிகலாவுக்கு உதவி செய்த வகையில் பல கோடி ரூபாய்களை அதிகாரிகள் லஞ்சமாகப் பெற்றுள்ளனர். சிறை நன்னடத்தை விதிகளுக்கு மாறாக செயல்பட்ட குற்றத்துக்காக, சசிகலா மீது நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. இந்த விவகாரத்தில், டி.ஜி.பி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு அதிகம்" என்றார் விரிவாக.
" இந்த விவகாரத்தின் பின்னணியில் மத்திய அரசின் அழுத்தமும் இருக்கிறது. சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் வசதிகள் குறித்தும் அவரை சந்தித்துவிட்டுச் செல்பவர்கள் பேசுகின்ற விஷயங்கள் குறித்தும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் குறிப்பெடுத்து வந்தனர். கூடவே, கர்நாடக அரசின் உதவியோடு சசிகலாவுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் குறித்தும் கண்காணித்தனர். ‘தமிழக காங்கிரஸ் பிரமுகர் மூலமாக, கர்நாடக காங்கிரஸ் அரசில் உள்ளவர்களுக்கு சில வேண்டுகோள்கள் சென்றுள்ளன. அதன்படியே சசிகலாவுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன' என மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளனர். தற்போது நடந்த ரெய்டைத் தொடர்ந்து, பெண் அதிகாரி அனுப்பிய பதிலும் வெளியில் கசிந்துவிட்டது. இதன்மூலம், குற்றவாளிக்கு உதவிய காங்கிரஸ் அரசு என்ற கெட்ட பெயரும் ஏற்பட்டுவிட்டது. கர்நாடகாவில் உள்ள ஜெயலலிதா விசுவாசிகள் மத்தியில் கூடுதல் கொந்தளிப்பையும் ஏற்படுத்திவிட்டது. இந்த நடவடிக்கையின் மூலம், வேறு சிறைக்கு மாறுவது உள்பட சசிகலாவின் எந்த கோரிக்கையும் எளிதில் நிறைவேற வாய்ப்பில்லை. இனி பார்வையாளர் வருகையும் கட்டுப்படுத்தப்படும்" என்கின்றனர் கர்நாடக அ.தி.மு.கவினர்.
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக தினகரன் விதித்த கெடுவுக்கும் சசிகலா குடும்பத்தினரின் ஆட்டங்களுக்கும் மத்திய உளவுத்துறை வைத்த அதிரடிதான் இந்தச் சோதனை. சசிகலா சிறையில் இருக்கும் வரையில், தங்களுக்குத் தேவையானதை தமிழகத்தில் சாதித்துக் கொள்ள முடியும் என உறுதியாக நம்புகிறது டெல்லி பா.ஜ.க.
Blog Archive
-
▼
2017
(60)
-
▼
July
(60)
-
▼
Jul 27
(9)
- ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்ப...
- கதை சொல்லித் தப்பிக்கும் 'வேதாளம்' விஜய் சேதுபதி.....
- கெத்தாக மீசை முறுக்கி இருக்கிறாரா ஆதி? - ‛மீசைய மு...
- ''இந்தியாவில் போர் மூண்டால் 10 நாளில் வெடிமருந்து ...
- 15 -ல் தொப்பையை குறைக்கலாம்.!!!!!!
- பிக் பாஸ் ஓவியாவின் உணர்வுகளைப் புரிஞ்சுக்கிறீங்க....
- அழுத்தமான திரைக்கதையை நம்பி களமிறங்கும் அர்ஜுனின் ...
- பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜுலி வெளியேற்றப்பட்டாரா? எ...
- இன்னும் நான் அதை விஜய் சாரிடமே சொல்லவில்லை- அடுத்த...
-
►
Jul 18
(6)
- பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?
- என் பேரை டேமேஜ் பண்ணிட்டாங்க! பிக் பாஸில் சினேகன்
- 'தமிழ் தலைவாஸ்’ பிராண்டு அம்பாசிடரானார் கமல்!
- கருச்சிதைவிற்கு பின்னர் மீண்டும் கர்ப்பம் அடைய வழி...
- இந்த பிக் பாஸ் கமல் பிளானை நம்ம அரசியல்வாதிங்களே ப...
- ஷாப்பிங் மால்களில் ‘ஹஸ்பண்ட் ரெஸ்ட் ரூம்’ – சீனா அ...
-
►
Jul 17
(8)
- வாலிபக் கவிஞர் வாலி – காலமான நாளின்று!
- மோடி கவர்மெண்ட் மீதான நம்பிக்கை நம்மாள்கிட்டே எக்க...
- கமல் சொன்னதுலே இன்னா தப்புங்கறேன்? ஸ்டாலின் ரியாக்...
- பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வசதிக...
- தமிழக அரசின் விருதும், மானியமும்! கவரிமான்களும்… க...
- அஜீத்தின் தைரியம் கமலுக்கு இல்லை! உசுப்பிவிடுகிறார...
- நடிகர் கமலுக்கு ஆதரவாக களமிறங்கிய ஓபிஎஸ்
- சட்டப்படி அனுமதியில்லை: கமல் குறித்த கேள்விக்கு நட...
-
►
Jul 13
(6)
- சிவகார்த்திகேயன் வண்டியில் இருக்கும் ஸ்டிக்கர் யார...
- பிக்பாஸ் விஷயத்தில் கமல் அடித்த பல்டி- மாற்றி பேசி...
- பிக் பாஸான என்னை அரெஸ்ட் செய்யப் போறாங்களா? – கமல்...
- மண்ணும் சூரியனும் தேவையில்லை... இனி விவசாயம் இப்பட...
- கண்ட மாடுகளுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்ல! கமல் ...
- தனி சமையலறை; தனி ஃபிளாட்; 2 கோடி லஞ்சம்! - சசிகலாவ...
-
▼
Jul 27
(9)
-
▼
July
(60)